என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு இடுபொருட்களை அன்பழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்
- கொரநாட்டு கருப்பூரில் நடந்த குறுவை தொகுப்பு திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுதா அம்பிகாபதி தலைமை தாங்கினார்.
- 85 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
சுவாமிமலை:
கும்பகோணத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் தொடக்க விழா கொரநாட்டு கருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுதா அம்பிகாபதி தலைமை தாங்கினார் .
வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கலாவதி வரவேற்றார். இதில்அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கும்பகோணம் வட்டாரத்துக்குட்பட்ட 85 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்து இடுபொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கணேசன் ,பெருமாண்டி ஊராட்சி மன்ற தலைவர்ஆர்.கே. பாஸ்கர், அட்மா விவசாய ஆலோசனை குழு தலைவர் குமார், வேளாண் துணை அலுவலர் சாரதி, வேளாண்மை அலுவலர் சந்திரசேகர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலைவாணன் , செல்வம், அலெக்சாண்டர் , கீர்த்திகா மலைச்சாமி, பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் ராஜேஷ், அரவிந்தன், மணிபாரதி , கார்த்தி , உதவி அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.