search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் பாதுகாப்பு"

    • மதுரை ஆதீனத்துக்கு மிரட்டல் வருவதால் கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி அர்ஜுன் சம்பத் மனு கொடுத்துள்ளார்.
    • மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    மதுரை

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று காலை மதுரை மாநகர கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது போலீஸ் கமிஷனரிடம் மதுரை ஆதீனத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி கோரிக்கை மனு கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை ஆதீனம் தற்போது அரசியல்வாதிகளாலும், ரசிகர்களாலும், இன்னபிற சக்திகளாலும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார். எனவே குரு சன்னிதானத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

    மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளைப் போல் நடந்து கொள்ளுகிறார். நாங்கள் அவர் மீது பாய்ந்து விடுவோம் என்று அறநிலைய துறை அமைச்சர் மிரட்டி வருகிறார்.

    இந்து மத சமய நம்பிக்கைகள் சீர்குலைவதும், கோவில்கள் அறநிலையத் துறை பிடியில் இருப்பதும் 50 வருடங்களாக தொடர்ந்து வருகிறது. இதற்கு எதிரான கருத்தைத்தான் ஆதீனம் வெளிப்படுத்தி உள்ளார். இது நடிகர் விஜய்க்கு அல்லது அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்து அல்ல. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்விஜய் ரசிகர்கள் ஆதீனம் மீது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

    தாய், தகப்பனை விட நடிகர் விஜய் பெரிய நபர் அல்ல. எனவே விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.

    எப்பொழுதும் போல மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் வழியில் பணிகளை செய்து வருகிறார். அவருக்கு இந்து சமய அமைப்புகள் ஆதரவாக உள்ளன. அவர் எல்லா ஆன்மீக சமய அமைப்புகளையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்.அறநிலையத் துறை அமைச்சரே மிரட்டுவதால், மத்திய அரசு மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    ஆதீனம் சர்ச்சைக்கு உள்ளான கருத்துக்களை சொல்லவில்லை . கோவில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்று சொல்லி வருகிறார். இந்த கருத்து எல்லா காலகட்டத்திலும் சொல்லப்பட்டது.

    சர்ச் சொத்து கிறிஸ்துவர்களிடமும், முஸ்லிம் சொத்து முஸ்லிம்களிடமும் இருக்கிறபோது, இந்து ஆலய சொத்துக்கள் மட்டும் ஏன் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும்? எங்களது உரிமைக் குரலாக ஆதீனம் இருந்து வருகிறார்.

    தி.மு.க.வோடு மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதற்கு மாநில அரசு செவி கொடுக்கவில்லை என்றால் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×