என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலஸ்தீனர்கள்"

    • இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
    • இதனால் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.

    காசா:

    இஸ்ரேல்-காசா போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து ஒருவேளை உணவுக்கே தவிக்கும் நிலை உருவானது.

    எனவே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் இருதரப்பினருக்கும் இடையே 20 அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும், காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.

    இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனால் காசா மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவதாக பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்தார்.

    இதனையடுத்து காசாவிடம் தற்போது உயிருடன் உள்ள 20 பணய கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைப்பது, காசாவில் நிறுத்தப்பட்டு உள்ள இஸ்ரேல் ராணுவத்தை பின்வாங்குவது, நீண்ட காலமாக இஸ்ரேல் சிறையில் உள்ள 250 பேர் மற்றும் போரின்போது சிறைபிடிக்கப்பட்ட 1,700 பேரை விடுவிப்பது என இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் கூறியதை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், காசாவில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆர்வமுடன் தாயகம் திரும்பி வருகின்றனர். 

    • ஒரு மாதத்திற்கு மேலாக உணவுப் பொருட்கள் செல்ல இஸ்ரேல் தடைவிதித்திருந்தது.
    • உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடைவிதித்தது. இதனால் பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பசியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது.

    இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வந்த முக்கியமான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத்தொடர்நது காசா முனைக்கு உணவுப்பொருட்களை எடுத்துச்செல்ல ஐ.நா-வுக்கு இஸ்ரேல் அனுமதி அளித்தது.

    இதனைத்தொடர்ந்து 77 கனரக வாகனங்களில் (Trucks) உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை ஐ.நா. உலக உணவு திட்டம் சார்பில் கொண்டு செல்லப்பட்டது. குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு முன்னதாகவே பாலஸ்தீனர்கள் டிரக்குகளை வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

    அத்துடன் உணவுப் பொருட்களை முண்டியடித்துச் சென்று அள்ளிச் சென்றனர். 12-க்கும் மேற்பட்ட டிரக்குகளில் உள்ள பொருட்கள் அள்ளிச் சென்றதாக ஐ.நா. தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா 60 நாட்களாக போர் நிறுத்த பரிந்துரையை வழங்கியுள்ளது. இதை ஆய்வு செய்வோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளார். 60 நாட்கள் போர் நிறுத்தம் ஏற்படும் வகையில் அமெரிக்கா பரிந்துரை செய்துள்ளது. அப்போது ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் 58 பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும். உதவிப்பொருட்கள் செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

    • பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் மாலத்தீவிற்கு சுற்றுலா வருகின்றனர்.
    • பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து மாலத்தீவு நடவடிக்கை

    சுற்றுலா என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் தீவுகளில் ஒன்று மாலத்தீவு. பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் மாலத்தீவிற்கு சுற்றுலா வருகின்றனர்.

    முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாலத்தீவில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    வங்காளதேசம், பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக மாலத்தீவும் தங்கள் நாடுகளுக்குள் இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைய தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலி.
    • காசாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    அதன்பின் இரண்டு நாட்கள், ஒரு நாள் என மூன்று நாட்கள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. இந்திய நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி மீண்டும் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.

    காசாவில் 23 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் வடக்கு காசாவில் உள்ள பெரும்பாலானோர் தெற்கு காசாவிற்கும், முகாம்களுக்கும் சென்றுவிட்டனர். வடக்கு காசாவின் பெரும்பகுதி வாழத்தகுதியற்ற பகுதி போன்ற காணப்படுவதாக வீடுகள், குடும்பங்களை இழந்த பாலஸ்தீனர்கள் குமுறி வருகின்றனர்.

    இந்த நிலையில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை மேலும்மேலும் அதிகரித்து வருகிறது. வடக்கு காசாவை ஒட்டியுள்ள தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், தாக்குதலை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் எகிப்து எல்லையை ஒட்டியுள்ள தெற்கு காசாவிற்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தி வருகிறது.

    இதனால் இருப்பதற்கு இடமில்லாம் பாலஸ்தீன மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தான பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்கதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    எகிப்து அகதிகளை அனுமதிக்கவில்லை. இதனால் போர்க்களத்தில் தவித்து வரும் நிலை நீடித்து வருகிறது.

    இஸ்ரேல் ராணுவத்தினர் துண்டு பிரசுரங்கள் மூலம் இந்த இடத்தை விட்டு வெளியெறுமாறு தெரிவித்துவிட்டு, இரவு முழுவதும் தாக்குதல் நடத்தினர். குண்டுகள் சத்தம் கேட்டதாக கான் யூனிஸ் நகர வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    இஸ்ரேல் ராணுவம் இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள். குண்டு வீசப்போகிறோம் என்று போனில் தனக்கு தெரிவித்தார்கள். விதவையும், நான்கு குழந்தைகளின் தாயுமான பெண்மணி ஒருவர் கடந்த 7-ந்தேதி வடக்கு காசாவில் இருந்து கான் யூனிஸ் நகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தேன். இதுபோன்ற உத்தரவுகளை காது கொடுத்து கேட்பதில்லை.

    உண்மை என்னவென்றால், காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. வடக்கு பகுதியிலும் மக்களை கொல்கிறார்கள். தெற்கு பகுதியிலும் மக்களை கொல்கிறார் என விரக்தியோடு தெரிவித்தார்.

    இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் ஹமாஸை அதிகாரத்தில் இருந்து ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த பதுங்கு குழிகளை தேடிப்பிடித்து இஸ்ரேல் ராணுவம் அழித்து வருகிறது.

    • காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தல்.
    • உலக நாடுகள் வலியுறுத்தலை ஏற்க மறுக்கும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. 4-வது மாதமாக தொடரும் இந்த தாக்குதலில் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    ஹமாஸ் அமைப்பினர் இன்னும் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவிக்காத நிலையில் போர் நீடித்துக் கொண்டே இருக்கிறது. எங்களது இலக்கை எட்டும் வரை போர் பல மாதங்கள் நீடிக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.

    25105 பேர் உயிரிழந்த நிலையில் 62681 பேர் காயம் அடைந்துள்ளனர். சனிக்கிழமையில் இருந்து தற்போது வரை 178 உடல்கள் காசாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    காசா மீதான தாக்குதலில் இதுவரை 195 வீரர்களை இழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    காசாவில் உள்ள 85 சதவீதம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். காசாவில் மொத்தம் 23 லட்சம் பேர் வசித்து வந்த நிலையில், மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் பட்டினியால் வாடுவதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    அதன்பின் இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    • ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீனர் தொழிலாளர்களுக்கு இஸ்ரேல் தடை.
    • ஹமாஸ் தாக்குதலுக்கு முன்னதாக 80 ஆயிரம் பாலஸ்தீனர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.

    இஸ்ரேல் நாட்டில் கட்டுமான பணி மற்றும் விவசாயப் பணிகளில் மேற்கு கரை மற்றும் காசா முனையில் உள்ள பாலஸ்தீனர்கள் வேலைக்கு பணியமர்த்தப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது.

    அப்போது பாலஸ்தீன ஊழியர்கள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் அரசு தடைவிதித்தது. இதனால் மற்ற நாடுகளில் இருந்து கட்டுமான பணிக்கு ஆட்களை வரவழைக்க இஸ்ரேல் முயற்சி மேற்கொண்டது.

    அந்த வகையில் இந்தியாவில் இருந்து 16 ஆயிரம் கட்டுமான பணியாளர்கள் இஸ்ரேலில் பணிபுரிந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவை சேர்ந்த ராஜு நிஷாத் (வயது 35) என்பவர் மத்திய இஸ்ரேலில் உள்ள பீர் யாகோவ் என்ற இடத்தில் நடைபெறும் கட்டுமான பணியில் முன்னணி ஊழியராக திகழ்ந்து வருகிறார். அவருடன் ஏராளமான இந்தியர்கள் கட்டுமான உதவி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அடிக்கடி ஏர் ரெய்டு வார்னிங் வரும். அப்போது பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுவோம். எச்சரிக்கை ஒலி நின்றவுடன் நாங்கள் வேலையை மீண்டும் தொடர்வோம் எனக் கூறும் நிஷாத் "இங்கே (இஸ்ரேலில்) பயப்படக் கூடியதற்கு ஒன்றுமில்லை" என சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளார்.

    "பணம் சம்பாதிப்பது அவசியமானது. குடும்பத்தின் வருங்காலத்திற்காக தொடர்ந்து கடுமையாக உழைப்பது முக்கியமானது" என சுரேஷ் கமார் வர்மா என்பவர் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேலில் கட்டுமான தொழிலில் ஈடுபடும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும் என்பதால் ஆயிரக்கணக்கான கி.மீ. கடந்த இஸ்ரேல் செல்வ முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.

    நிஷாத் சுமார் 16 ஆயிரம் பேர்களில் ஒருவர். இன்னும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வர இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

    இஸ்ரேலில் பல தசாப்தங்களாக இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர், ஆயிரக்கணக்கானோர் வயதான இஸ்ரேலியர்களைப் பராமரிக்கும் பராமரிப்பாளர்களாகவும், மற்றவர்கள் வைர வியாபாரிகளாகவும், ஐடி நிபுணர்களாகவும் பணியாற்றுகின்றனர்.

    ஆனால் காசாவில் போர் தீவிரமடைந்ததிலிருந்து, இஸ்ரேலின் கட்டுமானத் துறைக்கும் இந்தியர்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியை ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

    வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பி வைக்கும் வேலை பார்த்து வரும் Dynamic Staffing Services என்ற நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை அனுப்பி வைத்துள்ளார். இஸ்ரேலுக்கு மட்டும் 3500 பேரை அனுப்பி வைத்துள்ளார். இது அவருக்கு புதிய சந்தை எனத் தெரிவித்துள்ளார்.

    ஹமாஸ் தாக்கலுக்கு முன்னதாக இஸ்ரேலில் 80 ஆயிரம் பாலஸ்தீனர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுடன் 26 வெளிநாட்டினரும் பணியாற்றி வந்தனர். தற்போது 30 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்தியா 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது. பொருளாதாரத்தில் விரைவாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா இருக்கும் நிலையில், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முழுநேர வேலை கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

    ×