search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க. பிரமுகர்"

    • லாரி மோதி பா.ஜ.க. பிரமுகர் பலியானார்.
    • மதுரை நோக்கி காரில் சென்றபோது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.



    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் கதிரேசப்பாண்டியன். இவர் பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். நேற்று கதிரேசபாண்டியனும், அவரது மனைவியும் மதுரை நோக்கி காரில் சென்றனர். காரை கதிரேசபாண்டியன் ஓட்டி சென்றார். அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் சென்றபோது தேனியில் இருந்து ராஜ பாளையம் நோக்கி வந்த லாரி மீது, கார் நேருக்கு நேர் மோதியது.

    இதில் கதிரேசப் பாண்டியன், அவரது மனைவி ராமலட்சுமி இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் கதிரேசபாண்டியன் இறந்துவிட்டார். அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டை நகராட்சியில் பா.ஜ.க. பிரமுகர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    • நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    தி.மு.க. கவுன்சிலர் மணி முருகன்:- ெரயில்வே பீடர் ரோட்டில் புதிது புதிதாக தள்ளுவண்டி கடைகள் முளைத்துள்ளன. இதனால் அந்த பகுதியில் அதிகாலை முதலே மதுபானங்கள் விற்பனை நடப்பதாகவும், மது பிரியர்கள் மதுபானங்களை குடித்துவிட்டு அந்த சாலையிலேயே போட்டு விட்டு சென்று விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    எஸ்.பி.கே. பள்ளி செல்லும் பாதையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து கறிக்கடை நடத்தி வருகிறார். அவர் குப்பைகளை ரோட்டில் கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகிறார். இதுபற்றி கேட்டால், நான் பி.ஜே.பி.க்காரன், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்.

    இதற்கு பா.ஜனதா கவுன்சிலர் முருகானந்தம் எதிர்ப்பு தெரிவித்தார். பா.ஜனதா கட்சியினரை அவன், இவன் என்று ஒருமையில் கூற வேண்டாம். உங்கள் குறைகளை கூறுங்கள். ஒருமையில் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், 2 கவுன்சிலர்களையும் அமைதியாக இருக்கும்படி கூறினார்.

    பின்பு கவுன்சிலர்கள் கூறிய கோரிக்கை கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நகரசபை தலைவர் உறுதி அளித்தார்.

    ×