search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குதிரை பந்தயம்"

    • பந்தயங்களில் பங்கேற்ற குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின
    • குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    ஊட்டி,

    கோடை சீசன் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. கோடை விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது

    அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதம் 14-ந் தேதி (தமிழ் புத்தாண்டு) முதல் ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தொடர் மழை காரணமாக அனைத்து போட்டிகளையும் நடத்த முடியாமல் போனது.

    இதனால் நடப்பாண்டில் முன்கூட்டியே 1-ந் தேதி முதல் (அதாவது நேற்று) குதிரை பந்தயத்தை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தத

    இந்தநிலையில் நேற்று 136-வது குதிரை பந்தயம் ஊட்டியில் தொடங்கியது. முதல் நாளான நேற்று 8 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. பந்தயங்களில் பங்கேற்ற குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. முதல் போட்டியில் சாண்டாமரினா ஸ்டார் குதிரை வெற்றி பெற்றது. நீலகிரி முனிசிபாலிட் கோப்பைக்கான போட்டியில் 10 குதிரைகள் பங்கேற்றன. இதில் ராயல் ஐகான் குதிரை வெற்றி பெற்றது.

    குதிரையின் உரிமையாளர் எம்.ஏ.எம்.ராமசாமி அறக்கட்டளைக்கு ரூ.3 லட்சத்து 71 ஆயிரத்து 250, பயிற்சியாளர் பி.சுரேசுக்கு ரூ.45 ஆயிரம், ஜாக்கி சி.உமேசுக்கு ரூ.33,750 பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

    ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் வெற்றி பெற்ற குதிரையின் பயிற்சியாளர், ஜாக்கிக்கு கோப்பையை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் திடீரென கோடை மழை பெய்ய தொடங்கியது. மழை காரணமாக வெல்கம் கோப்பைக்கான 7 மற்றும் 8-ம் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன

    . குதிரை பந்தயத்தில் 37 ஜாக்கிகள், 24 பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் மொத்தம் ரூ.6 கோடியே 70 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. ஊட்டியில் குதிரை பந்தயம் மே மாதம் 28-ந் தேதி வரை நடக்கிறது.

    • இந்த ஆண்டு முன்கூட்டியே குதிரை பந்தயம் தொடங்கப்பட உள்ளது.
    • தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குதிரைகள் வரவழைக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    சுற்றுலா நகரமான ஊட்டிக்கு ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    அரசு சார்பில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தனியார் சார்பிலும் ஆண்டு தோறும் ஊட்டியில் குதிரை பந்தயம் மற்றும் நாய் கண்காட்சி போன்றவைகள் நடத்தப்படுகிறது. இது இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

    ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி தொடங்கி ஒன்றரை மாதங்கள் இந்த குதிரை பந்தயம் நடத்தப்படும். இதற்காக, சென்னை, புனே, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பந்தய குதிரைகள் கொண்டு வரப்படும். இந்த குதிரை பந்தயம் ஜூன் மாதம் வரை நடத்தப்படும். ஆனால், மே இறுதி வாரத்திற்கு மேல் மழை தொடங்கி மூன்று மாதங்களுக்கு கொட்டி தீர்க்கிறது.

    இதனால், ஜூன் மாதங்களில் குதிரை பந்தயம் நடத்துவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இம்முறை முன்னதாகவே ஊட்டியில் குதிரை பந்தயத்தை தொடங்கி முன்னதாக முடிக்க சென்னை ரேஸ் கிளப் முடிவு செய்துள்ளது.

    அதன்படி இந்த ஆண்டு முன்கூட்டியே குதிரை பந்தயம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குதிரைகள் வரவழைக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற 1-ந்தேதி முதல் குதிரை பந்தயம் தொடங்கப்பட உள்ளது. குதிரை பந்தயம் தொடங்க உள்ளதால் சுற்றுலாபயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். 1-ந் தேதி முதலே ஊட்டியில் அதிகளவில் சுற்றுலாபயணிகள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • உள்ளூர் குதிரை, புதிய குதிரை, 44 இன்ச் குதிரை, பெரிய குதிரை என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
    • வெற்றி பெற்ற குதிரைகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி குமாரபாளையம் தி.மு.க. சார்பில் ரேக்ளா பந்தயம் நகர செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளூர் குதிரை, புதிய குதிரை, 44 இன்ச் குதிரை, பெரிய குதிரை என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

    குமாரபாளையம் காவேரி நகர் முதல் அண்ணமார் கோவில் வரை 10 கி.மீ. தொலைவு எல்லைக்குள் இந்த போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    உள்ளூர் குதிரை போட்டியில் லோகு முதலிடமும், பெரியாண்டி அம்மன் 2-ம் இடமும், மாதம்மாள் 3-ம் இடமும், சிங்காரவேல் 4-ம் இடமும் பெற்றனர். புதிய குதிரைக்கான போட்டியில் சேலம் சந்திரன் முதலிடமும், பவானி செல்லவேலு 2-ம் இடமும், செல்டா 3-ம் இடமும், சிங்காரவேல் 4-ம் இடமும் பெற்றனர்.

    44 இன்ச் போட்டியில் சிங்காரவேல் முதலிடமும், ஆத்தூர் குண்டு 2-ம் இடமும், சிங்காரவேல் 3-ம் இடமும், டாலிகிங் நான்காம் இடமும் பெற்றனர். பெரிய குதிரைக்கான போட்டியில் மூர்த்தி முதலிடமும், சிங்காரவேல் 3-ம் இடமும், சப்பாணி கருப்பட்டி 3-ம் இடமும், சந்திரன் 4-ம் இடமும் பெற்றனர்.

    இதில் வெற்றி பெற்ற குதிரைகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நகர அவை தலைவர் ஜெகநாதன்,தொழிலதிபர் ராஜாராம், கவுன்சிலர் சத்தியசீலன், ரங்கநாதன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் இதில் பங்கேற்றனர். பந்தய ஒருங்கிணைப்பு, பந்தய மேற்பார்வை பணிகளை ஸ்ரீகற்பக விநாயகர் ரேக்ளா பந்தய குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியை தி.மு.க. நிர்வாகி ராஜ்குமார் தொகுத்து வழங்கினார்.

    • 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டன.
    • 18 நாட்கள் பந்தயங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 1905-ம் ஆண்டு முதல் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நடப்பாண்டில் ஊட்டியில் குதிரை பந்தயம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தொடங்கியது. போட்டியில் கலந்துகொள்ள பெங்களூரு, மும்பை, ஐதராபாத், சென்னை, புனே போன்ற இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டன.

    தினமும் காலை, மாலையில் குதிரைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டது. 7 வெளியூர் பயிற்சியாளர்கள் உள்பட 30 குதிரை பயிற்சியாளர்கள் மற்றும் 30 ஜாக்கிகள் பங்கேற்றனர். முக்கிய பந்தயங்களான கடந்த 7-ந் தேதி தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ், தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ் போட்டி மே 1-ந் தேதி, தி நீல்கிரிஸ் டர்பி ஸ்டேக்ஸ் போட்டி மே 26-ந் தேதி நடந்தது.

    மொத்தம் 18 நாட்கள் பந்தயங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஊட்டியில் உள்ள குதிரை பந்தய மைதான ஓடுதளம் சேதமடைந்தது.

    இதனால் நீலகிரி தங்க கோப்பை போட்டி உள்பட மீதமிருந்த பந்தயங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.



     


    ×