search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஷாக் தார்"

    • பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் தார் நியமனம் செய்யப்பட்டார்.
    • இவர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சவுதி சென்றுள்ளார்.

    உலக பொருளாதார மாநாட்டின் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் எனர்ஜி தொடர்பான சிறப்பு ஆலோசனை கூட்டம் இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கிறது. ஷாபாஸ் ஷெரீப் உடன் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தார் சென்றுள்ளார்.

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொள்கிறார். அங்கு ஷாபாஸ் ஷெரீப் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் தாரை நியமனம் செய்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

    • விமான நிலையத்தில், திருடன் என குரல் எழுப்பிய போராட்டக்காரர்கள்.
    • வெளிநாடுகளில் பாகிஸ்தான் அமைச்சர்கள் தொடர்ந்து அவமதிப்பு

    வாஷிங்டன்:

    பாகிஸ்தான் புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள 72 வயதான இஷாக் தார்,  உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.வாஷிங்டன் விமான நிலையத்திற்கு வந்த இறங்கிய அவர், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத் கான் மற்றும் பிற அதிகாரிகளுடன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட போராட்டக்காரர்கள் சிலர், கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


    அமைச்சர் தார் ஒரு பொய்யர் என்றும், திருடன் என்றும் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வைரலானது. பாகிஸ்தான் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களிலும் போது, பொது இடங்களில் சிலர் அவர்களை முற்றுகையிட்டு கோஷமிடுவது தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த மாதம், லண்டனில் உள்ள ஒரு காபி ஷாப்பில் பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மரியம் ஔரங்கசீப்பை சிலர் முற்றுகையிட்டு எதிர்ப்பு குரல் எழுப்பினர். இதேபோல் பாகிஸ்தான் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அஹ்சன் இக்பால், ஒரு உணவகத்திற்கு சென்ற போது, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டது குறிப்பிட்டதக்கது.

    ×