search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணிபெண்"

    • பேபிதேவிக்கு பிரசவ வலி அதிகரித்து பனிக்குடம் உடைந்து குழந்தையின் தலை வெளியே வந்தது.
    • சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய், சேய் இருவரையும் சேர்த்தனர்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் கைலாஷ். இவரின் மனைவி பேபிதேவி(23).

    இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு நேற்றிரவு வீட்டில் இருக்கும்பொழுது பனிக்குடம் உடைந்தது. இதனால் மிகுந்த வலியுடன் துடித்தார். இதை பார்த்த அவரது கணவர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அவருடைய வீட்டிற்கு வந்து பார்த்தபோது பேபிதேவிக்கு பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்தது.

    இதனால் ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் முருகன் அவருடைய வீட்டிலேயே பைலட் பாண்டி உதவியுடன் இளம்ெபண்ணுக்கு பிரசவம் பார்த்தார்.

    அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது இதையடுத்து சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய், சேய் இருவரையும் சேர்த்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அப் பகுதியில் உள்ள மக்கள் தங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரித்தனார்.

    • புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் விசாரணை நடத்தினார்.
    • தப்பி ஓடிய நபர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் அருகே உள்ள பரப்பு விளையைச் சேர்ந்த வர் ராஜன் (வயது 38), தச்சு தொழிலாளி.

    அதே பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    அவர் சம்பவத்தன்று பகல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென அவர் அலறவே அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அந்தப் பெண், தனது வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து ராஜன் தகராறு செய்ததாக கூறினார்.

    இதுபற்றி சுசீந்திரம் போலீசிலும் இளம்பெண் புகார் செய்தார். அதில், நான் வீட்டில் தனியாக இருந்த போது, ராஜன் அத்துமீறி நுழைந்தார். அவர் எனது கையைப் பிடித்து இழுத்து தகராறு செய்தார். நான் கூச்சலிட்டதால், அவர் மிரட்டினார். மேலும் உனது கணவரிடம் கூறி னால், இருவரையும் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். ஆனால் நான் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த ராஜன் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார் என குறிப்பிட்டு இருந்தார்.

    புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெப கர் விசாரணை நடத்தினார். தப்பி ஓடிய ராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×