search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றுக்குள்"

    • சேகர் (வயது 50) இவர் தோட்டத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அதிகமாக இருந்தது.
    • சுத்தம் செய்வதற்காக வளையப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள சித்ர மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50).

    இவர் தோட்டத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அதிகமாக இருந்தது. அதை சுத்தம் செய்வதற்காக வளையப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்தார்.

    பொக்லைன் எந்திரத்தை டிரைவர் சஞ்சீவி என்பவர் இயக்கி, கிணற்றை சுற்றியிருந்த மரங்கள் மற்றும் செடி கொடிகளை அகற்றிக் ெகாண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பொக்லைன் எந்திரம் விழுந்தது.

    அப்போது, டிரைவர் சஞ்சீவி மரக்கிளையை தாவி பிடித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து, நாமக்கல்லில் இருந்து ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் சுமார் 7 மணி நேரம் போராடி, கிணற்றில் விழுந்த பொக்லைன் எந்திரம் மீட்கப்பட்டது.

    • கிணற்றுக்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று தவறி விழுந்து மிதந்து கொண்டிருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் கருவி மூலம் பாம்பை லாவகமாக பிடித்து மேலே கொண்டு வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே பி.ஆர்.எஸ் ரோட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் 50 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் தற்போது 30 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது.

    இந்த கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்ற போது கிணற்றுக்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று தவறி விழுந்து மிதந்து கொண்டிருந்ததை பார்த்தனர்.

    பின்னர் இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி பாம்பு பிடிக்கும் கருவி மூலம் கட்டு விரியன் பாம்பை லாவகமாக பிடித்து மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் அந்த பாம்பை சென்னிமலை வன காவலர் மகாதேவனிடம் ஒப்படைத்தனர்.

    • பூனை ஒன்று எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி பூனையை உயிருடன் மீட்டனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் ரோடு மொண்டிப் புளியங்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 40). இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

    இவரது வீட்டில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. சுமார் 80 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 10 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை இவர் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த பூனை ஒன்று எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது.

    இதனையடுத்து சின்னச்சாமி உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    நிலைய அலுவலர் நவீந்தரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி பூனையை உயிருடன் மீட்டனர்.

    பெருந்துறை அருகே 80 அடி கிணற்றுக்குள் விழுந்த நாய்க்குட்டி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள சின்ன மடத்து பாளையம் கோவை மெயின் ரோடு பகுதியில் முருகன் என்பவரது வீட்டுக்கு அருகே 80 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. அந்த பகுதியில் ஒரு நாய் குட்டி வந்தது.

    அப்போது அந்த கிணற்றுக்குள் நாய்க்குட்டி எதிர்பாராதவிதமாக விழுந்து விட்டது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி, கிணற்றுக்குள் இறங்கி நாய்க்குட்டியை உயிருடன் மீட்டனர்.

    ×