என் மலர்
நீங்கள் தேடியது "பிரம்ம கமலம் பூ"
- கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாவரத்தில் 2 மொட்டுக்கள் வந்தது.
- நள்ளிரவு 2 மணியளவில் பிரம்ம கமலம் மலரின் இதழ்கள் சிறிது சிறிதாக சுருங்கி பின்னர் உதிர்ந்தது.
சீர்காழி:
உத்தரகாண்ட் மாநிலத்தின் மாநில மலராகவும், இமயமலைப் பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் காணப்படும் அதிசய மலராகவும் பிரம்ம கமலம் மலர் உள்ளது.
பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படும் இந்த மலர், இளவேனில் காலத்தில் இரவுநேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய மலராகும். இந்த பூ மலர தொடங்கிய நேரத்தில் இருந்து 2 மணி நேரத்துக்கு பிறகே முழுமையாக மலர்ந்திருக்கும். அதேபோல் அதிகாலைக்குள் உதிர்ந்துவிடும் என்றாலும், இந்த பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் வீசும்.
இந்த மலரின் செடி கள்ளிச்செடி வகையை சேர்ந்தது என கூறப்படுகிறது.
உலக வெப்பநிலை மாறுபாட்டால் அழிந்துவரும் இந்த தாவரத்தை காப்பாற்ற உத்தரகாண்ட் மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த மலர் மலரும்போது அருகிலிருந்து நாம் நினைத்து வேண்டியது வரமாக கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இத்தகைய அதிசய பிரம்ம கமலம் தாவரம் சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மெட்ரிக் பள்ளியில் வளர்க்கப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாவரத்தில் 2 மொட்டுக்கள் வந்தது. இந்தநிலையில் நேற்று இரவு இந்த தாவரத்தில் 2 மலர்கள் பூத்தது. இரவு 11 மணிக்கு மேல் அந்த மொட்டு மலர்ந்து வெண்ணிலவை போல அழகாக காட்சி அளித்தது.
இதுகுறித்து தகவலறிந்த அப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் நள்ளிரவிலும் வந்து பிரம்ம கமலம் மலரை பார்த்து வணங்கி சென்றனர்.
மேலும் அவர்கள் தங்கள் செல்போனில் பிரம்ம கமலம் மலருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து நள்ளிரவு 2 மணியளவில் பிரம்ம கமலம் மலரின் இதழ்கள் சிறிது சிறிதாக சுருங்கி பின்னர் உதிர்ந்தது.
- இரவு, பிரம்ம கமலம் பூத்து குலுங்கியது.
- ஒரே செடியில் 15-க்கும் மேற்பட்ட மலர்கள் பூத்து குலுங்குகிறது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை எஸ்ஆர்ஓ தெருவில் வசித்து வருபவர் ஜெயக்குமார் (வயது52).
இவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறையே பூக்கும் பிரம்ம கமலம் செடி நட்டு வளர்த்து வருகிறார். இரவு, பிரம்ம கமலம் பூத்து குலுங்கியது. ஒரே செடியில் 15-க்கும் மேற்பட்ட மலர்கள் பூத்து குலுங்குகிறது. அதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
- குடும்பத்தினர் வழிபாடு
- கோவில் குருக்களை வரவழைத்து சிறப்பு பூஜை செய்தனர்
ராணிப்பேட்டை:
இமயமலை போன்ற குளிர்ச்சியான மலை பகுதிகளில் மட்டும வருடத்திற்கு ஒரு முறை பூத்து குலுங்குவது பிரம்ம கமலம் பூ படைக்கும் கடவுள் பிரம்மானக்கு உகந்த பூவாக கருதப்படுவதால் பிரம்ம கமலம் என்று அழைக்கப்படுகிறது.
பிரம்ம கமலம் பூ குளிர்காலத்தில் மட்டுமே நள்ளிரவில் பூத்து அதிகாலைக்குள் உதிர்ந்து போகும். அதிக நறுமணத்துடன் ஒரே செடியில் 10-க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும்.
அந்த பூ மலரும் போது வேண்டினால் அது நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த பிரம்ம கமலம் பூ தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படும் அரிய வகை பூ என கூறப்படுகிறது.
இந்நிலையில் வாலாஜாவில், ஆற்காடு தெத்து தெரு பகுதியில் வசித்து வரும் முனிரத்தினம், கிருஷ்ணவேணி தம்பதிகள் வேலூரில் தோட்டக்கலையிலிருந்து நான்கு வருடங்களுக்கு முன் இந்த பிரம்ம கமல பூ செடியை வாங்கி வந்து வீட்டில் பூத்தொட்டியில் வளர்த்து வந்தனர். நேற்று இரவு இரண்டு பூ தொட்டியகளில் திடீரென 6-க்கும் மேற்பட்ட பிரம்ம கமலம் பூக்கள் பூத்துள்ளன.
பூ பூத்ததை கண்ட அவரது குடும்பத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து கோவில் குருக்களை வரவழைத்து பிரம்ம கமல பூக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் கூட்டமாக வந்து பூவை வணங்கி சென்றனர்.
சிவனடியார்களும் தேவாரம், சிவபுராணம், திருவாசகம் என சிவனின் பாடல்களை பாடியவாறு பூவிற்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாரதனை காண்பித்து வழிபட்டனர்.
- சேலம் அழகாபுரம் சிவாய நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி.
- இவர் தனது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் செடி கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.
கருப்பூர்:
சேலம் அழகாபுரம் சிவாய நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி. இவர் தனது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் செடி கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இந்த செடி இரவில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது.
இந்த நிலையில் பிரம்ம கமலம் செடியில் நேற்று இரவு 10 மணி அளவில் பூ பூத்தது. ஒரே செடியில் 12-க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்தன. இதனை அறிந்த அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்து பூவுக்கு தேங்காய், பழம் உடைத்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.
இதுகுறித்து சரஸ்வதி கூறுகையில், பிரம்ம கமலம் பூ அனைத்து கடவுள்களுக்கும் படைக்கும் ஓர் அற்புதமான பூ ஆகும். இதில் சங்கு, சக்கரங்கள் உள்ளது. இதனால் இரவில் மட்டும் பூக்கும் இந்த அதிசய பூவை வணங்கினால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கையாகும் என்றார்.
- அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும்.
- வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், வீடு ஒன்றில் பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளன.
அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும். இதை 'நிஷகாந்தி' என்றும் அழைப்பர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இரவில் பூக்கும் அபூர்வ மலராகும். வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும்.
இந்த மலரானது அமெரிக்காவின், மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்ட பிரம்ம கமலம், பொதுவாக ஜூலை மாதத்தில் பூக்கும். இலங்கையில் இந்த மலரை, 'சொர்க்கத்தின் பூ' என வர்ணிக்கின்றனர்.
இந்து மதத்தில் பிரம்ம கமலம், புனிதமானதாக கருதப்படுகிறது. ஆன்மிக ரீதியிலும் இந்த மலருக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரத்தை சேர்ந்த ஐயப்ப குருசாமி என்பவரின் வீட்டில் பிரம்ம கமலம் செடி உள்ளது. இவரது வீட்டில் உள்ள பிரம்ம கமலம் செடியில் 2 பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளது. நேற்று இரவு, 9 மணியளவில் இப்பூக்கள் மலர்ந்தன.
இதை பார்த்து, அவ்வீட்டினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பூக்கள் மலரும் போது, என்ன வேண்டினாலும் நடக்கும் என்பது ஐதீகம். எனவே அவரது குடும்பத்தினர், பூக்களுக்கு பூஜை செய்து வேண்டி கொண்டனர்.
தகவலறிந்து சுற்றுப்பகுதி மக்கள், வீட்டில் மலர்ந்த பிரம்ம கமலத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்து செல்லுகின்றனர்.
- தென் அமெரிக்காவின் மெக்சிக்கோ காடுகளைக் பிறப்பிடமாக கொண்ட செடி பிரம்ம கமலம் பூ
- இலங்கையில் இது சொர்க்கத்தின் பூ என்றும் ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் பெத்லகேமின் நட்சத்திரம் என்றும் கூறப்படுகிறது.
திருப்பூர் :
பிரம்ம கமலம் எனப்படும் செடியில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இரவில் அபூர்வ வகை மலர் பூக்க கூடிய செடியாகும். இது கள்ளி இனத்தைச் சேர்ந்த செடி. வெண்ணிறம் கொண்ட மலரானது, மூன்றுவிதமான இதழ்களைக் கொண்டு அழகாக இருக்கும். இந்த மலரானது பொதுவாக ஜூலை மாதத்தில் இரவில் மலரும்.
தென் அமெரிக்காவின் மெக்சிக்கோ காடுகளைக் பிறப்பிடமாக கொண்ட இந்த செடி அங்கிருந்து உலகமெங்கும் பரவியுள்ளது. இலங்கையில் இது சொர்க்கத்தின் பூ என்றும் ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் பெத்லகேமின் நட்சத்திரம் என்றும் கூறப்படுகிறது.
இது தமிழ்நாட்டிலும் பரவலாக வளர்கிறது. இது கள்ளி இனத்தைச் சேர்ந்ததால் இதன் தண்டை வெட்டி வைத்தாலே வளரக்கூடிய தன்மை கொண்ட செடியாக உள்ளது. இத்தகைய சிறப்பு கொண்ட பிரம்ம கமலம் பூ திருப்பூர் போயம்பாளையம் அடுத்த கங்காநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வீட்டில் வளர்க்கப்படும் செடியில் பூ பூத்தது. ஒரே செடியில் 8 பூக்கள் பூத்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை இரவில் சில மணி நேரம் மட்டுமே மலரும் என்பதால் தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பலரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.






