search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்பெக்டர் மாற்றம்"

    • சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    திருச்சி:

    திருச்சி ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சசிகுமார் (வயது 28). இவரும் திருவெறும்பூர் நெடுஞ்சாலை வாகனத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த சங்கர் ராஜபாண்டியன் (32), நவல்பட்டு போலீஸ் நிலைய போலீஸ்காரர் பிரசாத் (26). ஜீயபுரம் போக்குவரத்து போலீஸ்காரர் சித்தார்த்தன் ஆகிய 4 பேரும் கடந்த 4-ம் தேதி முக்கொம்பு சுற்றுலா தலத்திற்கு சாதாரண உடையில் சென்று மது அருந்திவிட்டு, காதலனுடன் முக்கொம்பு பூங்காவுக்கு வந்த துவாக்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டினர்.

    இந்த விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் 4 பேரையும் காவலில் எடுத்து இரண்டு நாள் விசாரணை மீண்டும் நேற்று ஜெயிலில் அடைத்துள்ளனர்.

    இதற்கிடையே இந்த விவகாரத்தை முறையாக விசாரிக்காத ஜீயபுரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாலாஜி, பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அதேபோன்று திருச்சி சமயபுரம் பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் விபசாரத்தை தடுக்க தவறிய அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பல்வேறு காரணங்களுக்காக திருச்சி மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ஆகவும், மங்கள மேடு இன்ஸ்பெக்டர் நடராஜன், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், அரியலூர் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    இதற்கான உத்தரவினை திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.

    • போலீஸ் விசாரணைக்கு பயந்து மாணிக்கம் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
    • வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52). விவசாயி. இவரது மனைவி சிவகாமி. தம்பதியினருக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

    மாணிக்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மாணிக்கம் புத்துகோவில் அருகே உள்ள பெத்த கல்லுப்பள்ளி ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் கோவிந்தன்(85) ஆகியோர் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கடந்த 4-ந்தேதி வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.

    இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு பயந்து மாணிக்கம் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதை தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.

    அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறிய அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டனர்.

    மேலும் இந்த வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன்(85) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×