search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    19 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபர் கைது
    X

    கைதான ஆந்திர வாலிபருடன் அவரை பிடித்த போலீசார்.

    19 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபர் கைது

    சேலம் வழியாக சென்ற ரெயிலில் 19 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சாவை கடத்தி தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தனிப்படை அமைத்து ரெயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதையொட்டி நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆர்.கே .மீனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்,போலீசார் கமலநாதன், சவுந்தரராஜன், பெரியசாமி, செந்தில்குமார் மற்றும் ஈரோடு ஆர்.பி. எப் சப்-இன்ஸ்பெக்டர் தரம் சிங் மீனா மற்றும் குழுவினர் , போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உள்ளிட்ட தனிப்படையினர் புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினர்.

    சேலம் ரெயில் நிலையத்தில் தொடங்கி ஈரோடு வரை இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது எஸ்-1 பெட்டியில் சந்தேகப்படும் படி பெரிய கைப்பை இருந்தது. போலீசார் அந்த பேக் யாருடையது என்பது குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வனபார்தி பாபிராஜ்னுடையது என தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பேக்கை திறந்து சோதனை செய்ததில் 19 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வனபார்தி பாபிராஜனை கைது செய்து 19 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர், பின்னர் சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×