search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊக்கத்தொகை"

    • திருப்பூர் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 775 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
    • ஆன்லைன் மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு ) சின்னசாமி கூறியதாவது:- பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் விதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வேளாண்மை இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 775 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

    இதுவரை பதிவு செய்த தேதியின் அடிப்படையில், 11 தவணை வரை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போது 12வது தவணை தொகை பெறுவதற்கு ஆதார் ஆவணங்களை பதிவேற்றம் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் இதுவரை 33 ஆயிரத்து 524 விவசாயிகள் மட்டுமே ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள 55 ஆயிரத்து 251 விவசாயிகள் ஜூலை 31 ந் தேதிக்குள் 'இ-கே.ஒய்.சி.,' முறையில் ஆன்லைன் மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.பெரும்பாலான விவசாயிகள் புதுப்பிக்காத காரணத்தால், மத்திய அரசு, ஆகஸ்டு 31-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது.ஆதார் விவரங்களை இ-சேவை மையத்தில், கிராம தபால் நிலையத்தில் அல்லது ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.எனவே தவறாமல் 31ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்து, புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைக்கும். இதுகுறித்து, கூடுதல் தகவல் பெற அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
    • நில விபரம் 'அப்டேட்' செய்யப்படுகிறது.

    அவினாசி

    பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் வழங்கி பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதன் மூலம் அவர்களின் நில விபரம் 'அப்டேட்' செய்யப்படுகிறது. தங்களை இணைத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே வரும் நாட்களில் கவுரவ ஊக்கத்தொகை கிடைக்கும் என்ற நிலையில் அவிநாசி வட்டாரத்தில் 67 சதவீத விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை அப்டேட் செய்துள்ளனர்.அடுத்த ஊக்கத்தொகை பெற விரைவில் தங்கள் பதிவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • மாநில அபிவிருத்தி திட்டத்தில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
    • இந்த தகவலை ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது. அதனை ஒட்டிய, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நிமிட்டிபாளையம், சின்னமல்லான்பாளையம் போன்ற வருவாய் கிராமங்களில் தக்காளி, கத்தரி, அவரை, வெண்டை, கீரை, பீர்க்கன், புடலை, பாகல் போன்ற காய்கறி பயிர்களும், மா, வாழை, கொய்யா, நெல்லி போன்ற பழ வகைகளும், 1,200 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர்.

    பெருந்துறை உழவர் சந்தையிலும், அதனை ஒட்டிய வருவாய் கிராமங்களிலும் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்செல்வி ஆய்வு செய்து, விவசாயிகளை சந்தித்து, 'இப்பகுதி விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை, உழவர் சந்தைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம்.

    பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்தவும், காய்கறி வரத்தை அதிகரிக்க மாநில அபிவிருத்தி திட்டத்தில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    இந்த தகவலை ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

    ×