என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா வாலிபர்"

    • வாலிபர், தனது வாட்ஸ் அப்-ல் காட்சி படமாக தன்னுடைய மனைவியின் நிர்வாண படத்தை வைத்துள்ளார்.
    • அந்த வாலிபரின் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே உள்ள திருக்காக்கரை பகுதியை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் அந்த வாலிபர், தனது வாட்ஸ் அப்-ல் காட்சி படமாக தன்னுடைய மனைவியின் நிர்வாண படத்தை வைத்துள்ளார். அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, தனது கணவரின் மீது பெரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த வாலிபரின் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மனைவியின் நிர்வாண படத்தை வாட்ஸ்-அப் காட்சி படமாக வைத்தது ஏன்? என்று அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது தனது மனைவிக்கு மற்றொரு ஆணுடன் தொடர்பு உள்ளதாகவும், அந்த நபருடன் உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக வீடியோ கால் பேசியதை மறைந்திருந்து ரகசியமாக புகைப்படம் எடுத்ததாகவும், தனது மனைவி மீது உள்ள கோபத்தில் அதனையே தனது வாட்ஸ்-அப் காட்சிபடமாக வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    பிரிந்து சென்ற மனைவி மீதான கோபத்தில் அவரது நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்-அப் காட்சி படமாக வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் எர்ணாகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 2 1/2 கிலோ போதை வஸ்துகளை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பி.என். ரோடு மில்லர் பஸ் ஸ்டாப், தனியார் உணவகம் முன்பு உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சமபவ இடத்திற்க்கு சென்ற போலீசார் அக்கடையில் சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரையும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 2 1/2 கிலோ போதை வஸ்துகளையும் பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து இருவரிடம் விசாரணை செய்தனர்.

    அப்போது விற்பனையில் ஈடுபட்டது கடை உரிமையாளர் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜஷ்வீர் என்பதும் இவருடன் விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவரையும் கைது செய்த போலீசார் கடை உரிமையாளர் ஜஷ்வீரை மத்திய சிறையிலும் 17 வயது சிறுவனை சிறார் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.

    ×