search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல் டிப்ஸ்"

    • மாவில் வண்டு வராமல் இருக்க சிறிதளவு உப்பை போட்டு வைத்தால் போதும்.
    • இட்லி மாவு புளிக்காமல் இருக்க வெற்றிலையை போட்டு வைக்கலாம்.

    * கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்கு அதில் சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் போதும்.

    * காப்பர் பூசப்பட்ட பாத்திரம் மங்காமல் இருப்பதற்கு சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி, துணியால் அழுத்தி தேய்த்தால் போதும். பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.

    * இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் அதன் உள்பகுதியை மாவில் போட்டு வைக்கவும். மாவு இரண்டு நாட்கள் வரை கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

    * மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வைக்கவும். பின்பு நீரை ஊற்றிவிட்டு முயற்சி செய்தால் பிளேடை எளிதாக கழற்றலாம்.

    * மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து, மிக்ஸியில் அரைத்து இட்லி சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் சுவையாக இருக்கும்.

    * வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் மணமாக இருக்கும்.

    * சப்பாத்தியை சில்வர் பாயில் பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட நேரம் காயாமல் இருக்கும்.

    * ரசம் தயார் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீர் சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    * கறிவேப்பிலையை அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

    * வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால், சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

    * தோசை சுடும்போது மாவில் சிறிது சர்க்கரையை சேர்த்தால் தோசை மொறுமொறுப்பாக வரும்.

    * முட்டைகோஸில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    * வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகிவிடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டு வைத்தால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

    • சப்பாத்தி மாவு பிசையும் போது பால் சேர்த்து பிசைந்தால் சுவையாக இருக்கும்.
    • கருணைக்கிழங்கு பொரியலுக்கு வேர்க்கடலையை பொடி சேர்த்தால் சுவையாக இருக்கும்.

    1. நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய்யில் வதக்கி, புதினா துவையல் அரைக்கும்போது அதனுடன் சேர்த்து அரைத்தால் சுவையான நெல்லி-புதினா துவையல் ரெடி.

    2. எந்த பதத்தில் அரைத்தாலும் இட்லி பூ போல மென்மையாக வரவில்லையா? கவலை வேண்டாம். கழுவி ஊற வைத்த அரிசியுடன் ஒரு டம்ளருக்கு நான்கு ஸ்பூன் என்ற விகிதத்தில் பொட்டுக் கடலையை சேர்க்கவும். இதை எப்போதும் போல அரைத்து இட்லி சுட்டால் பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும்.

    3. சாம்பாரிலோ அல்லது காரக்குழம்பிலோ புளிப்புச்சுவை அதிகமாகிவிட்டால் ஒரு துண்டு வெல்லம் மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொதிக்க விடவும். புளிப்பு சுவை மட்டுப்படும்.

    4. கருணைக்கிழங்கு பொரியல் செய்யும்போது அதனுடன் வறுத்த வேர்க்கடலையை பொடி செய்து சேர்த்தால் கருணைக்கிழங்கு பொரியல் சுவையாக இருக்கும்.

    5. புட்டுமாவு அரைக்கும்போது அதனுடன் நான்கிற்கு ஒன்று என்ற விகிதத்தில் சிறுதானியமான கம்பு சேர்த்து அரைத்து வேகவைத்து அதனுடன் வெல்லம், நெய், துருவிய தேங்காய், வாழைப்பழத் துண்டுகள் மற்றும் பொடித்த வேர்க்கடலை சேர்த்தால் சத்து நிறைந்த புட்டு தயார்.

    6. முள்ளங்கியை நறுக்கிய பிறகு அந்தத் துண்டுகளை தண்ணீரில் சில நிமிடங்கள் ஊற வைத்துப் பின்னர் சமைத்தால் முள்ளங்கியின் வாடை துளி கூட வராது.

    7. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதனுடன் வெந்நீர் அல்லது சூடான பால் சேர்த்துப் பிசைந்தால் சுவையான சப்பாத்தி செய்யலாம்.

    8. பூரிக்கு கிழங்கு மசால் செய்யும்போது மற்ற பொருள்களுடன் பொட்டுக்கடலைப் பொடியை சிறிதளவு சேர்த்தால் கிழங்கு மசாலாவின் சுவையும், மணமும் கூடும்.

    9. தயார் செய்த குழம்பில் உப்பு அதிகமானால் வறுத்து அரைத்த அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு இவையில் ஏதாவது ஒன்றைச் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கலாம். உப்பு மட்டுப்படும்.

    10. மெதுவடை செய்யும்போது அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன், ஊற வைத்த பயத்தம் பருப்பை சிறிதளவு கலந்து வடை சுட்டெடுங்கள். வடை வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

    11. பஜ்ஜி செய்யும்போது சோடா மாவு சேர்ப்பதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக ஒரு கரண்டி அளவு தோசை மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பலாகவும், மொறுமொறுப்பாகவும் வரும்.

    12. கோதுமை மாவுடன் வறுத்து அரைத்த வேர்க்கடலை மாவைச் சிறிது கலந்து சத்து நிறைந்த பூரி செய்யலாம்.

    • முந்திரி பருப்புகளை வறுத்து வைத்தால் கெடாது.
    • அடைக்கு பருப்புடன் ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்தால் அடை மொறுமொறுப்பாக கிடைக்கும்.

    * முற்றிய தேங்காயை துண்டுகளாக வெட்டுவது சிரமம். அதை பிரீசரில் 10 நிமிடங்கள் வைத்து விட்டு தண்ணீரில் கழுவி கீறினால் ஓடு கழன்று வந்துவிடும்.

    * பிரிட்ஜ் கதவு எப்போதும் பளிச்சென இருக்க, லிக்விட் சோப்புடன் சொட்டு நீலத்தை நுரை வரும்வரை கலந்து, அந்த நுரையால் துடைத்தால் போதும்.

    * சவ்சவ் நறுக்கும்போது விரல் பிசுபிசுப்பாகி விடும். சவ்சவ்வை நீளவாக்கில் இரண்டாக வெட்டி ஒன்றோடு ஒன்று தேய்த்து, பின்பு நீரில் கழுவி விட்டு நறுக்கினால் பிசுபிசுப்பாக இருக்காது.

    * முழு முந்திரி பருப்புகளை விரைவில் பூச்சி அரித்து விடும். அவற்றை ஒன்றிரண்டாக உடைத்து, வெறும் வாணலியில் வறுத்துவிட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாது.

    * ரோஜா, சாமந்தி பூக்களின் காம்புகள் ஒடிந்த நிலையில் இருந்தால் சாமி படங்களுக்கு வைப்பது சிரமம். ஊதுவர்த்தியின் கீழ்பாகம் போன்ற சிறு குச்சிகளை பூ நடுவில் சொருகி விட்டால் அழகாக பூ சூட்ட முடியும்.

    * குருமா, கிரேவி வகைகளில் காரம் அதிகமாகிவிட்டால் சிறிது காய்ச்சிய பாலை சேர்க்கலாம்.

    * பாகற்காயுடன் பீட்ரூட், கேரட் கலந்து பொரியல் செய்தால், அதன் கசப்பு தன்மை குறைந்து விடும்.

    * வெயில் காலத்தில் தயிர் வேகமாக புளித்து விடும். டிபன் கேரியரில் பால் உறை ஊற்றி மேல், கீழ் பாத்திரங்களில் நீர் நிரப்பி வைத்தால் எளிதில் புளிக்காது.

    * அடைக்கு பருப்பு ஊற வைக்கும்போது கைப்பிடி ஜவ்வரிசியையும் அதனுடன் ஊற வைத்தால் மொறுமொறு அடை கிடைக்கும்.

    * பால் சேர்த்து பாயசம் செய்யும்போது அடுப்பில் வைத்து சர்க்கரை கலந்தால் திரிந்தது போல் ஆகிவிடும். இறக்கிவிட்டு பொடித்த சர்க்கரை சேர்க்கலாம்.

    * வெயில் காலத்தில் பூக்கள் சீக்கிரம் வாடாமல் இருக்க, ஸ்பாஞ்சை தண்ணீரில் நனைத்து அதன் மேல் பூக்களை வைத்து ஈரத்துணியால் சுற்றவும்.

    • வத்தக்குழம்பில் உப்பு அதிகமானால் தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவையும் கூடும்.
    • பிரிஞ்சி இலையை பொடித்து மூலை முடுக்குகளில் போட்டால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.

    * வெந்தயக்கீரையை வேகவைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் உடல் சுத்தமாகும். குடல் புண்கள் குணமாகும். மலச்சிக்கலையும் போக்கும்.

    * பருப்புக்கீரையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக உள்ளன. நுரையீரல் பாதிப்புகளில் இருந்து காக்கும் வல்லமை இதற்கு உண்டு. உடலில் உள்ள கொழுப்புகளையும் கரைக்கும் ஆற்றல் கொண்டது. வெந்நீர் மற்றும் வியர்வையால் ஏற்பட்ட கொப்புளங்கள், தீக்காயங்களுக்கு பருப்புக்கீரையை அரைத்து தடவ குணம் பெறும்.

    * வெண்டைக்காய் பொரியல் செய்து முடித்த பின்பு வேர்க்கடலையை பொடித்துப்போட்டு கலந்தால் சுவை கூடும். பொரியல் மீதமாகிவிட்டால் தயிர் சேர்த்து பச்சடி செய்து சாப்பிடலாம்.

    * பூண்டு, வெங்காயம் நறுக்கிய பின்பு கைகளில் உப்பு தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவினால் வாடை வீசாது.

    * பிரெட், பர்பி, மைசூர் பாகு போன்றவைகளை வெட்டும் கத்திகளை சூடாக்கி வெட்டினால் பிசிறு இல்லாமல் அழகான துண்டுகள் கிடைக்கும்.

    * பால் திரிந்துவிட்டால் அதை வீணாக்காமல் வெள்ளிப்பாத்திரங்கள், வெள்ளி நகைகள், கொலுசுகளை அதில் 15 நிமிடங்கள் ஊற வைத்து தேய்த்து எடுத்து துணியால் துடைத்துவிட்டால் புதிது போல 'வெள்ளி' மின்னும்.

    * பிரிஞ்சி இலைகளை பொடித்து சமையலறை மூலை முடுக்குகளில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.

    * வத்தக்குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் தேங்காய்ப்பால் சேர்த்தால் சரியாகிவிடும். சுவையும் கூடும்.

    * பூரி உப்பலாக சில மணி நேரம் இருக்க, ரவை ஒரு ஸ்பூன், பச்சரிசி மாவு ஒரு ஸ்பூன் கலந்து கோதுமை மாவை கெட்டியாகப் பிசைந்து ஊற விடாமல் உடனே தடிமனாக தேய்த்து பொரித்து எடுக்கவும். உப்பலான சுவையான பூரி கிடைக்கும்.

    * தக்காளி சீக்கிரமாக வதங்க, சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்தால் போதும்.

    * சாதம் வடித்த கஞ்சியை வீணாக்காமல் அதனுடன் சிறிது உப்பு, சீரகம், மிளகு கலந்து சூப் போல பருகலாம். உடலுக்கு ஆரோக்கியமும், உற்சாகமும் மிகுதியாக கிடைக்கும்.

    * பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிவிட்டு, எலுமிச்சை சாறில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து பத்திரபடுத்தி தயிர் சாதத்திற்கு எண்ணெய்யில் பொரித்தும், பொரிக்காமலும் சாப்பிடலாம். ருசி அமோகமாக இருக்கும்.

    * சேப்பங்கிழங்கை வேகவைப்பதற்கு முன்பு கத்தி கொண்டு ஆங்காங்கே கீறிவிட்டால் வேகவைத்த பிறகு தோல் உரிப்பதற்கு எளிதாக இருக்கும்.

    * காபி, டீ கறை படிந்த பீங்கான் பாத்திரங்களை எலுமிச்சை தோல் கொண்டு தேய்த்து கழுவினால் பளிச்சென்று இருக்கும். எலுமிச்சை தோலை தூக்கி எறியாமல் பிரிட்ஜில் பாதுகாத்து பயன்படுத்தலாம்.

    • ஆப்பிள் பழங்கள் வாடாமல் இருக்க எலுமிச்சை, ஆரஞ்சு சாறு கலந்து வைக்கலாம்.
    • பொரிக்கும் போது எண்ணெய் பொங்காமல் இருக்க புளியை எண்ணெயில் போட்டால் போதும்.

    * ரவா கேசரி தயாரிக்கும்போது அதில் ஆப்பிள், அன்னாசி, திராட்சை, மாம்பழத் துண்டுகளை, இறக்கும் முன் கலந்து கிளறவும். வித்தியாசமான பழக்கேசரி தயார்.

    * நறுக்கிய ஆப்பிள் பழங்கள் வாடாமல் இருக்க சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு கலந்து வைக்கலாம்.

    * ஏலக்காயை பொடித்து போட்ட பிறகு அதன் தோலை தூக்கி எறிந்து விடாதீர்கள். அப்படியே குடிக்கும் நீரில் போட்டால் போதும். மணமும், ருசியும் சேர்ந்த நீரை பருகலாம்.

    * பலாப்பழத்தை வெட்டி சுளை எடுப்பதற்கு முன்னால் கையில் எண்ணெய் தடவிக் கொண்டால் அதில் உள்ள பால் கைகளில் ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும். வெட்டுவதற்கும் சவுகரியமாக இருக்கும்.

    * பீன்ஸ் காய்ந்துவிட்டால் அதை வேகவைத்த பிறகுதான் உப்பு சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் விரைவாக வேகாது.

    * வடை தயார் செய்யும்போது மாவில் தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்.

    * எந்த வகை குழம்பிலும் கடலை மாவை தனியாக கரைத்து, பின்னர் குழம்பில் சேர்த்தால் குழம்பு கெட்டியாகிவிடும்.

    * மசாலா, குருமாக்களில் காரம் கூடுதலாகிவிட்டால் சிறிது தயிரை கடைந்து சேர்க்கவும் அல்லது தேங்காய்ப்பாலை விடவும். தேங்காய்ப்பாலை விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக பசும்பாலை சேர்த்துக்கொள்ளலாம்.

    * பருப்பு உசிலியை பீன்சுக்கு பதிலாக வெண்டைக்காய், பாகற்காய் இவற்றிலும் செய்யலாம்.

    * அல்வா கலவையை மிகவும் கெட்டியாக வரும் வரை வைக்கக்கூடாது. அடை மாவு பதத்தில் எடுத்தால் ஆறும்பொழுது சரியாக இருக்கும்.

    * கீரையை கூட்டு செய்வதற்கு சிறிது சிறிதாக நறுக்காமல் ஒன்றிரண்டாக பிய்த்து அளவான தண்ணீரில் குக்கரில் வேகவிட்டு மிக்சியில் லேசாக அரைக்கவும். அரிந்தது போல மசிந்து விடும். சத்தும் கெடுவதில்லை.

    * வாணலியில் ஏதேனும் உணவுப்பதார்த்தங்களை வறுக்கும்போதோ அல்லது பொரிக்கும்போதோ எண்ணெய் பொங்குமானால், சிறிது புளியை எண்ணெய்யில் போட்டால் போதும், பொங்காது.

    * கொழுப்புச்சத்தை குறைக்க விரும்புபவர்கள் பன்னீரை பொரிக்காமல் பயன்படுத்தலாம்.

    • கத்தரிக்காய் குழம்பு சமைக்கும்போது நெய்யில் வதக்கி சேர்த்தால் மணம் கூடும்.
    • ஊறுகாய்களில் கடுகு எண்ணெய்யை சேர்த்தால் கெடாமல் இருக்கும்.

    * புதினா, தக்காளி இரண்டையும் அரைத்து, பஜ்ஜி மாவில் கலந்து கலர்புல் பஜ்ஜிகள் செய்யலாம்.

    * ரசத்திற்கு புளி கரைக்கும்போது சிறிது வெல்லமும் சேர்த்து கரைத்தால் சுவை கூடும்.

    * கடைகளில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளை சிறிது நேரம் எலுமிச்சை சாறு கலந்த நீரில் முக்கி வைத்தால் அவற்றின் மீது தெளிக்கப்பட்டிருக்கும் ரசாயனத்தின் வீரியம் குறையும்.

    * வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, தேன், வாழைப்பழம், பூசணி இவற்றை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    * தேங்காய் சட்னியில் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக சிறிது தேங்காய் பால் கலந்தால் மணமும், சுவையும் கூடும்.

    * மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்களில் சிறிது கடுகு எண்ணெய்யை சேர்த்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

    * கேரட், பீட்ரூட்டை துருவி தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் கண்ணைக் கவரும் கலர்புல் தோசை ரெடி.

    * கத்தரிக்காய் குழம்பு சமைக்கும்போது கத்தரிக்காயை தனியாக நெய்யில் வதக்கி குழம்பில் சேர்த்தால் மணம் கூடும்.

    * கிழங்கு வகைகளை சமைக்கும்போது அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயம் கலவையில் கிழங்குகளை புரட்டி எடுத்து பின் வதக்கினால், காரம், மணம் சூப்பராய் இருக்கும்.

    * கீரை சமைக்கும்போது மஞ்சள்தூள் கலந்த சுடுநீரில் சிறிது நேரம் மூழ்க வைத்துவிட்டு சமைத்தால் கீரையின் நிறமும் மாறாது, ரசாயன பாதிப்பும் இருக்காது.

    • சமையல் அறையில் வசம்பு தூள் தூவி விட்டால் பூச்சிகள் வராது.
    • காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

    * இறைச்சி வேகவைக்கும்போது கொஞ்சம் பாக்கு சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * வெந்தயத்தை வேகவைத்து, கடைந்து தேன் கலந்து உண்டு வர தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

    * காலிபிளவர் சமைக்கும்போது கொஞ்சம் பால் சேர்த்தால் பூ போன்ற வெள்ளை நிறம் மாறாமல் இருக்கும். பச்சை வாடையும் வராது.

    * பிரிட்ஜில் மாவை வைக்கும்போது உப்பு சேர்க்கக்கூடாது. உப்பு சேர்த்தால் புளித்துவிடும்.

    * அலுமினியப் பாத்திரங்களில் அடிப்பிடிப்பு கறையை நீக்க உப்புக்காகிதம் கொண்டு தேய்த்தால் பாத்திரம் புதுசு போல மின்னும்.

    * ஒரு கைப்பிடி கல் உப்பை துணியில் கட்டி அரிசி மூட்டைக்கு அருகில் வைத்தால் பூச்சிகள் எதுவும் வராது.

    * சமையல் அறையில் வசம்பு தூள் தூவி விட்டால் பூச்சிகள் வராது.

    * எறும்பு தொந்தரவு உள்ள இடங்களில் நான்கைந்து கிராம்பை போட்டு விட்டால் எறும்புகள் வராது.

    * சீடை செய்யும்போது அதனை ஊசியால் குத்தி பின்பு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

    * புளியை வெந்நீரில் ஊறவைத்து, பிறகு கரைத்தால் சீக்கிரமாக கரைந்துவிடும்.

    * சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை அகற்றி வட்ட வடிவமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறு மொறுவென இருக்கும்.

    * அரிசியில் வண்டோ, புழுவோ வராமல் இருக்க வேப்பம் இலைகளைப் போட்டு வைக்கலாம்.

    * உலர்ந்த ஆரஞ்சு தோலை புகை போட்டால் வீட்டுக்குள் கொசு வராது. இது இயற்கையான கொசு விரட்டி.

    * பூஜை செய்யும்போது வீட்டில் புகை அதிகமாக இருந்தால் ஒரு ஈரத்துணியை தொங்கவிடுங்கள். புகை காணாமல் போய்விடும்.

    * சப்பாத்திக்கு மாவு பிசையும் முன்னால் கையில் கொஞ்சம் உப்பை தடவிக்கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

    * உருளைக்கிழங்கை வேகவைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் அவை ஜொலிக்கும்.

    * காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

    • உருளைக்கிழங்கை மசித்து கலந்தால் வடை எண்ணெய் குடிக்காது.
    • தேங்காய் பால் ஊற்றிக் சர்க்கரை பொங்கல் செய்தால் சுவையாக இருக்கும்.

    1. ஏலக்காய் தூள் அரைக்கும்பொழுது ஏலக்காய் நமத்து போய்விட்டால் வெறும் வாணலியில் ஒரு நிமிடம் வதக்கி விட்டு பின்னர் அரைத்து பாருங்கள். நைசாக அரைபடும்.

    2. உளுந்து வடை செய்யும்போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.

    3. சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

    4. பாயசத்திற்கு திராட்சைக்குப் பதிலாக பேரிச்சம் பழத்தை பொடிதாக நறுக்கி, நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

    5. ரவா தோசை செய்யும்போது 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும்.

    6. கனமில்லாத மெலிதான தோசைக்கல்லை சப்பாதிக்கும், அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும் பயன் படுத்த வேண்டும்.

    7. புளித்த மோர் வீட்டில் இருந்தால் சிறிதளவு வெண்டைக்காயில் சேர்த்து பொறியல் செய்தால், வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

    8. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்த பின்பு அதிக நேரம் வதக்க கூடாது. அது பச்சையாக இருந்தால் தான் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

    9. புடலங்காய் கசப்பாக இருந்தால், அவை பாம்பு ஏறிய காய் என்பார்கள். ஆகவே சிறிது கிள்ளி சுவைத்து பார்த்து வாங்க வேண்டும்.

    10. அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அருகம்புல்லில் அதிகம்.

    • அவலை அரைத்துக் கலந்தால் கூழ் பதமாகி விடும்.
    • வடகம் கூழில் இஞ்சியை சேர்த்தால் மணமும் கூடும், காரமும் இருக்கும்.

    * வடகம் செய்பவர்கள் ஐந்து பங்கு பச்சரிசிக்கு ஒரு பங்கு ஜவ்வரிசி சேர்த்து மாவு அரைத்து வடகம் பிழிந்தால் வடகம் நல்ல மொறுமொறுப்பாகவும் வெள்ளையாகவும் இருக்கும்.

    * வடகம் கூழ் நீர்த்து விட்டால் ஊற வைத்த அவலை அரைத்துக் கலந்தால் கூழ் பதமாகி விடும்.

    * வடகம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டுப் பார்த்தால் உப்பு குறைவாகவே இருக்க வேண்டும். அப்போது தான் காய்ந்த பிறகு உப்பு சரியாக இருக்கும்.

    * சாதம் மிகுந்து விட்டால், அதனுடன் பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து வடகம் போல பிழிந்து காய வைக்கவும். இதை எண்ணெய்யில் பொரித்து சாப்பிட்டால் மொறுமொறுவென்று இருப்பதுடன் சுவையும் அசத்தும்.

    * ஜவ்வரிசி வடகம் உடைந்து தூளாகி இருந்தால் அவற்றை பஜ்ஜி மாவில் இரண்டு நிமிடங்கள் ஊறப்போட்டு பிறகு பஜ்ஜி சுட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.

    * வடகக்கூழில் பச்சை மிளகாயின் அளவைக் குறைத்து இஞ்சியை அரைத்துச் சேர்த்தால் மணமும் கூடும், காரமும் இருக்கும், உடம்புக்கும் நல்லது.

    * வடகம் மாவில் எலுமிச்சைச்சாறு அதிகமாக விடக்கூடாது. வடகம் பொரித்து எடுக்கும் போது சிவந்து விடும். அதுபோல் வடகம் மாவு கிளறும்போது சிறிது பாலை விட்டுக்கிளறினால் வடகம் வெண்மையாக இருக்கும்.

    * எந்தவித வடகக் கூழானாலும் அதில் சிறிது நெய் கலந்து விட்டால் பொரிக்கும்போது மணமாக இருக்கும்.

    * வடகம், வற்றல் வைக்கும் டப்பாக்களில் வெந்தயம் சிறிது போட்டு வைத்தால் அவை சீக்கிரமாக நமத்துப் போகாது.

    * வடகத்தில் பூச்சி வராமல் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க அதனுடன் மிளகாய் வற்றலையும் கொஞ்சம் போட்டு வைத்தால் போதும். மிளகாயின் காரத்தினால் பூச்சிகள் அண்டாது.

    * வடகம் பிழியும் அச்சின் உட்புறம் கொஞ்சம் எண்ணெய்யைத் தடவி வைத்தால், சிரமப்படாமல் வடகம் பிழியலாம்.

    * கொத்தமல்லி அதிகமாகவும், விலை மலிவாகவும் கிடைக்கும் நாட்களில் அதனுடன் உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து வடகமாகத்தட்டி வெயிலில் காயவைத்து குழம்பு, ரசத்துடன் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.

    * குழம்பு வடகம் உருட்டி வைக்கும்போது ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து உருட்டி வைத்தால் ஒரு வருடத்துக்கு கெட்டுப்போகாது.

    * ஜவ்வரிசி வடகம் முத்து முத்தாக இருக்க வேண்டுமென்றால் ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.

    • பேப்பர் விரித்து அப்பளம் வைத்தால் வெகு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
    • பூச்சி, புழுக்கள் வராமல் இருக்க வசம்பை போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

    * அப்பளம் வைக்கும் டப்பாவில் சிறிது அரிசி போட்டு அதன் மேல் பேப்பர் விரித்து அப்பளம் வைத்தால் வெகு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

    * சிறிய வகை மீன்களுக்கு அதிக மசாலா சேர்க்காமல் உப்பும், மிளகாய்த்தூளும் கலந்தாலே சுவை அதிகமாக இருக்கும்.

    * தக்காளி சட்னி தயார் செய்யும் போது வெங்காயம், தக்காளியின் அளவு குறைவாக இருந்தால் இரண்டையும் வதக்கியவுடன் சிறிது வறுத்த வேர்க்கடலை சேர்க்க சட்னியின் அளவு கூடும்.

    * கறிவேப் பிலையை காம்புடன் பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு அதன் பசுமை மாறாமல் இருக்கும்.

    * பூண்டுவை கேரட் துருவுவதில் துருவினால் அதன் தோல்கள் உரிந்து, உரிக்க சுலபமாக இருக்கும்.

    * இட்லி பாத்திரத்திற்கு அடியில் இரண்டு ரூபாய் நாணயத்தை போட்டு இட்லி வேக வைத்தால் தண்ணீரின் அளவை அதன் சத்தத்தை வைத்து கண்டு பிடிக்க எளிதாக இருக்கும்.

    * ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

    * வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

    * காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

    * காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

    * கேழ்வரகை ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போன்று செய்யலாம். கோதுமை அல்வாவைவிட ருசியாக இருக்கும்.

    • சிக்கன், மட்டன் சமைக்கும் போது சிறிதளவு தயிர் சேர்த்தால் சுவை கூடும்.
    • மோர்க் குழம்பில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்தால் வாசனையாக இருக்கும்

    * பாகற்காயை சிறு துண்டுகளாக வெட்டி, அரிசி கழுவிய தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்தால் அதன் கசப்புத் தன்மை நீங்கி விடும்.

    * சப்பாத்தி மிருதுவாக இருக்க சப்பாத்தி மாவை தேய்த்தவுடன் தோசைக்கல்லில் போட்டு எடுத்து விட வேண்டும்.

    * பொரியலுடன் வேர்க்கடலையை வறுத்துப் பொடியாக்கி இறுதியில் சேர்த்தால் அதன் சுவை கூடும்.

    * ஊறுகாயில் மஞ்சள் தூள் சேர்த்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். ஊறுகாய் மணமாகவும் இருக்கும்.

    * அல்வா செய்யும் போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் அதனுடன் சிறிது சோள மாவை சேர்த்தால் சரியான பதம் கிடைத்துவிடும். அல்வாவின் சுவையும் அதிகரித்து விடும்.

    * மோர்க் குழம்பு செய்யும்போது இறுதியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்தால் குழம்பு வாசனையாக இருக்கும்.

    * அரிசி வைக்கும் பாத்திரத்தில் சிறிதளவு காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் வண்டுகள் புகாது.

    * சர்க்கரைப் பாகு செய்யும் போது அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்தால் குலாப் ஜாமூன் விரியாமல் இருக்கும்.

    * சிக்கன், மட்டன் சமைக்கும் போது அதில் சிறிதளவு தயிர் சேர்த்தால் சுவை கூடும்.

    • சட்னி செய்யும் போது எள்ளை வறுத்து பொடித்து தூவினால் ருசி அதிகமாக இருக்கும்.
    • எண்ணெய் கொட்டினால் கோலமாவை போட்டு துடைத்தால் நீங்கி விடும்.

    * வெங்காய சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து தூவினால் ருசி அதிகமாக இருக்கும்.

    * துருபிடித்த தோசைக்கல், வாணலி உள்ளிட்ட துருபிடித்த பாத்திரத்தில் படிந்துள்ள கறைகளை நீக்க உருளைக்கிழங்கை பாதியாக வெட்டிக் கொள்ளவும். சிறிது உப்பு மற்றும் எண்ணெய்யை கலந்து அதில் உருளைக்கிழங்கை தோய்த்து, துருபிடித்த பாத்திரத்தை தேய்த்தால் பளிச்சென மாறிவிடும்.

    * சமையல் அறையில் கரப்பான் பூச்சி தொல்லையா? அந்த இடத்தில் கிராம்பை வைக்கலாம் அல்லது கிராம்பு எண்ணெய்யை சிறிது தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம். இதன் வாசனைக்கு கரப்பான் பூச்சி வராது. அடிக்கடி கிராம்பை மாற்ற வேண்டும்.

    * புதிதாக வாங்கிய மண் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சிறிது நேரம் வைத்து சூடேற்றிவிட்டு, பின் அதை கழுவினால் மண் வாசனை வராது. விரிசலும் ஏற்படாது

    * சாக்பீஸ்சை காடா துணியில் பொதிந்து வெள்ளிப்பொருள்கள் வைத்திருக்கும் இடத்தில் வைத்தால் அவை துரு பிடிக்காமலும், கருத்துப்போகாமலும் இருக்கும்.

    * அடைக்கு கடலைப்பருப்பை ஊறவைத்து அரிசி கலந்து அரைக்கும் போது வேகவைத்த உருளைக்கிழங்கு அல்லது மரவள்ளிக்கிழங்கை போட்டு அரைத்தால் அடை ருசியாக இருக்கும்.

    * சமையல் மேடையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன் மீது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கிவிடும்.

    * மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்சில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

    * வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

    * பாகற்காயை வில்லைகளாக நறுக்கி, எலுமிச்சை சாறில் சிறிது நேரம் ஊற வைத்து பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்.

    ×