search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால் ஊழியர்கள்"

    • மத்திய அரசை கண்டித்து தபால் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • பால் ஊழியர்களுக்கு ஆதரவாக பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினரும் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

    நாகர்கோவில்:

    தபால் சேவைகளை கார்ப்பரேட் ஆக மாற்ற நினைக்கும் மத்திய அரசை கண்டித்து தபால் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தபால் ஊழியர்களுக்கு ஆதரவாக பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினரும் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    • தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து இன்று தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊழியர்கள் பணிக்கு வராததால் அனைத்து தபால் நிலையங்களிலும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு:

    தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து இன்று ஒரு நாள் அகில இந்திய அளவில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இன்று தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் 3 தலைமை தபால் நிலையங்கள், 65 துணை தபால் நிலையங்கள், 252 கிளை தபால் நிலையங்களில் 800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களில் இன்று 700 -க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் பணிக்கு வராததால் அனைத்து தபால் நிலையங்களிலும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் இயங்கும் 252 தபால் நிலையங்கள் மூடப்பட்டதால் பணிகள் கடுமையாக பாதித்தன. குறிப்பாக தபால் பட்டுவாடா, பண வர்த்தனை முடங்கியது.

    இதுகுறித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க ஈரோடு கோட்டச் செயலாளர் வெள்ளியங்கிரி கூறியதாவது:-

    தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை கண்டித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஏற்கனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக தபால் பட்டுவாடா, பண பரிவர்த்தனை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடி கணக்கில் வர்த்தகம் முடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தபால் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
    • போராட்டம் காரணமாக இன்று தபால் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டன.

    மதுரை

    பொதுத் துறை நிறுவனமான தபால் சேவையில் தனியார் துறையை ஊக்குவிப்பதை கண்டித்து நாடு முழுவதும் தலைமை தபால் நிலைங்களில் தபால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரையில் சுமார் 30-க்கும்மேற்பட்ட ஊழியர்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.தல்லாகுளம் தபால் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை உடனடியாக கைவிட கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    போராட்டம் காரணமாக இன்று தபால் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டன.

    • அஞ்சல் துறை தனியார் மயமாக்கலை கண்டித்து தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
    • தபால் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    சென்னை:

    அஞ்சல் துறை தனியார் மயமாக்கலை கண்டித்து இன்று தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

    அஞ்சல் துறை தனியார் மயமாக்கலுக்கு எதிராக இன்று (10- ந்தேதி) வேலை நிறுத்தம் நடத்தப்படும் என தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி அஞ்சல் துறையின் பல்வேறு பிரிவுகளின் தனியார் மயமாக்கலுக்கு எதிராக வேலைநிறுத்த போராட்டம் சென்னையில் இன்று நடந்தது.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் இன்று 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

    இதனால் தபால் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    பார்சல் சேவைகள், டெலிவரி சேவைகள் குறைந்தன. தபால் நிலையத்துக்கு பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால் நீண்ட நேரம் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.

    சென்னை வடக்கு கடற்கரை, பார்க் டவுன், தி.நகர், அண்ணாநகர், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய அஞ்சல் நிலையங்களில் குறைந்த அளவிலான ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.

    இதனால் வாடிக்கையாளர் சேவை பணிகள் பாதிக்கப்பட்டது. தபால் ஊழியர்கள் போராட்டத்தால் அஞ்சல் சேவையில் 50 சதவீதம் பணிகள் பாதிக்கப்பட்டது.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியர் ஒருவர் கூறியதாவது:-

    மத்திய அரசு தபால் துறையை தனியார்மயம் ஆக்குவதை உடனடியாக கைவிட வேண்டும்.மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.

    காலியாக உள்ள அனைத்து தபால் பணி இடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொரோனா தொற்றினால் இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கி குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×