search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக புத்தக தினம்"

    • இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.
    • கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    புதிய உலகத்திற்கான திறவுகோல் - அறிவின் ஊற்று - கல்விக்கான அடித்தளம் - சிந்தனைக்கான தூண்டுகோல் - மாற்றத்திற்கான கருவி - மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை!

    புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்!

    புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.

    கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


    • ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது.
    • புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கமாகத் தி.மு.க.வினர் முன்னெடுக்கிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக புத்தக தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

    ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது. நாம் அறியாத உலகத்தைக் காட்டுகிறது. அறிவூட்டுகிறது! நம்மை பண்படுத்துகிறது!

    அதனால்தான், புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கமாகத் தி.மு.க.வினர் முன்னெடுக்கிறோம்.

    புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் வகையில், நமது திராவிட மாடல் அரசு மாவட்டங்கள் தோறும் புத்தகக் காட்சிகளை நடத்துவதுடன், நூலகங்களுக்கும் புத்துயிர் அளித்துள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×