search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நர்சு கொலை"

    • ஆத்திரம் அடைந்த வாலிபர் தங்கை என்று கூட பார்க்காமல் நர்சை சரமாரியாக தாக்கினார்.
    • தலையில் மாறி மாறி தாக்கியதால் நர்சு மயங்கி விழுந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கோத்தகுடெம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்.

    நர்சிங் படிப்பு முடித்த இவர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் டிக்டாக் போன்ற வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு வந்தார்.

    இவரது வீடியோவிற்கு ஏராளமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இது பற்றி அறிந்த அவரது அண்ணன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட வேண்டாம். அது நல்லதல்ல ஒரு சிலர் ஆபாச கருத்துகளையும் வெளியிடலாம் என கூறி எச்சரித்தார்.

    ஆனாலும் நர்சு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். நேற்று முன்தினம் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதனை கண்ட அவரது அண்ணன் கடுமையாக எச்சரித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தங்கை என்று கூட பார்க்காமல் நர்சை சரமாரியாக தாக்கினார். தலையில் அவர் மாறி மாறி தாக்கியதால் நர்சு மயங்கி விழுந்தார்.

    இதனைக் கண்டு திடுக்கிட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நர்சை கம்மத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வாரங்கல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நர்சின் அண்ணனை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அனுராதா கொடுத்த கடனை திருப்பித் தருமாறு சந்திரமவுலிக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.
    • தலை கிடந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தராபத் மல்கப் பேட்டையை சேர்ந்தவர் அனுராதா (வயது 55). இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    ஐதராபாத் மலைக் பேட்டையை சேர்ந்தவர் சந்திர மவுலி. வியாபாரம் செய்து வருகிறார். இவரது தந்தையை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அப்போது நர்சு அனுராதாவுடன் அவரது தந்தைக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

    ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பிய சந்திரமவுலியின் தந்தை நர்சு அனுராதாவுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார். இதனையடுத்து அனுராதாவை அவரது வீட்டில் கீழ் தளத்தில் தங்க வைத்தார்.

    சந்திரமவுலி குடும்பத்தினர் நர்சு அனுராதா உடன் சகஜமாக பழகினர்.

    ஆன்லைன் வர்த்தகத்தில் சந்திரமவுலிக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அனுராதாவிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கினார்.

    இந்த நிலையில் அனுராதா கொடுத்த கடனை திருப்பித் தருமாறு சந்திரமவுலிக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இதனால் அனுராதாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று சந்திர மவுலி அனுராதா வீட்டிற்கு சென்றார். சத்தம் கேட்காமல் இருக்க வீட்டில் உள்ள ஜன்னல், கதவுகளை மூடினார். வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அனுராதாவை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் டைல்ஸ் கட்டர் கருவி மற்றும் கத்தியை கொண்டு அனுராதாவின் உடலில் இருந்து தலையை தனியாக துண்டித்தார்.

    உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டினார். துர்நாற்றம் வீசாமல் இருக்க ரசாயனங்களை உடல் பாகங்களில் தடவினார். அனைத்து உடல் பாகங்களையும் பிரிட்ஜில் அடைத்தார். மேலும் வெளியே துர்நாற்றம் வீசாமல் இருக்க தினமும் ஸ்பிரே அடித்து வந்தார்.

    துண்டிக்கப்பட்ட நர்சு தலையை ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து ஆட்டோவில் எடுத்துச் சென்றார். திகலகுடா, மூசி ஆற்றின் கரையில் தலையை வீசிவிட்டு வந்தார். நர்சு அனுராதா திடீரென மாயமாகி விட்டதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். உடல் பாகங்கள் இருந்த அறைக்கு யாரும் செல்லாதபடி பூட்டு போட்டார்.

    இந்த நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஆற்றுப்பகுதிக்குச் சென்ற ஒருவர் பிளாஸ்டிக் கவரில் தலை இருப்பதை கண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அழுகிய நிலையில் இருந்த தலையை மீட்டனர்.

    கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை கண்டு பிடிப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 750 போலீஸ் நிலையங்களில் காணாமல் போய் கண்டுபிடிக்க படாத பெண்களின் விவரங்களை சேகரித்தனர்.

    தலை கிடந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் சுற்றித்திரிந்தது கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து சந்திர மவுலியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுராதா கடனை திருப்பி கேட்டதால் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் சந்திர மவுலியை கைது செய்தனர். பிரிட்ஜில் அடைத்து வைத்திருந்த உடல் பாகங்களை மீட்டனர். அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கைதான சந்திரமவுலியை ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பார்வதி வேலை முடிந்து வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடினர்.
    • இரவு முழுவதும் தேடியும் பார்வதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த வால்மீகிபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (வயது 35). இவர் சித்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற பார்வதி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தார் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து பார்வதி குறித்து விசாரித்தனர். அவர்கள் பார்வதி வேலையை முடித்து வீட்டுக்கு கிளம்பி விட்டதாக தெரிவித்தனர்.

    பார்வதி வேலை முடிந்து வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இரவு முழுவதும் தேடியும் பார்வதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை ஊருக்கு வெளியே உள்ள மரத்தில் பார்வதி நிர்வாண நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பார்வதி குடும்பத்தார் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது பார்வதியின் கால்கள் தரையில் தொட்டபடி பிணமாக கிடந்தார். பார்வதியின் உடலில் ஆங்காங்கே நககீறல்கள் ஏற்பட்டு ரத்த காயம் இருந்தது.

    இதனால் அவரை கும்பல் கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பார்வதியை மர்மகும்பல் கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • வாலாஜா தடுப்பணை அருகே அவரது உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ரேஷ்மா லதாவை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா லதா (வயது 27). டிப்ளமோ நர்சிங் படித்து முடித்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.

    அப்போது ஆற்காடு அருகே உள்ள மேல்விசாரத்தை சேர்ந்த குமரன் (29) என்பவர் அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சென்றார். இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இந்த காதலுக்கு ரேஷ்மா லதாவின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் சென்னையிலேயே அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். சென்னையில் அழகு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த கோபிநாத் என்பவருக்கும் ரேஷ்மா லதாவுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்கள் சென்னையிலேயே குடியேறினர். 5 மாத கைக்குழந்தை உள்ளது.

    அதே போல குமரனுக்கும் திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.

    திருமணத்திற்கு பிறகும் ரேஷ்மாலதா, குமரன் கள்ளத்தனமாக சந்திக்க தொடங்கினர். இருவரும் அடிக்கடி போனில் பேசி தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.

    இது ரேஷ்மாலதாவின் கணவருக்கு தெரிய வந்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ரேஷ்மா லதா ராமாபுரம் கிராமத்திற்கு வந்து தங்கி இருந்தார். ஆத்திரமடைந்த அவரது கணவர் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டார்.

    ரேஷ்மா லதா கணவரை பிரிந்த நிலையிலும் குமரனுடன் போனில் பேசி வந்தார்.

    கடந்த 22-ந் தேதி வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு ரேஷ்மா லதா வெளியே சென்றார். அவரை சந்திப்பதற்காக குமரன் பைக்கில் வந்தார். இருவரும் வாலாஜா தடுப்பணை அருகே உள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் சந்தித்தனர். முதலில் இருவரும் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

    அதனை தொடர்ந்து கணவருடன் பிரச்சினை உள்ளதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு குமரனை ரேஷ்மா லதா வற்புறுத்தினார். இதில் ஆத்திரமடைந்த குமரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ரேஷ்மாவை தாக்கி அவரது துப்பட்டாவை கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

    மேலும் எந்தவித ஆதாரங்களும் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக ரேஷ்மா லதா வைத்திருந்த செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு பெங்களூருக்கு சென்று தலைமறைவாகிவிட்டார்.

    ரேஷ்மா லதாவை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    வாலாஜா தடுப்பணை அருகே அவரது உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர்.

    வாலாஜா அணைக்கட்டு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ரேஷ்மா லதா குமரனுடன் பைக்கில் வந்தது பதிவாகி இருந்தது. இதனை வைத்து குமரனை போலீசார் தேடி வந்தனர்.

    செல்போன் சிக்னல் மூலம் அவர் பெங்களூருவில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் பெங்களூரு சென்று குமரனை கைது செய்தனர்.

    திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ரேஷ்மா லதாவை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நான்சி நடத்தையில் சந்தேகப்பட்ட நான் கொலை செய்ய திட்டமிட்டேன்.
    • உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த எனது மனைவி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

    கோவை:

    கோவை ரத்தினபுரி ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார். தனியார் நிறுவன ஊழியர்.

    இவரது மனைவி நான்சி (வயது 32). இவர் பாப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான்சி தனது கணவரை பிரிந்து வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று மனைவி வேலை பார்க்கும் ஆஸ்பத்திரிக்கு சென்ற வினோத்குமார் அவருடன் ஏற்பட்ட தகராறில் நான்சியை குத்தி கொலை செய்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை குத்தி கொலை செய்த வினோத்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறேன். எனது மனைவி தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து எனது மனைவி என்னை பிரிந்து சென்றார். எனது மகளை எனது பெற்றோர் வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் நான்சிக்கு அவரது உறவுகார வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். இந்த விவகாரம் உறவினர்கள் மூலமாக எனக்கு தெரிய வந்தது.

    இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது அவர் தான் விடுதியில் தங்கி இருந்து வேலை செய்வதாகவும், தனக்கு யாரிடமும் தொடர்பு இல்லை என பேசினார். அவர் கடந்த 8 மாதங்களாக மகளை கூட பார்க்க வரவில்லை. இதனால் அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை தினசரி பின் தொடர்ந்து சென்றேன்.

    அப்போது தான் அவர் விடுதியில் தங்காமல் வேறு இடத்தில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட நான் கொலை செய்ய திட்டமிட்டேன்.

    சம்பவத்தன்று நான்சியை சந்திப்பதற்காக அவரது ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அப்போது அவருடன் அலுவலர்கள் இருந்தனர். இதனால் நான் திரும்பி வந்து விட்டேன். பின்னர் மதியம் கூட்டம் இல்லாத நேரத்தில் கத்தியை பாக்கெட்டில் மறைத்து வைத்துக்கொண்டு சென்றேன். பின்னர் எனது மனைவியை தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் வா என அழைத்தேன். அவரும் வந்தார். பின்னர் பிரசவ வார்டு அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்றேன்.

    அப்போது அவர் அலட்சியமாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் குத்தினேன். அவர் தடுத்ததால் என கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் நான் எனது மனைவியை கீழே தள்ளி அவரது மார்பு, வயிறு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்தினேன்.

    இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். பின்னர் நான் அங்கு இருந்து தப்பிச் சென்றேன். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த எனது மனைவி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

    என்னையும் எனது மகளையும் தவிக்க விட்டு சென்ற ஆத்திரத்தில் கொலை செய்தேன். பின்னர் போலீசார் என்னை விசாரணை நடத்தி கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அந்த அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    போலீசார் கைது செய்யப்பட்ட வினோ த்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×