search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலெக்ட்ரிக் வாகனங்கள்"

    • அட்வென்ச்சர் பைக் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த முயற்சி.
    • உற்பத்தி மாதம் 25 ஆயிரம் யூனிட்களாக அதிகரிப்பு.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஐ.சி. என்ஜின் மாடல்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

    எலெக்ட்ரிக் மற்றும் அட்வென்ச்சர் பைக் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தும் முயற்சியில் டி.வி.எஸ். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது இரண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் டி.வி.எஸ். நிறுவனம் எதிர்காலத்தில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களையும் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி டி.வி.எஸ். நிறுவனம் 5 கிலோவாட் முதல் 25 கிலோவாட் வரையிலான திறன் கொண்ட வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    டி.வி.எஸ். நிறுவனம் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியை மாதம் 25 ஆயிரம் யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டிலேயே டி.வி.எஸ். நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டி.வி.எஸ். எக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

    ×