search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பியூட்டி பார்லர்"

    • கடந்த 2-ந் தேதி கவி மலர் பியூட்டி பார்லருக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியே சென்றார்.
    • அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கவி மலர் கிடைக்கவில்லை.

    ஈரோடு மாவட்டம்,

    நம்பியூர் எலத்தூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் கேசவன்(37). இவரது மனைவி கவி மலர் (32). சத்தியமங்கலத்தில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 2-ந் தேதி கவி மலர் பியூட்டி பார்லருக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கவி மலர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கேசவன் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கவி மலரை தேடி வருகின்றனா்.

    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஹோட்டலில் மாநில தலைவர் எம்.முனுசாமி தலைமையில் நடைபெற்றது.
    • சங்க நிர்வாகிகள் அனைவரும் மறைந்த சுதந்திர போராட்ட வீரத்தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாதன், டாக்டர் என்.சிவாநத்தம் இருவரது படத்திற்கும் மலரஞ்சலி செலுத்தினர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், இன்று மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஹோட்டலில் மாநில தலைவர் எம்.முனுசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சங்க நிர்வாகிகள் அனைவரும் மறைந்த சுதந்திர போராட்ட வீரத்தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாதன், டாக்டர் என்.சிவாநத்தம் இருவரது படத்திற்கும் மலரஞ்சலி செலுத்தினர்.

    கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக மாநகராட்சி பகுதியில் உள்ள கார்பரேட் சலூன், அழகு நிலையங்களால் ஏற்படும் தொழில் பாதிப்பு, அறநிலையத்துறை கோயிலில் நாதஸ்வரம், மேளம் வாசிப்போரை அரசு ஊழியர்கள் ஆக்குவது, நகராட்சி கடைகளின் வரியை சீறமைப்பது, உள்ளிட்டவை நிறைவேற்றபட்டுள்ளது. சங்கத்திற்கு என புதிய இணையதளம் துவங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. மாநில பொது செயலாளர் கரியப்பா டி.கே.ராஜா, பொருளாளர் எஸ்.நடராஜன், செங்கை, காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் ருக்மாந்தகன், சண்முகம், ராஜீவ்காந்தி உட்பட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • இந்த வண்டிகள் அதிக வேகத்துடன் செல்வதால் பல விபத்துகள் நடைபெறுகிறது.
    • பொதுமக்கள் வந்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் இரவு நேரங்களில் அதிக பாரத்துடன் டாரஸ் லாரிகளில் கல், எம் சான்ட் போன்ற கனிம வளங்கள் பூதப்பாண்டி, திட்டுவிளை, தடிக்காரன்கோணம் சுருளோடு, பொன்மனை, குலசேகரம் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த வண்டிகள் அதிக வேகத்துடன் செல்வதால் பல விபத்துகள் நடைபெறுகிறது.

    நேற்று இரவு அருமனை பகுதியை சேர்ந்த ரெவிகுமார் (வயது 38) என்பவர் பூதப்பாண்டி பகுதியில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். தினமும் குலசேகரம் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் அங்கு சென்று வருவது வழக்கம். நேற்று இரவு கடையை மூடி விட்டு சுருளோடு பகுதியில் வரும்போது நாகர்கோவிலில் இருந்து அதிக கல் பாரத்துடன் கனரக வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டு இருந்தது. இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த ரெவிகுமார் மீது உரசியது. இதில் அவர் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் வந்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    உடனே ரெவிகுமாரை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ரெவிகுமார் கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதங்கோடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் விஜயகுமார் என்பது தெரியவந்தது. தலைமறைவான லாரி டிரைவர் விஜயகுமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×