search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா பொருட்கள்"

    • போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஓசூர்:

    ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று மாலை, ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை, தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    அதில், 80 மூட்டை மற்றும் 4 அட்டைப்பெட்டிகளில் 640 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.5, 30,000 ஆகும். இதனை சரக்கு வேனுடன் பறிமுதல் செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தியதில், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து விற்பனைக்காக சேலம் பகுதிக்கு அந்த குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து வேன் டிரைவர் அஜித்குமார் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சேலம் சன்னியாசிகுண்டு குமரகிரி பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    திருநெல்வேலி உட்கோட்ட ரெயில்வே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மதியம் ஜார்கண்ட் மாநிலம் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் ரெயில் நிலையம் வரை கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயிலின் முன்பக்க பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 10 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து ரெயில்வே போலீஸ் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • சாக்கு பையில் விற்பனைக்காக 480 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
    • இதனையடுத்து குட்கா போதை பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குயராமை கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    பங்களாப்புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே பங்களாப்புதூர் போலீசார் ரகசிய தகவல் பேரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

    போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் பகுதியை சேர்ந்த குயராம் (22) என்பதும், அவர் கையில் வெள்ளை நிற பாலிதீன் சாக்கு பையில் விற்பனைக்காக 480 கிராம் எடையுள்ள ரூ.1,920 மதிப்புள்ள போதை தரக்கூடிய தடைசெய்யப்பட்ட 480 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து குட்கா போதை பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குயராமை கைது செய்தனர்.

    ×