search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்திரகாளியம்மன் கோவில்"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை மம்சாபுரம் சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறையினர் செய்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் சிவந்திப்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திரு விழா கடந்த 1-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் புரட்டாசி திரு விழாவில் தினசரி இரவு பத்திரகாளியம்மன் பல் வேறு சிறப்பு அலங்காரங் களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ் வான காலை பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய பத்திரகாளி யம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். மஞ்சள் தீர்த்த வாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை மம்சாபுரம் சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறையினர் செய்து வருகின்றனர்.

    • திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் வேங்கடசமுத்திரத்தில் அமைந்துள்ளது காட்டுபத்திரகாளியம்மன் கோவில். இந்த கோவிலில் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

    கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேகபணிகள் தொடங்கின. இதனை யொட்டி புதியதாக சிவபெருமான் சன்னதி, கருமாரியம்மன் சன்னதி மற்றும் மடப்பள்ளி அமைக்கப்பட்டது. 31-ந்தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது.

    செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் சிவாச்சாரியார் சங்கர நாராயணபட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்தனர். காலை 6.20 மணிக்கு காட்டுபத்திர காளியம்மன் கோவில் கோபுரவிமானத்தில் சிவாச்சாரியார்கள் வேத மத்திரங்கள், மேளதாளங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பா பிஷேகம் நடத்தின.

    இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை ஆணையாளர் செல்லத்துரை, காட்டுபத்திர காளியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி அங்கையர் கன்னி, தர்க்கார் சர்க்கரை அம்மாள், ஆய்வாளர் சாந்தி கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    கும்பாபிஷேகத்தில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், முன்னாள் நகராட்சி தலைவர் உமாவிஜயன், நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார், விரக்குமார், திருக்குமார், அமுதா சரவணன், போதுராஜன், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இன்று அதிகாலை குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி (மாசி 9) பூச்சாட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அம்மனுக்கு பால் அபிஷேகமும், 6-ந் தேதி அக்னி கபாலமும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் பூ மிதித்தல் எனப்படும் குண்டம் இறங்கும் விழா காலை 5 மணிக்கு நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி பிரதீப் குண்டம் இறங்கினர்.

    தொடர்ந்து கங்கணம் கட்டி விரதமிருந்த ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுவர், சிறுமியர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

    இதில் கோவை, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் உள்பட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் 4 நாட்களாக வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து இரவு பத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் நகர் வலமும், நாளை மறு பூஜையும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் தங்காயம்மள் செய்திருந்தார்.

    குண்டம் விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • திருவிழாவை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
    • 10-ந் தேதி மாவிளக்கு பூஜையும், முரசன் சுவாமிக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    குன்னத்தூர் :

    குன்னத்தூர் அருகே வெள்ளியம்பதி பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    10-ந் தேதி காலை 7 மணிக்கு மாவிளக்கு பூஜையும், முரசன் சுவாமிக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.10-ந் தேதி இரவு 7 மணிக்கு குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 5 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து பத்ரகாளியம்மன் மற்றும் கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. நாளை இரவு 7 மணிக்கு மறுபூஜை நடைபெறும்.  

    ×