search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாபிஷேக விழா"

    • பெருமை வாய்ந்த மீனாட்சியம்மன் பட்டாபிஷேக விழா, இன்று.
    • அம்மன் கையில் ரத்தின செங்கோல் அளிக்கப்படும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்க ளில் எழுந்தருளி மாசி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்ய இரவு நேரங்களில் 4 மாசிவீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களை கட்டியுள்ளது.

    மதுரையை அரசாள்பவள் சொக்கநாதர் அல்ல; மீனாட்சி அல்லவா. மதுரை மீனாட்சி அம்மனுக்கு ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவில் பட்டாபிஷேக விழா கொண்டாடப்படும். சித்திரை முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை சுந்தரேசுவரரும் மதுரையை ஆள்வதாக ஆன்மிகப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

    மதுரையைத் தவிர இதுபோன்ற காட்சியை வேறு எங்கும் காண முடியாது. அவ்வளவு பெருமை வாய்ந்த மீனாட்சியம்மன் பட்டாபிஷேக விழா, இன்று.

    இந்த பட்டாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். அந்தக் காலத்தில், பாண்டிய மன்னர்கள் வேப்பம்பூ மாலை தரித்தவர்களாக இருந்துள்ளனர். எனவே மதுரையை ஆளும் பாண்டிய நாட்டு மகாராணி மீனாட்சி அம்மனுக்கும் பட்டாபிஷேகம் அன்று அம்மன் சந்நதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனை இருத்தி வைத்து வேப்பம்பூ மாலை அணிவிக்கப்பட்டு ராயர் கிரீடம் அணிவித்து, அம்மன் கையில் ரத்தின செங்கோல் அளிக்கப்படும்.

    • ராம நவமி விழா கடந்த மாதம் 29-ந் தேதி மாலை பூஜையுடன் தொடங்கியது.
    • நேற்று முன்தினம் மாலை குத்துவிளக்கு பூஜை நடந்தன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திர சாமி கோவிலில் ராம நவமி விழா கடந்த மாதம் 29-ந் தேதி மாலை பூஜையுடன் தொடங்கியது.

    30-ந் தேதி நவகிரக ஹோமம், கலச ஸ்தாபனத்துடன் ராமநவமி உற்சவம் நடந்தன. மாலை லட்சார்ச்சனை நடந்தது.

    தொடர்ந்து கடந்த 3-ந் தேதி இரவு 8 மணிக்கு சீதா திருக்கல்யாண வைபமும், மங்களாரத்தியும் நடந்தன. நேற்று முன்தினம் மாலை குத்துவிளக்கு பூஜை நடந்தன. நேற்று காலை 9 மணிக்கு ஸ்ரீகர அஷ்டாக்ஷர ஹோமமும், காலை 11.30 மணிக்கு ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் நடந்தன. தொடர்ந்து மங்களாரத்தி நடந்தன. மாலை 6 மணிக்கு சாமி நகர்வலம் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டன.

    ×