search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு"

    பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் இன்று 66 சதவீதம் வாக்குகள் பதிவாகின என அதிகாரிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019 #ParliamentElections
    முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்தது.

    அதேபோல், கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேசம் 8, பீகார் 5, அசாம் 5, ஒடிசா 5, சத்தீஸ்கர் 3, காஷ்மீர் 2, மணிப்பூர் 1 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 

    சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுமார் 66 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில், அசாம் 76.22%, பீகார் 62.38%, ஜம்மு காஷ்மீர் 45.5%, கர்நாடகம் 67.67%, மகாராஷ்டிரா 61.22%, மணிப்பூர் 67.15%, ஒடிசா 57.97%, தமிழ்நாடு 66.36%, உத்தரப்பிரதேசம் 66.06%, மேற்கு வங்காளம் 76.42%, சத்தீஸ்கர் 71.40%, புதுச்சேரி 76.19% வாக்குகள் பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. #LokSabhaElections2019 #ParliamentElections
    ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி கடந்த 8-ம்  தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. நகராட்சி அமைப்புகளில் உள்ள 1,145 வார்டுகளில் முதற்கட்ட 422 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வெறும் 8.3 சதவீத வாக்குகளே பதிவாகின.

    இந்நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 13 மாவட்டங்களில் உள்ள 384 வார்டுகளில் (காஷ்மீரில் 166, ஜம்முவில் 218) தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த வார்டுகளில் மொத்தம் 1094 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் காஷ்மீரில் 61 வேட்பாளர்கள் உள்ளிட்ட 65 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 56 வார்டுளில் யாரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யாததால் அந்த வார்டுகளில் தேர்தல் நடத்தப்படவில்லை. மற்ற வாக்குச்சாவடிகளில் காலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.



    முதற்கட்ட தேர்தலைப் போன்றே இன்றும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் குறைந்த அளவு வாக்காளர்களே வந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.

    உள்ளாட்சித் தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 13 மாவட்டங்களிலும் செல்போன் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    முக்கிய கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. பிரிவினைவாத அமைப்புகள் தேர்தலை புறக்கணித்திருப்பதுடன் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls
    மாலி அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் யாரும் 50 சதவீதம் வாக்குகள் பெறாததால் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. #Malielectionrunoff #Malielection # IbrahimBoubacarKeita
    பமாக்கோ:

    தங்கம் மற்றும் பருத்தி உற்பத்தியில் சிறப்பிடம் வகிக்கும் மேற்காப்பிரிக்க நாடான மாலியில் அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வரலாற்றிலேயே முதல்முறையாக மிக மந்தமான வாக்குகளே பதிவாகின.

    தேர்தல் வன்முறை சம்பவங்களால் சுமார் 5 சதவீதம் வாக்குச்சாவடிகள் இழுத்து மூடப்பட்டன. மேலும் நாட்டின் பல பகுதிகளில் 644 வாக்குச்சாவடிகளை (சுமார் 3 சதவீதம்) பயங்கராவாதிகள் கைப்பற்றி கொண்டதால் ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் வெறும் 43 சதவீதம் வாக்குகள்தான் பதிவாகி இருந்தன.


    பின்னர் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா 41.4 சதவீதமும் அவரை எதிர்த்து களமிறங்கிய சவுமைலா சிஸ்ஸி 17.8 சதவீதம் வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதிபராவதற்கு பெற வேண்டிய அதிகபட்ச அளவான 50 சதவீதம் வாக்குகளை இருவரும் பெறாததால் விரைவில் இரண்டாம் சுற்று தேர்தல் நடத்தப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. #Malielectionrunoff #Malielection # IbrahimBoubacarKeita
    ×