search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாவல்பழம்"

    • தமிழகத்தில் கோடை காலம் முடிவுறும் நிலையில் தற்போது நாவல் பழம் மற்றும் பலா பழம் சீசன் துவங்கியுள்ளது.
    • மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நாவல்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.

    உடுமலை :

    தமிழகத்தில் கோடை காலம் முடிவுறும் நிலையில் தற்போது நாவல் பழம் மற்றும் பலா பழம் சீசன் துவங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பொள்ளாச்சி, ஆனைமலை ,பழனி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நாவல்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கிருந்து வரும் நாவல் பழங்கள் ஆயக்குடி மொத்த விற்பனை நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இருந்து சில்லரை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கிலோ ஒன்றுக்கு 400க்கு விலை போகிறது. இதேபோல் ஹைபிரிட் என்று சொல்லப்படும் நாவல் கனிகள் ஆந்திரா ,கர்நாடகா பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த பழங்கள் ரூ. 500 வரை விலை போகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தக் கொதிப்புஉள்ளவர்களுக்கு மருத்துவ பயன் அளிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் நாவல் பழங்களை வாங்கி செல்கின்றனர் தற்போது சீசன் களைகட்ட தொடங்கி உள்ள நிலையில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

    • மாதேஷ் நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    தாளவாடி அடுத்துள்ள ஆசனூர், கெத்தேசல் பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவரது அண்ணன் ஜடையப்பா. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அண்ணன் மனைவி மாதி என்பவரை மாதேவன் திருமணம் செய்து கொண்டார்.

    இதில் மாதேவனுக்கு சித்தார்த் என்ற மகனும், அண்ணன் ஜடையப்பா மூலம் மாதிக்கு பார்வதி என்ற மகளும், மாதேஸ் என்ற மகனும் இருந்தனர். கடந்த 16-ந் தேதி கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

    அப்போது மாதேஷ் வீட்டிற்கு அருகில் உள்ள நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாதேஷ் இறந்தார். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    ×