search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.சி."

    • 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டுகிறது.
    • வீடுகளில் எந்நேரமும் மின் விசிறியை சுழல விட வேண்டிய நிலை தான் காணப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் சமீபநாட்களாக வெயில் வாட்டி வதைக்க துவங்கியு ள்ளது. 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டுகிறது.கோடை துவங்கியுள்ள நிலையில் வெயிலின் சுடுதல் மக்களை வாட்டி வதைக்க துவங்கியிரு க்கிறது.கடந்த சில நாட்களாக அதிகபட்சம் 39 டிகிரி செல்சியஸ் அதாவது 102 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் வாட்டுகிறது. இதனால் ஏர் கூலர், ஏ.சி., விற்பனை அதிகரிக்க துவங்கியிரு க்கிறது. வீடுகளில் எந்நேரமும் மின் விசிறியை சுழல விட வேண்டிய நிலை தான் காணப்படுகிறது.

    சில நாட்களில் பள்ளி தேர்வுகள், முடியவுள்ள நிலையில் ஊட்டி, கொடை க்கானல் உள்ள மலைப் பிரதேசங்களுக்கு செல்லவும் மக்கள் தயாராகி வருகின்றனர்.குறைந்தபட்சம் வார விடுமுறை நாட்களிலா வது, வெயிலில் இருந்து தப்பிக்க மலை பிரதேசம் செல்லும் திட்டமிடலில் பலரும் உள்ளனர். ஊட்டியில் அதிக பட்சம் 24 டிகிரி செல்சியது அதாவது 74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவுகிறது.

    • ஏப்ரல் 5 முதல் 26 வரை இரண்டு அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது.
    • கோவை- ஹிசார் (22476) அதிவிரைவு ரெயில் வாரம் தோறும் சனிக்கிழமை இயக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    ஹரியானா மாநிலம் ஹிசார் - கோவை இடையேயான அதிவிரைவு ெரயிலில் 2 அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுவதாக தெற்கு ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து தெற்கு ெரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஹரியானா மாநிலம் ஹிசார் - கோவை (22475) அதிவிரைவு ரெயில், வாரம் தோறும் புதன்கிழமை இயக்கப்படுகிறது. ஏப்ரல் 5 முதல் 26 வரை இரண்டு அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது. மறுமார்க்கத்தில் கோவை- ஹிசார் (22476) அதிவிரைவு ரெயில் வாரம் தோறும் சனிக்கிழமை இயக்கப்படுகிறது. ஏப்ரல் 8 முதல் 29 வரை இரண்டு அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. வள்ளியூர் அருகே சென்ற போது குளிர்சாதன வசதி கொண்ட ரெயில் பெட்டி ஒன்றில் ஏசி செயல்படவில்லை
    • வள்ளியூர் ரெயில் நிலையத்தில் மாலை 6.47 மணி முதல் இரவு 7.15 மணி வரை சுமார் ½ மணி நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தினமும் மாலை கன்னி யாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலையில் 6.10 மணிக்கு சென்னையை சென்றடையும்.

    நேற்று வழக்கம்போல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 5.45 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது. நாகர்கோவிலுக்கு 6.07 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் இங்கிருந்து ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. வள்ளியூர் அருகே சென்ற போது குளிர்சாதன வசதி கொண்ட ரெயில் பெட்டி ஒன்றில் ஏசி செயல்படவில்லை. இதனால் அதில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    இதையடுத்து பயணிகள் ரெயிலை நடு வழியில் நிறுத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரெயில் பயணி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நெல்லை சென்றதும் மாற்று குளிர்சாதன பெட்டி பொருத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வள்ளியூரில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு சென்றது. வள்ளியூர் ரெயில் நிலையத்தில் மாலை 6.47 மணி முதல் இரவு 7.15 மணி வரை சுமார் ½ மணி நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

    வள்ளியூரில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சென்றடைந்ததும் குளிர்சாதன பெட்டியை மாற்ற அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து பழுதான குளிர்சாதன பெட்டியை மாற்றி விட்டு அதற்கு பதிலாக புதிதாக ஒரு குளிர்சாதன பெட்டி இணைக்கப்பட்டது.

    இதனால் நெல்லையி லிருந்து ரெயில் புறப்பட்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. வள்ளியூர் மற்றும் நெல்லை யில் ரெயில் தாமதமாக சென்றதால் இன்று அதிகாலை சென்னைக்கும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக சென்று சேர்ந்தது.

    ×