search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்நிலை"

    • மீட்பு பணி தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்பட்டது.
    • சிலர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தங்களது உறவினர்களிடம் அவ்வப்போது செல்போனில் பேசி வருகிறார்கள்.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா- தண்டல்கான் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி கடந்த 12-ந்தேதி இடிந்து விழுந்தது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் ஆக்சிஜன் குறைந்த சூழ்நிலையில் அதற்குள் தவித்து வருகிறார்கள்.

    சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் வெளியே வருவதற்காக இடிந்து விழுந்த பகுதிக்குள் துளையிட்டு குழாய்களை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அமெரிக் காவில் தயாரிக்கப்பட்ட எந்திரம் பயன்படுத்தப்பட்டது.

    நேற்று பிற்பகலில் அந்த எந்திரம் மூலம் துளையிட்டு 5-வது குழாயை செலுத்தும் பணி நடைபெற்றது. அப்போது சுரங்கப்பாதைக்குள் ஒரு பலத்த விரிசல் சத்தம் கேட்டது. இந்த இடையூறு காரணமாக மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மற்றொரு அதிக சக்தி வாய்ந்த துளையிடும் எந்திரம் விமானம் மூலம் சுரங்கப பாதை பகுதிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் துளியிடும் பணிக்கு மீட்பு படையினர் தயாராகி வருகிறார்கள். இதற்காக மலை உச்சியில் இருந்து செங்குத்தாக துளைபோட முயற்சி செய்து வருகிறார்கள்.

    சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் நிபுணர்கள் குழுவுடன் பிரமதர் அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவும் இணைந்துள்ளனர். இது தொடர்பாக பிரதமரின் முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே கூறுகையில், 'தொழிலாளர்களை மீட்க நிபுணர்களுடன் இணைந்து 5 திட்டங்களை வகுத்துள்ளோம். ஒரே வழியில் மட்டும் முயற்சி செய்யாமல் 5 திட்டங்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்தி மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதில் நிபுணர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர்.

    மீட்பு படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் தொழிலாளர்கள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் மீட்கப்படுவார்கள். ஆனால் கடவுள் போதுமான அளவில் கருணை காட்டினால், அவர்கள் அதற்கு முன்பே மீட்கப்படுவார்கள்' என்றார்.

    இதன் அடிப்படையில் மீட்பு பணி தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தொழிலாளர்களை மீட்பதற்கான 5 திட்டங்கள் தொடர்பாக அவர்கள் கலந்தாலோசித்தனர்.

    இதற்கிடையே சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் சுரங்கப்பாதைக்கு வெளியே தொடர்ந்து வேதனையுடன் காத்திருக்கிறார்கள். அதில் சிலர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தங்களது உறவினர்களிடம் அவ்வப்போது செல்போனில் பேசி வருகிறார்கள்.

    சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் முன்பு இருந்ததை விட தற்போது மிகவும் சோர்வாக இருப்பதாகவும், அவர்கள் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

    • சம்பவத்தன்று ஐஸ்வர்யாவுக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 19).கடலூர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார். சம்பவத்தன்று ஐஸ்வர்யாவுக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை மாநிலததில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஐஸ்வர்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×