என் மலர்tooltip icon

    சமையல்

    இது தெரிஞ்சா போதும்... சமையலில் நீங்களும் ஆகலாம் கில்லாடியாக...
    X

    இது தெரிஞ்சா போதும்... சமையலில் நீங்களும் ஆகலாம் கில்லாடியாக...

    • புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
    • எந்த வகை புலாவ் செய்தாலும் அரிசியை பத்து முதல்பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்கூடாது.

    காய், கூட்டு எல்லாம் மிஞ்சிப் போனால், இவற்றை ஒன்றாகக்கலந்து, கெட்டியாக புளி கரைத்துச் சேர்த்து, சிறிது காரத்தூள், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து ஒருகொதி வந்ததும் இறக்கி விடவும். ருசி மிகுந்த பொரித்த குழம்பு ரெடி.

    இடியாப்பம் மீந்து விட்டால் அதை வெயிலில் காய வைத்து எடுத்தால் புதுவகை வடகம் தயார்.

    புளிச்சாற்றில் உப்பு, பெருங்காயம் சேர்ந்து, பச்சை மிளகாய்களை கீறி ஊற வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்தால் சுவையான புளி மிளகாய் தயார்.

    முறுக்குமாவு, தேன்குழல் மாவு பிசையும்போது தண்ணீர் அதிகமாகி விட்டால் டிஷ்யூ பேப்பரில் மாவை வைத்து, சற்று புரட்டி எடுத்தால் ஈரம் உறிஞ்சப்பட்டு மாவு பக்குவம் ஆகி விடும்.

    சாம்பார் பொடி அரைக்கும்போது அத்துடன் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு அரைத்தால் வண்டு, சிறு பூச்சிகள் வராது. சாம்பார் செய்யும் போது மறக்காமல் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

    துவையல் அரைக்கும்போது, சின்னக் கிண்ணத்தில் புளியை தண்ணீர் தெளித்து சூடாக இருக்கும் குக்கர் மீது வைத்து 5 நிமிடங்கள் கழித்து அரைக்க உபயோகித்தால் துவையல் நன்றாக மசியும்.

    புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். அதுபோல் எந்த வகை புலாவ் செய்தாலும் அரிசியை பத்து முதல்பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்கூடாது. அப்போது தான் புலாவ் குழையாமல் இருக்கும்.

    குருமா, கிரேவி, நூடுல்ஸ் போன்றவற்றுக்கு தக்காளி சேர்ப்பதற்கு பதில் தக்காளி கெச்சப் சேர்த்து செய்து பாருங்கள். நிறமும், சுவையும் சூப்பராக இருக்கும்.

    உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது அதில் சிறிது சோம்பைத் தூளாக்கித் தூவினால் உருளைக்கிழங்கு வறுவல் கமகம வாசனையுடன் இருக்கும்.

    Next Story
    ×