search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தியவர்"

    • பெருந்துறை அருகே மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • அவரிடம் இருந்து 1,280 கிலோ ரேஷன் அரிசியையும், மொபட்டி னையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த பெருந்துறையில் ரேஷன் அரிசி கடத்தி வந்து, வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில், பெருந்துறை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் படியாக மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    இதில், அவரது மொபட்டில் 100 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்க ப்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பவானி பழனிபுரத்தை சேர்ந்த செல்வம்(47) என்பதும், வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததையும் ஒப்புக்கொண்டார்.

    அந்த அரிசியை வட மாநிலத்தவ ர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து செல்வத்தை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்த னர். அவரிடம் இருந்து 1,280 கிலோ ரேஷன் அரிசியையும், மொபட்டி னையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • புளியம்பட்டி அருகே காரில் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் அவரிடமிருந்து 650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தி வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்கும் சம்பவம் நடந்து வருகிறது.

    இதனை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தர வின் பேரில் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ரேஷன் அரிசி கடத்துபவர்களை பிடித்து ரேஷன் அரிசி யை பறிமுதல் செய்து வரு கின்றனர்.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் புளியம்பட்டி அடுத்த ஆனூர் ரோடு, அவிநாசி பிரிவு பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒருவர் காரில் வந்து கொண்டிருந்தார். போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 650 கிலோ ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து விசாரணை நடத்திய போது காரை ஓட்டி வந்தவர் சத்தியமங்கலம், நேரு நகரை சேர்ந்த சதீஷ்குமார் (38) என தெரியவந்தது. இவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு வடமாநிலத்தவர்களுக்கு விற்க சென்றது தெரி யவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலம் வழியாக சென்ற ரெயிலில் 19 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சாவை கடத்தி தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தனிப்படை அமைத்து ரெயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதையொட்டி நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆர்.கே .மீனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்,போலீசார் கமலநாதன், சவுந்தரராஜன், பெரியசாமி, செந்தில்குமார் மற்றும் ஈரோடு ஆர்.பி. எப் சப்-இன்ஸ்பெக்டர் தரம் சிங் மீனா மற்றும் குழுவினர் , போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உள்ளிட்ட தனிப்படையினர் புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினர்.

    சேலம் ரெயில் நிலையத்தில் தொடங்கி ஈரோடு வரை இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது எஸ்-1 பெட்டியில் சந்தேகப்படும் படி பெரிய கைப்பை இருந்தது. போலீசார் அந்த பேக் யாருடையது என்பது குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வனபார்தி பாபிராஜ்னுடையது என தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பேக்கை திறந்து சோதனை செய்ததில் 19 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வனபார்தி பாபிராஜனை கைது செய்து 19 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர், பின்னர் சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×