தபால் ஊழியர்கள் போராட்டம்

தபால் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் காரணமாக இன்று தபால் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டன.
மத்திய அரசின் தனியார்துறை மயமாக்கலை கண்டித்து மதுரை தல்லாகுளம் அஞ்சலகத்தில் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் தனியார்துறை மயமாக்கலை கண்டித்து மதுரை தல்லாகுளம் அஞ்சலகத்தில் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

மதுரை

பொதுத் துறை நிறுவனமான தபால் சேவையில் தனியார் துறையை ஊக்குவிப்பதை கண்டித்து நாடு முழுவதும் தலைமை தபால் நிலைங்களில் தபால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் சுமார் 30-க்கும்மேற்பட்ட ஊழியர்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.தல்லாகுளம் தபால் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை உடனடியாக கைவிட கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.

போராட்டம் காரணமாக இன்று தபால் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com