search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல் ஊழியர் பலி"

    • மதுரை அருகே ரெயில் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.
    • மதுரை ெரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் கற்பகம் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(51).ஓட்டல் ஊழியர். நேற்று மாலை இவர் திருமங்கலம்-விமான நிலைய ரோட்டில் உள்ள ரெயில்வே கேட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    அவரது உடலை ரெயில் என்ஜின் 20 மீட்டர் தூரத்திறகு இழுத்து சென்றது. மதுரை ெரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலமேடு அருகே டிராக்டர் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.
    • விபத்துக்கு காரணமான டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    திண்டுக்கல் மாவட்டம் அய்யாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது27). இவர் அதே பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு ஜோதிமணி மோட்டார்சைக்கிளில் அய்யாபட்டியில் இருந்து மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள எர்ரம்பட்டி யில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார். பாலமேடு அருகே ராஜாக்காள்பட்டி ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே வேகமாக வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜோதிமணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த பாலமேடு போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து ஜோதிமணி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்துக்கு காரணமான டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புவனகிரி அருகே கார் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.
    • புவனகிரி பஸ் நிலையத்திலிருந்து இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.

    கடலூர்:

    புவனகிரி அருகே ஆதிவரகநந்தம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 54) சிதம்பரத்தில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். நேற்று பணி முடிந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக சிதம்பரத்திலிருந்து புவனகிரிக்கு பஸ்சில் வந்தார். புவனகிரி பஸ் நிலையத்திலிருந்து இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது புவனகிரியில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் மோட்டார் சைக்கிள் வந்த போது எதிரே வந்த கார் மோதி ரவி தூக்கி வீசப்பட்டார்.

    இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து ரவியை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ரவி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    ×