search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறுவை தொகுப்பு"

    • வேளாண் உழவர்நலத்துறை சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அண்டகாத்துறை, செட்டிபுலம், மகாராஜபுரம், கீழ்பாதி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா பிரந்தியங்கரை ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளான் உழவர்நலதுறை சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் 2022-23 இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வேளாண்மை அலுவலர் அனிஷ் தலைமை வகித்தார். வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வில்வநாதன் வரவேற்றார்.

    வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சதாசிவம், மூலக்கரை பிராந்தி–யங்கரை, வேதாரணியபுரம், அண்டகாத்துறை , செட்டிபுலம், மகாராஜபுரம், கீழ்பாதி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு இடு பொருட்களை வழங்கினார் .நிகழ்ச்சியில்க ரியாபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட தி.மு.க விவசாய அணி ஒன்றிய துணைச் செயலாளர் சேதுராஜன் , உதவிவேளாண்மை அலுவலர் ராஜசேகர், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜகோபால், அவை தலைவர் ஏகாம்பரம், சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாsளர் சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் அருள்மேரி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மோகன் மாவட்ட பிரதிநிதி செல்வம், கிளை செயலாளர்கள் அருள் ,உதயசூரியன், செந்தில் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • 22,892 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மூலம் 9,78,007 கிலோ யூரியா வழங்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை:

    சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றில் முதன்முறையாக முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 40,005 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 41,949 விவசாயிகள் கண்றியப்ப–ட்டுள்ளனர். அவர்களில் 22,892 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 8,916 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மூலம் 9,78,007 கிலோ யூரியா வழங்கப்பட்டுள்ளது. 10,86,963 கிலோ டிஏபி வழங்கப்பட்டுள்ளது. 5,43,066 கிலோ பொட்டாஷ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் 3,58,756 கிலோ யூரியா வழங்கப்பட்டுள்ளது. 3,98,688 கிலோ டிஏபி வழங்கப்பட்டுள்ளது. 1,99,241 கிலோ பொட்டாஷ் வழங்கப்பட்டுள்ளது.

    குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தை சேர்ந்த வசந்தகுமார் கூறும்போது:-எனக்கு உள்ள 3 ஏக்கர் நிலத்தில் மறையூர் கிராமத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறேன். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பு திட்டத்தில் எனக்கு 1 ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 24 கிலோ பொட்டாஷ் இலவசமாக பெற்றேன். இதனை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

    மயிலாடுதுறை மாவட்டம் முட்டம், அகரகீரங்குடி கிராமத்தை சேர்ந்த அன்பழகன் கூறும்போது:-

    எனக்கு உள்ள 4 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்து வருகிறேன். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பு திட்டத்தில் எனக்கு 1 ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 24 கிலோ பொட்டாஷ் இலவசமாக பெற்றேன் என்றார்.

    மறையூர் மேலத்தெரு ராஜசேகர் கூறும்போது:-

    எனக்கு உள்ள 2 ஏக்கர் நிலத்தில் மறையூர் கிராமத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறேன். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பு திட்டத்தில் எனக்கு 1 ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 24 கிலோ பொட்டாஷ் இலவசமாக பெற்றேன் என்றார். இதேப்போல் பலன் அடைந்த அனைத்து விவசாயிகளுக்கு முதலமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • கொரநாட்டு கருப்பூரில் நடந்த குறுவை தொகுப்பு திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுதா அம்பிகாபதி தலைமை தாங்கினார்.
    • 85 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் தொடக்க விழா கொரநாட்டு கருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுதா அம்பிகாபதி தலைமை தாங்கினார் .

    வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கலாவதி வரவேற்றார். இதில்அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கும்பகோணம் வட்டாரத்துக்குட்பட்ட 85 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்து இடுபொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கணேசன் ,பெருமாண்டி ஊராட்சி மன்ற தலைவர்ஆர்.கே. பாஸ்கர், அட்மா விவசாய ஆலோசனை குழு தலைவர் குமார், வேளாண் துணை அலுவலர் சாரதி, வேளாண்மை அலுவலர் சந்திரசேகர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலைவாணன் , செல்வம், அலெக்சாண்டர் , கீர்த்திகா மலைச்சாமி, பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் ராஜேஷ், அரவிந்தன், மணிபாரதி , கார்த்தி , உதவி அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.1.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்
    • விதைப்பு மற்றும் அறுவடை பணிக்கான ஊக்கத் தொகையாக பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.810 வரை வழங்கப்பட உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நிகழாண்டுக்கான குறுவை தொகுப்பு திட்டம் டெல்டா மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் மற்றும் ெஜயங்கொண்டம் டெல்டா பகுதிகளில் 3,000 ஏக்கரில் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இந்த குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரசாயன உரங்கள் முழு மானியத்திலும், நெல் விதைகள் மற்றும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்வதற்கான விதைகள் மற்றும் பிற பொருள்கள் வழங்குவதற்காக ரூ.1 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 466 மதிப்பிலான ஒரு மூட்டை யூரியா, 1 மூட்டை டி.ஏ.பி. மற்றும் 25 கிலோ பொட்டாஷ் அடங்கிய உரத் தொகுப்பு 100 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது.

    மேலும், விதை கிராம திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.17.50 வீதம் 40 டன் விதைகள் 5,000 ஏக்கருக்கு விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    குறுவை பருவத்தில் மாற்றுப்பபயிர் சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக சிறுதானிய பயிர்கள் சாகுபடிக்கு 500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரிகள், உயிர் உரங்கள் ஆகிய இடுபொருள்கள், விதைப்பு மற்றும் அறுவடை பணிக்கான ஊக்கத் தொகையாக பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.810 வரையிலும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.930 வரையிலும் மானியம் வழங்கப்பட உள்ளது.

    குறுவையில் பயறு வகை சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக 1,000 ஏக்கரில் உளுந்து பயிரிடும் போது விவசாயிகளுக்கு விதைகள், இலை வழி உரச்சத்து மற்றும் அறுவடை ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு 50 சதவீத மானியமாக ரூ.1,250-ம், ஆதிதிராவிட விவசாயிகளுக்க 70 சதவீத மானியத்தில் ரூ.1,570-ம் வழங்கப்பட உள்ளது.

    குறுவை பருவத்தில் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரி, நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து ஆகிய இடுபொருட்களுக்காக 400 ஏக்கரில் பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.4000 வரையிலும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.5600 வரையிலும் வழங்கப்பட உள்ளது.

    ஒரு விவசாயி அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். திருமானூர், தா.பழூர் மற்றும் ெஜயங்கொண்டம் டெல்டா வட்டார விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி உழவன் செயலி மூலம் தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×