search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்கலைக்கழக மானிய குழு"

    பண மதிப்பிழப்பு நாளை சர்ஜிகல் ஸ்டிரைக் நாளாகக் கொண்டாட பல்கலைக்கழக மானிய குழுவுக்கு தைரியம் உண்டா? என மூத்த காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். #UGC #SurgicalStrikeDay #KapilSibal #Demonetisation
    புதுடெல்லி:

    2016 ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை தாண்டிச்சென்ற இந்திய ராணுவம்,  அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. சர்ஜிகல் ஸ்டிரைக் என்று அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பின்னர் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை பெற்றது.

    இதற்கிடையே, வரும் 29-ம் தேதி சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு முன்னர் அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் அன்றைய தினம், என்.சி.சி அணிவகுப்பு, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை கொண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

    இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.



    இந்நிலையில், பண மதிப்பிழப்பு நாளை சர்ஜிகல் ஸ்டிரைக் நாளாகக் கொண்டாட பல்கலைக்கழக மானிய குழுவுக்கு தைரியம் உண்டா? என மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதனால் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது.

    ஆனால், சர்ஜிகல் ஸ்டிரைக் நாளை அனைத்து பல்கலைக்கழகங்களும் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    இதேபோல், பண மதிப்பிழப்பு நாளை சர்ஜிகல் ஸ்டிரைக் நாளாகக் கொண்டாட பல்கலைக்கழக மானிய குழுவுக்கு தைரியம் உண்டா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  #UGC #SurgicalStrikeDay #KapilSibal #Demonetisation
    பல்கலைக்கழக மானிய குழு விவகாரம் குறித்த மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார். #EdappadiPalanisamy #Modi
    சென்னை:

    மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருந்து வருகிறது. இருப்பினும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, அணைகள் பாதுகாப்பு சட்டம் போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    பல்கலைக்கழக மானிய குழுவுக்கு பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக் கும் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

    இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.



    அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தினால் தயாரித்து அளிக்கப்பட்டுள்ள இந்திய உயர் கல்வி ஆணையத்துக்கான வரைவு சட்ட மசோதா மீது தமிழக அரசு கொண்டுள்ள சந்தேகம் குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

    அனைத்து மாநில அரசு களிடம் இருந்தும் அந்த மசோதா மீது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கருத்துகளை கோரியுள்ளது.

    ஒழுங்குமுறை மற்றும் நிதி ஆகிய இரண்டு அதிகாரங்களையும் கொண்ட பல்கலைக் கழக மானிய குழுவே (யு.ஜி.சி.) தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கருத்தாக உள்ளது.

    எனவே, யு.ஜி.சி.யை கலைத்துவிட்டு, அந்த இடத்தில் ஒழுங்குமுறை அதிகாரத்தை மட்டுமே கொண்டுள்ள இந்திய உயர் கல்வி ஆணையத்தை அமைக்க தேவை இல்லை.

    உயர் கல்வி நிறுவனங்களைக் பராமரித்து கண்காணிக்கவும், அவற்றின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் தரத்தை மேம்படுத்தும் பொறுப்புகளை யு.ஜி.சி. தன்னகத்தே வைத்துள்ளது. அவற்றோடு, பல்வேறு கல்வித் திட்டங்களுக்கு 1956-ம் ஆண்டில் இருந்து நிதி ஒப்பளித்து வருகிறது. இதுவரை அதன் மீது எந்த புகாரும் எழவில்லை.

    நிதிக்கான முன்மொழிவு களை மதிப்பிட்டு அதை வழங்கக்கூடிய திறன் யு.ஜி.சி.க்கு உள்ளது. மேலும் அந்த நிதியை வெளிப்படைத்தன்மையுடன் ஒதுக்குகிறது. யு.ஜி.சி.க்கான நிதி அளிக்கும் அதிகாரம் என்பது தன்னுடைய பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்து கொள்ளும் கூடுதல் செயல்திறனாக அமைந்துள்ளது.

    தற்போது கொண்டுவர முன்மொழியப்பட்டுள்ள சட்ட மசோதா, யு.ஜி.சி.க்கான நிதி அதிகாரத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கோ அல்லது வேறு அமைப்புக்கோ இடமாற்றம் செய்வதாக அமைந்துள்ளது.

    இதில் தமிழக அரசுக்கு பலமாக சந்தேகங்கள் உள்ளன. ஏனென்றால், பல்வேறு மத்திய அரசுத் துறைகளால் தமிழக அரசுக்கு அனுமதிக்கப்பட வேண்டிய நிதியைப் பெறுவதில் எங்களது அனுபவம் நேர்மறையாக இருந்ததில்லை. அதுவும் நிதி அளிக்கும் அதிகாரத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பெற்றுவிட்டால், தமிழகத்துக்கு தற்போது கிடைக்கும் 100 சதவீத நிதி, இனிமேல் மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு இடையே 60:40 என்ற வீதத்தில் அமைந்துவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    எனவே இந்த காரணங் களுக்காக, இந்திய உயர் கல்வி ஆணைய (யு.ஜி.சி. சட்டத்தை நீக்குதல்) சட்டம்-2018 என்ற வரைவு சட்ட மசோதாவை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. அதோடு, யு.ஜி. சி.யே தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளார். 
    ×