search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராவல் மண்"

    • லாரிகளில் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
    • ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் செம்மண்ணை எடுத்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு அதிகளவில் செம்மண் மற்றும் கிராவல் மண் கிடைக்கும். இதனை ஒரு சிலர் லாரிகளில் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. இந்நிலையில் நடுக்குப்பத்திலிருந்து ஆலத்தூருக்கு செல்லும் வழியில் நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் செம்மண்ணை எடுத்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த விவசாயி ஒருவர் இது குறித்து கிராம மக்களிடம் கூறினார்.

    உடனடியாக 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைக் கண்ட செம்மண் கொள்ளையர்கள் வாகனங்களை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இது தொடர்பாக கிராம மக்கள் வருவாய் துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். செம்மண் மற்றும் கிராவல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. எந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் குருமூர்த்தி அளித்த புகாரின் பேரில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்?, இந்த வாகனங்களின் உரிமையாளர் யார்? என்பது குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாராபுரம் சாலையில் ஆர்.டி.ஓ திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • லாரி பறிமுதல் செய்யப்பட்டதுடன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    உடுமலை  :

    இயற்கை எழில் நிறைந்த மலையும் மலை சார்ந்த பகுதியை பின்னணியாக கொண்ட உடுமலை கனிம வளங்கள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள கனிம வளங்களை நோட்டமிடும் மர்ம ஆசாமிகள் லாரிகளில் திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்திச் செல்வதாக உடுமலை ஆர்.டி.ஓ வுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாராபுரம் சாலையில் ஆர்.டி.ஓ திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி விசாரணை மேற்கொண்டார். அதில் முறையான ஆவணங்கள் இன்றி மைவாடி பகுதியில் இருந்து கிராவல் மண் அள்ளிக் கொண்டு வந்தது தெரிந்தது. அதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ லாரியை பறிமுதல் செய்து உடுமலை போலீசில் ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து போலீசார் உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் லாரி பறிமுதல் செய்யப்பட்டதுடன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    • விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
    • கனரக வாகனங்களால் காண்டூர் கால்வாய்ப்பாலம் சேதம் அடைகிறது.

    உடுமலை :

    புலிகள் காப்பக வனத்தை ஒட்டி கிராவல் மண் எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை நீர்வள ஆதார செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ரத்ன சபாபதி , செயலாளர் கனகவேல் ஆகியோர் உடுமலை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- உடுமலை வட்டம் தளி கிராமம், திருமூர்த்தி நகர் , பொன்னாளம்மன் சோலைப் பகுதியில் சட்டவிரோதமாக கிராவல்மண் எடுக்க எந்திரங்களுடன் சிலர் வந்தனர்.

    விவசாயிகள் திரண்டு அதை தடுத்து நிறுத்தினர். புலிகள் காப்பகத்தின் தடை செய்யப்பட்ட பகுதிக்கு வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் அனுமதி இல்லாமல் கிராவல் மண் அள்ளுகின்றனர். கனரக வாகனங்களால் காண்டூர் கால்வாய்ப்பாலம் சேதம் அடைகிறது. எனவே அதிகாரிகள் இதை தடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • கிராவல் மண் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது.
    • இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிராமணம்பட்டி ஊராட்சியில் உள்ள குண்டேந்தல்பட்டி கிராமத்தில் இருந்து வரும் பிராமணங்கண்மாய் சுமார் 300 ஏக்கர் பரப்பளவும் 1500 ஆயகட்டுதாரர்களும் கொண்ட மிகப்பெரிய கண்மாயாகும்.

    பல வருடங்களாக கண்மாய்க்கு குடிமராமத்து பணி நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு சுமார் ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கலிங்கு பாதை, வரத்து கால்வாய், சீமை கருவேல மரங்கள் அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் பொதுப்பணி துறையினரால் மேற்கொ ள்ளப்பட்டு வந்தது.

    தற்சமயம் காரைக்குடி யிலிருந்து மதுரை வரை 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வரும் காரணத்தினால் அப்பணிக்காக இக்கண்மா யின் வரத்து கால்வாய் அருகே 2 டிப்பர் லாரி மற்றும் ஒரு மண் அள்ளும் எந்திரத்துடன் கிராவல் மண் எடுக்கப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த இந்தப்பகுதி கிராம மக்கள் கிராவல் மண் அள்ளுவதை கண்டித்து அங்கு முற்றுகையிட்டனர். தொடர்ந்து மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் சிறைப்பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோஷ்டி யூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் கலையரசன், கண்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • விருத்தாசலம் அருகே கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    • தப்பியோடிய புலியூர் டிரைவர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் கோ.பூவனுார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. டிரைவர் தப்பியோடினார். மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, லாரியை, பறிமுதல் செய்தனர். தப்பியோடிய புலியூர் டிரைவர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.

    • கிராவல் மண் குவாரியை மூட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லங்குடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலைப்பணிகளுக்கு என்று கிராவல் மண் குவாரி செயல்பட்டு வந்தது. இதனையடுத்து குவாரியில் இருந்து வெளியே வந்த டிப்பர் லாரிகளை வழிமறித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதனையறிந்த வட்டா ட்சியர், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் இதுதொடர்பாக நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், கிராம மக்களை சமரசம் செய்து உங்கள் கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் கொடுங்கள் என்றார்.

    அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், கண்ணங்குடி ஒன்றியத்தில், கண்டியூர் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் மதுசூதனரெட்டி கலந்து கொண்டதை அறிந்து நேரில் சென்று மனு அளித்தனர்.

    அதில் கல்லங்குடி, புதூர், தே.வயல் கிராம மக்களுக்கும், எங்களுக்கும் மற்றும் எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் தரும் இடமாக செல்லியம்மன் கோவில் ஊரணி உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் ஊரணிக்கு மழை நீர் வருவது தடைபட்டு விடும். மேலும் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் ஆழமான குவாரியில் விழும் சூழ்நிலை உள்ளது. எனவே தாங்கள் குவாரியை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    கிராவல் மண்ணை சட்டவிரோதமாக எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஆறுமுகம் மனு கொடுத்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஆறுமுகம் என்பவர்  வந்து மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பவானி தாலுகா கவுந்தபாடி, சிங்கநல்லூர் கிராமம், மாணிக்க வலசு பகுதியிலும், குறிஞ்சி கல்பாவி கிராமம், எட்டிகுட்டை, குறிச்சி கரடு போன்ற பகுதிகளிலும் கிராவல் மணல் சட்டவிரோதமாக திருடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையை சேர்ந்த 2 பேர் ஒரு யூனிட் ரூ.400 வீதம் 4 யூனிட்டுக்கு ரூ.1600-யை கொடுத்து தான் கிராவல் மண் ராயல்டி என்று நூதன முறையில் பணம் வசூல் செய்கிறார்கள்.

    அவர்கள் அதிகாரிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி சென்னிமலையில் உள்ள கல்குவாரி அனுமதி சீட்டு (ரப்கல், கிராவல்) சீட்டு தருகிறார்கள். நீங்கள் எங்களுக்கு ராயல்டி கொடுத்துவிட்டு கிராவல் மண் எடுத்து செல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.

    மேலும் குறிச்சி, கல்பாவி கிராமம், எட்டு குட்டை, குறிச்சிகரடு பொதிகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு கிராவல் மண் எடுப்பதாக அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு தனியாருக்கு வணிக நோக்கத்திற்கு விற்பனை செய்கிறார்கள். எனவே அரசு அனுமதி இல்லாமல் கிராவல் மண் எடுப்பதற்கு தடை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    ×