search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராவல் மண்ணை சட்டவிரோதமாக எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    கிராவல் மண்ணை சட்டவிரோதமாக எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கிராவல் மண்ணை சட்டவிரோதமாக எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஆறுமுகம் மனு கொடுத்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஆறுமுகம் என்பவர் வந்து மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பவானி தாலுகா கவுந்தபாடி, சிங்கநல்லூர் கிராமம், மாணிக்க வலசு பகுதியிலும், குறிஞ்சி கல்பாவி கிராமம், எட்டிகுட்டை, குறிச்சி கரடு போன்ற பகுதிகளிலும் கிராவல் மணல் சட்டவிரோதமாக திருடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையை சேர்ந்த 2 பேர் ஒரு யூனிட் ரூ.400 வீதம் 4 யூனிட்டுக்கு ரூ.1600-யை கொடுத்து தான் கிராவல் மண் ராயல்டி என்று நூதன முறையில் பணம் வசூல் செய்கிறார்கள்.

    அவர்கள் அதிகாரிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி சென்னிமலையில் உள்ள கல்குவாரி அனுமதி சீட்டு (ரப்கல், கிராவல்) சீட்டு தருகிறார்கள். நீங்கள் எங்களுக்கு ராயல்டி கொடுத்துவிட்டு கிராவல் மண் எடுத்து செல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.

    மேலும் குறிச்சி, கல்பாவி கிராமம், எட்டு குட்டை, குறிச்சிகரடு பொதிகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு கிராவல் மண் எடுப்பதாக அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு தனியாருக்கு வணிக நோக்கத்திற்கு விற்பனை செய்கிறார்கள். எனவே அரசு அனுமதி இல்லாமல் கிராவல் மண் எடுப்பதற்கு தடை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×