search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகவல்கள்"

    திருச்சி திருநங்கை கொலையில் திடுக்கிடும் தகவல்கள்

    திருச்சி,  

    திருச்சி மண்ணச்ச நல்லூர் அருகே உள்ள மேல காவல் கார தெருவை சேர்ந்தவர் மணிமேகலை என்கிற மணிகண்டன் (வயது 30) திருநங்கையான இவர் திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலம் அருகே நேற்று இரவு நடந்து சென்றார்.

    பின்னர் திடீரென மாயமான அவர் இரவு 9 மணி அளவில் அங்குள்ள முட்புதரில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சக தோழி இறந்த தகவல் அறிந்த திருநங்கைகள் நூற்றுக்கு மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு கடந்த கத்தி மற்றும் ஆணுறைகளை கைப்பற்றினர்.

    கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட மணிமேகலை கடந்த 4 ஆண்டுகளாக இரவு நேரங்களில் அதே பகுதியில் நடமாடி வந்துள்ளார்.

    ஆகவே அவரை புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் பின்னர் ஏற்பட்ட தகராறில் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அந்த நபர் அவருக்கு ஏற்கனவே அறிமுகமான நபராக இருக்கலாம் என கருதுகிறார்கள். ஆகவே மணிமேகலையின் தோழிகள் மூலமாக கொலையாளியை துப்பு துலக்கி வருகின்றனர்.

    பொதுவாக மணிமேகலை மட்டுமல்லாமல் வேறு திருநங்கைகளும் அந்த ஆற்றுப் பாலத்தில் இருப்பார்கள். ஆகவே மணிமேகலைக்கு நெருக்கமான நபர்கள் யார்? யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ‘பி.டபிள்யூ. என். 0001’ என்ற ஒரு ஹேக்கர் மூலம் இந்த கசிவு விவகாரம் வெளிகொண்டு வரப்பட்டு உள்ளது.
    • தரவுகள் கசிவை அமெரிக்க ஏஜென்சியான ரெசெக்யூரிட்டி கண்டு பிடித்தது.

    புதுடெல்லி:

    கொரோனா கால கட்டத்தின் போது நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்காக அவர்களது பெயர், ஆதார் எண் உள்ளிட்ட தரவுகள் பெறப்பட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

    இந்நிலையில் 81.5 கோடி இந்தியர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் கசிந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'பி.டபிள்யூ. என். 0001' என்ற ஒரு ஹேக்கர் மூலம் இந்த கசிவு விவகாரம் வெளிகொண்டு வரப்பட்டு உள்ளது.

    இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா சோதனையின் போது சேகரித்த தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அந்த ஹேக்கர் கூறும்போது, திருடப்பட்ட தகவல்களில் ஆதார், பாஸ்போர்ட் விவரங்கள், கோடிக்கணக்கான இந்தியர்களின் பெயர்கள், போன் எண்கள், தற்காலிக, நிரந்தர முகவரிகள் உள்ளன. கொரோனா சோதனையின் போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சேகரிக்கப்பட்ட தகவலில் இருந்து இந்த தரவுகள் எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

    இந்த தரவுகள் கசிவை அமெரிக்க ஏஜென்சியான ரெசெக்யூரிட்டி கண்டு பிடித்தது. இந்திய குடிமகன் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் தகவல் உள்பட 81.5 கோடி பதிவுகள் கிடைக்கும் என்று ஹேக்கர் விளம்பரப்படுத்தி உள்ளார்.

    இதில் இந்திய குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களுடன் ஒரு லட்சம் கோப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில் கொரோனா சோதனை தகவல்கள், தேசிய தகவல் மையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சுகாதார அமைச்சகம் போன்ற பல்வேறு அரசாங்க அமைப்புகளில் உள்ளன. இதனால் இந்த தகவல்கள் எங்கிருந்து கசிந்தது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

    • புதிய வீட்டின் கிரகபிரவேசத்திற்கு முன்பு பலியான தந்தை-மகள்
    • சுற்றுலா சென்ற இடத்தில் தான் பேபிகலா விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

    குன்னூர்,

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கீழக்கடையத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 64). இவர் தனது மனைவி, மகள் கவுசல்யா(29), மற்றும் 3 வயது பேத்தியுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    இவர் சமீபத்தில் கீழக்கடையத்தில் ஆசை ஆசையாக, புதிய வீடு ஒன்றை கட்டிவந்தார். அந்த வீட்டின் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் அதற்கு கிரகபிரவேசம் நடத்த திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார்.

    இந்நிலையில், விடுமுறையையொட்டி தென்காசியில் கணவர் வீட்டில் இருந்த அவரது மகள் கவுசல்யா, சொந்த ஊருக்கு மகளுடன் வந்திருந்தார்.அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டதால் இளங்கோ குடும்பத்தினரும் செல்ல விருப்பப்பட்டனர். இதனால் இளங்கோ, நான் வீட்டில் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

    ஆனால் வற்புறுத்தலின்பேரில் அவர்கள் அனைவரும் சுற்றுலாக்கு புறப்பட்டு சென்ற இடத்தில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி கவுசல்யாவும், அவரது தந்தை இளங்கோவும் உயிரிழந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

    கடையம் ராமநதி ரோட்டை சேர்ந்த சண்முகையா தனது மனைவி பேபி கலாவுடன்(36) சென்றுள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் 10-ம் வகுப்பு படிக்கிறான். இளைய மகன் 8-ம் வகுப்பு படிக்கிறான்.

    தற்போது காலாண்டு விடுமுறையையொட்டி இளைய மகன், அந்த பகுதியில் உள்ளவர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்று அடம்பிடித்துள்ளான்.

    மேலும் பேபிகலாவும் இதுவரை எந்த ஊருக்கும் சுற்றுலா சென்றதில்லை. இதனால் அவர் தனது மூத்த மகனை மட்டும் வீட்டிலேயே விட்டுவிட்டு கணவர் மற்றும் இளைய மகனுடன் புறப்பட்டு சென்றுள்ளார். அவ்வாறு சுற்றுலா சென்ற இடத்தில் தான் பேபிகலா விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

    • தகவல்கள் இணையத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
    • சிவப்பு நிறத்தை பச்சை நிறமாக மாற்றி மீண்டும் தாய் சேய் நல மையத்திற்கு அனுப்பி கண்காணிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக தாய் சேய் நல கண்காணிப்பு மையம் இன்று தொடங்கப்பட்டது. இம்மையத்தினை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் திறந்து வைத்தார். துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகர்நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மேயர் சண். ராமநாதன் பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லுகுளம், கரந்தை, மகர்நோன்புசாவடி , சீனிவாசபுரம் ஆகிய 4 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது கர்ப்பகால பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் 1212 கர்ப்பிணிகளில் 640 கர்ப்பிணிகள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை, தைராய்டு மற்றும் முந்தைய பிரசவம் சிசேரியன் அறுவை சிகிச்சை போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டு அவர்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தின் மூலமாக செல்போன் வாயிலாக தொடர்பு கொள்ளப்பட்டு அவர்களின் சுகாதார குறியீடு அளவுகளின் அடிப்படையிலும், முறையாக பரிசோதனை மேற்கொள்ளாமல் இருப்பவர்களையும் கண்டறிந்து சிவப்பு நிறத்தில் அட்டவணைப்படுத்தி அவர்களின் தகவல்கள் இணையத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பின்னர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு தொடர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தி அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிவப்பு நிறத்தை பச்சை நிறமாக மாற்றி மீண்டும் தாய் தாய் சேய் நல் மையத்திற்கு அனுப்பி கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு இந்த தாய் சேய் நல மையத்தின் மூலம் மாதம் இருமுறை அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு முறையான கர்ப்பகால கவனிப்பை கண்காணித்தல் மற்றும் பரிசோதனை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். மேலும் கர்ப்பகால உணவுமுறை உள்ளிட்ட பாதுகாப்பான தாய்மைக்கான ஆலோசனைகள் வழங்குதல்.

    கர்ப்பகாலத்தில் தடுப்பூசியை முறையாக தவறாமல் செலுத்தி கொள்வதை உறுதி செய்தல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் குறித்த வழிமுறைகளை விளக்கி கூறுதல், தாய் சேய் நல குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகளை வழங்குதல்.

    அட்டவணைப்படி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்தல், அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளை பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்பாக ஒருங்கிணைந்த பேறுகால அவசரகால சிகிச்சை மற்றும் சிசு பராமரிப்பு பிரிவுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

    பேறுகாலம் நிறையுற்றபின் 42 நாட்கள் வரை தொடர்ந்து தாய் சேய் நல கவனிக்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மாநகராட்சி தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தை 78458 49867 என்ற செல்போன் எண்ணில் தொடப்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மார்களின் கர்ப்பகால இறப்பு மற்றும் சிசு இறப்பே இல்லை என்ற நிலையை எட்டுவதே இந்த தாய் சேய் நல மையத்தின் நோக்கமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்விழாவில் மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா, ரம்யா சரவணன், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், நகர்புற ஆரம்ப சுகாதார செவிலியர்கள், தரவு உள்ளீட்டாளர்கள் மற்றும் கர்ப்பிணிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதனை அடுத்து கர்ப்பிணிகளுக்கு பேரிச்சம்பழம், புரோட்டின் பவுடர் உள்ளிட்ட பல்வேறு சத்து பொருட்கள் அடங்கிய தாய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. முன்னதாக புள்ளி விபர உதவியாளர் செல்வகுமார் வரவேற்றார். முடிவில் பகுதி சுகாதார செவிலியர் மல்லிகா நன்றி கூறினார்.

    • 1,333 அரசு, நகராட்சிப்பள்ளிகளில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மைக்குழுக்கள் செயல்பாட்டை துவக்கி உள்ளன.
    • 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி அனைத்து குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி கிடைக்கும் வகையில் அரசுப்பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மொத்தம் 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 1,333 அரசு, நகராட்சிப்பள்ளிகளில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மைக்குழுக்கள் செயல்பாட்டை துவக்கி உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இக்குழு உறுப்பினர்கள் 20 பேர் எமிஸ் வலைதளத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    ஓராசிரியர் பள்ளியாக இருந்தால் 19 பேருக்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் எத்தனை பேர் நியமிக்கிறீர்களோ, அத்தனை நபர்களின் விபரங்களையும் எமிஸ் வலைதளத்தில் பதிவிட வேண்டும்.கூட்டம் சார்ந்த செயல்பாடுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சார்ந்த புகைப்படங்களை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் மாவட்ட பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறுகையில், மாதம்தோறும் நடக்கும் கூட்டத்தில் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் வருகைப்பதிவு, வருகை தராத மாணவர்கள் மற்றும் அதற்கான காரணம், கடந்த 6 மாதங்களில் நடந்த கற்றல் முன்னேற்றம், அடுத்த 2 மாதத்திற்கான கற்பித்தல் செயல்திட்டம் ஆகியவை ஆய்வு செய்யப்படும் என்றனர்.

    ×