search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமவள கொள்ளை"

    • தென்பெண்ணை ஆறு நீர் பகிர்வு குறித்து 4 வாரங்களில் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • தமிழகத்தில் தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என தமிழக கவர்னர் ரவி கூறி உள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. இதில் நீர் வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென்பெண்ணை ஆறு நீர் பகிர்வு குறித்து 4 வாரங்களில் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழக நீர்வளத்துறை செயலாளர் டெல்லி சென்றுள்ளார். அவர் வந்த பின்னர் அதை பற்றி கருத்து தெரிவிக்கிறேன்.

    தமிழகத்தில் தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என தமிழக கவர்னர் ரவி கூறி உள்ளார். பாவம் கவர்னர் அவர் எதையாவது சொல்லுவார்.

    தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அது உப்பு சப்பில்லாதது. அவர் ஆதாரப்பூர்வமாக தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் அனுமதியின்றி குவாரிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
    • அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் குவாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் அனுமதியின்றி குவாரிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் மண் மற்றும் மணல் கொள்ளை கிரானைட் குவாரிகள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் கிரானைட் குவாரிகள் அதிக அளவு மறைமுகமாக செயல்பட்டு வருகின்றன.

    இதனை கனிமவளத் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மலைப்பாங்கான பகுதிகளில் குவாரிகள் திருட்டுத்தனமாக நடைபெறுவதால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

    எனவே அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் குவாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×