search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலஸ்தீனர்கள்"

    • காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தல்.
    • உலக நாடுகள் வலியுறுத்தலை ஏற்க மறுக்கும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. 4-வது மாதமாக தொடரும் இந்த தாக்குதலில் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    ஹமாஸ் அமைப்பினர் இன்னும் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவிக்காத நிலையில் போர் நீடித்துக் கொண்டே இருக்கிறது. எங்களது இலக்கை எட்டும் வரை போர் பல மாதங்கள் நீடிக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.

    25105 பேர் உயிரிழந்த நிலையில் 62681 பேர் காயம் அடைந்துள்ளனர். சனிக்கிழமையில் இருந்து தற்போது வரை 178 உடல்கள் காசாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    காசா மீதான தாக்குதலில் இதுவரை 195 வீரர்களை இழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    காசாவில் உள்ள 85 சதவீதம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். காசாவில் மொத்தம் 23 லட்சம் பேர் வசித்து வந்த நிலையில், மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் பட்டினியால் வாடுவதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    அதன்பின் இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    • போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலி.
    • காசாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    அதன்பின் இரண்டு நாட்கள், ஒரு நாள் என மூன்று நாட்கள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. இந்திய நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி மீண்டும் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.

    காசாவில் 23 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் வடக்கு காசாவில் உள்ள பெரும்பாலானோர் தெற்கு காசாவிற்கும், முகாம்களுக்கும் சென்றுவிட்டனர். வடக்கு காசாவின் பெரும்பகுதி வாழத்தகுதியற்ற பகுதி போன்ற காணப்படுவதாக வீடுகள், குடும்பங்களை இழந்த பாலஸ்தீனர்கள் குமுறி வருகின்றனர்.

    இந்த நிலையில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை மேலும்மேலும் அதிகரித்து வருகிறது. வடக்கு காசாவை ஒட்டியுள்ள தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், தாக்குதலை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் எகிப்து எல்லையை ஒட்டியுள்ள தெற்கு காசாவிற்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தி வருகிறது.

    இதனால் இருப்பதற்கு இடமில்லாம் பாலஸ்தீன மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தான பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்கதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    எகிப்து அகதிகளை அனுமதிக்கவில்லை. இதனால் போர்க்களத்தில் தவித்து வரும் நிலை நீடித்து வருகிறது.

    இஸ்ரேல் ராணுவத்தினர் துண்டு பிரசுரங்கள் மூலம் இந்த இடத்தை விட்டு வெளியெறுமாறு தெரிவித்துவிட்டு, இரவு முழுவதும் தாக்குதல் நடத்தினர். குண்டுகள் சத்தம் கேட்டதாக கான் யூனிஸ் நகர வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    இஸ்ரேல் ராணுவம் இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள். குண்டு வீசப்போகிறோம் என்று போனில் தனக்கு தெரிவித்தார்கள். விதவையும், நான்கு குழந்தைகளின் தாயுமான பெண்மணி ஒருவர் கடந்த 7-ந்தேதி வடக்கு காசாவில் இருந்து கான் யூனிஸ் நகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தேன். இதுபோன்ற உத்தரவுகளை காது கொடுத்து கேட்பதில்லை.

    உண்மை என்னவென்றால், காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. வடக்கு பகுதியிலும் மக்களை கொல்கிறார்கள். தெற்கு பகுதியிலும் மக்களை கொல்கிறார் என விரக்தியோடு தெரிவித்தார்.

    இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் ஹமாஸை அதிகாரத்தில் இருந்து ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த பதுங்கு குழிகளை தேடிப்பிடித்து இஸ்ரேல் ராணுவம் அழித்து வருகிறது.

    ×