search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலிப்பணியிடங்கள்"

    • திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், 45வயதுக்குஉட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
    • மாதம் ரூ.30 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்ட சமுக நலத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிா்வாகி, மூத்த ஆலோசகா், தகவல் தொழில் நுட்பப் பணியாளா், களப் பணியாளா் மற்றும் பாதுகாவலா், ஓட்டுநா் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக தொகுப்பூதியத்தில் பணியாற்ற தகுதிவாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

    இதில் மைய நிா்வாகி பணியிடத்துக்கு திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், 45 வயதுக்குஉட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எம்எஸ்டபிள்யூ அல்லது சட்டப்படிப்பு படித்திருப்பதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடா்பான பணியில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். அதே போல, மூத்த ஆலோசகா் பணிக்கு மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

    தகவல் தொழில்நுட்பப் பணியாளா் பணிக்கு 40 வயதுக்கு மிகாமலும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். சுழற்சி முறையில் 24 மணி நேரம் பணிபுரிய ஆா்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு பட்டப்படிப்பு முடித்து கணினி அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    களப்பணியாளா் பணிக்கு எம்எஸ்டபிள்யூ படித்தவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், சுழற்சி முறையில் பணிபுரிய ஆா்வம் உள்ளவராகவும், 181 மற்றும் இதர உதவி எண்கள் மூலம் வரும் அழைப்பு தொடா்பான உதவிகளுக்கு தேவை அறிந்து உதவும் எண்ணம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். பெண்களுக்கு விழிப்புணா்வு மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் அரசுத் திட்டங்கள் சென்றடைய செய்ய ஆா்வம் உடையவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    பாதுகாவலா் மற்றும் ஓட்டுநா் பணிக்கு திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்தவராகவும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தவறியவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆகவே மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னா் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலா், அறை எண் 35, 36, தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா் என்ற முகவரிக்கு நவம்பா் 10-ந் தேதிக்குள் தபால் மூலமாகவோ மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விண்ணப்பங்களை புகைப்படத்துடன் வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
    • விண்ணப்பங்களை www.tirupur.nic.in இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் நிறுவனம் சார்ந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், நிறுவனம் சாராத குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூக பணியாளர் (பெண்கள் மட்டும்), ஆற்றுப்படுத்துனர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தற்காலிகமாக ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதால் இதை அடிப்படையாக கொண்டு அரசு பணி கோர முடியாது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பங்களை புகைப்படத்துடன் வருகிற 20-ந் தேதி மாலை 5.45 மணிக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்.633, 6-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0421 2971198 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை www.tirupur.nic.in இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • 2014ம் ஆண்டுக்கு பின்னர் புதிய பணியாளர்களே நியமிக்கப்படவில்லை.
    • மகளிருக்கு கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டதால், கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    பல்லடம் :

    அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்லடம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறியதாவது:- அரசு போக்குவரத்து கழகத்தில்,கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் புதிய பணியாளர்களே நியமிக்கப்படவில்லை.

    சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் புதிதாக ஆண்டு தோறும் பஸ்கள் வாங்கப்படுகின்றன.ஆனால் அதற்கேற்ப பணியாளர்கள் இல்லாததால் எங்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தின் போது 58ஆக இருந்த ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டது. இதனால் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் மீண்டும் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், மகளிருக்கு கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டதால், கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமாகவும் புதிதாக பணியாளர்களை நியமிப்பது தாமதமாகி வருகிறது. பணியாளர்கள் அதிகரிக்கப்படாததால், தற்போதுள்ள ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுகிறது.

    மேலும் புதிதாக வேலைக்கு சேர காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. எனவே தமிழக அரசு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×