search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் வகுப்புகள்"

    • 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
    • இன்று காலை 8.30 மணி முதல் பாட வாரியாக வகுப்புகள் தொடங்கின.

    சென்னை:

    கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் 2-வது முறையாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 12-ந்தேதியும், 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் வருகிற 14-ந்தேதியும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளி திறப்பு தாமதமானதால் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி திறப்பு தாமதமானதால் அவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்த முடியாததால் மாணவ-மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

    இதை கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆயத்தப் பணிகள் நேற்றே தொடங்கி நடந்தது.

    மாலையிலேயே அந்தந்த மாணவ, மாணவிகளுக்கு செல்போனில் அதற்கான லிங்க் அனுப்பப்பட்டது.

    இன்று காலை 8.30 மணி முதல் பாட வாரியாக வகுப்புகள் தொடங்கின. வீட்டில் இருந்தபடியே 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பாடத்திட்டங்களை ஆன்லைன் மூலம் படித்தனர்.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடந்தது. அதன் பின்பு வெயில் தாக்கத்தால் இப்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது.

    பள்ளி திறந்ததும் வழக்கம் போல் நேரடி வகுப்புகள் தொடங்கும்.

    • திருமங்கலம் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டது.
    • 15 தினங்களுக்கு பிறகும் இதே நிலை நீடித்தால் தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ. காலனியில் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இதில் 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியை யொட்டி மதுரை- விருதுநகர் நான்குவழிச்சாலை செல்கிறது.

    நெடுஞ்சாலை உயரமானதால் ஓமியோபதி மருத்துவ கல்லூரி வளாகம் தாழ்வானது. இதனால் மழைக்காலங்களில் மறவன்குளம் கண்மாய் நிரம்பி குட்டிநாயக்கனூர் கண்மாய்க்கு தண்ணீர் வரும்போதெல்லாம் கல்லூரி வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

    கடந்தாண்டு பெய்த தொடர்மழையால் ஓமியோபதி கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழந்ததால் மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் 2 மாதத்திற்கு மேல் வகுப்புகள் நடந்தன.

    இந்த ஆ ண்டும் தற்போது உரப்பனூர் கண்மாய், மறவன்குளம் கண்மாய் உள்ளிட்ட திருமங்கலத்தை சுற்றியுள்ள கண்மாய்கள் நிரம்பி உள்ள நிலையில் குட்டிநாயக்கனூர் கண்மாய்க்கு தண்ணீ்ர் வர தொடங்கி உள்ளது.

    இதனால் திருமங்கலம் ஓமியோபதி கல்லூரி வளாகத்தில் தண்ணீர் கொஞ்சம், கொஞ்சமாக புகுந்து வந்தது. இன்று காலை கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து இன்று மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறையின் வெளியிலேயே பாடம் நடத்தப்பட்டது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் கூறுகையில், வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் வகுப்புகளை நடத்த முடியவில்லை. நாளை முதல் 15 தினங்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் 2, 3, 4-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளும், கிளினிக் வகுப்புகளும் நடைபெறும்.

    கிளினிக் வகுப்புகள் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஓமியோபதி மருத்துவ மனையில் நடைபெறும். முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். 15 தினங்களுக்கு பிறகும் இதே நிலை நீடித்தால் தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றார்.

    • காற்று மாசுபாட்டால் நொய்டாவில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டது.
    • அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு, கூட்டங்கள் நடத்த தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நொய்டாவில் உள்ள கவுதம் புத் நகரில் உயர் கல்வி மையங்கள் உள்பட சுமார் 1,800 பள்ளிகள் உள்ளன. நேற்று நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு கடுமையான அளவை எட்டியது. டெல்லிக்கு அடுத்தபடியாக மேற்கு உத்தர பிரதேச மாவட்டத்தின் சில பகுதிகளில் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில், காற்று மாசுபாடு காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வரும் செவ்வாய்க்கிழமை வரை 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்துமாறு கவுதம் புத் நகரின் மாவட்ட பள்ளி கண்காணிப்பாளர் தர்மவீர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

    அந்த உத்தரவில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முடிந்தவரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு அல்லது கூட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×