search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா"

    • ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக ஆய்வு நடத்தி உள்ள போலீசார் சூதாட்ட செயலிகளை கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர்.
    • சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் விரிவான ஆலோசனை கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே சென்றன.

    இளைஞர்கள், இளம்பெண்கள், குடும்ப தலைவிகள், மாணவ-மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்து மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இப்படி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி 40-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    இதையடுத்து தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தது.

    ஆனால் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் திருப்பி அனுப்பினார். இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக கவர்னர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த முறை கவர்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

    இந்த சட்டம் குறித்த விரிவான தகவல்கள் அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்டோர் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி உள்ளனர்.

    முதல் கட்டமாக தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக ஆய்வு நடத்தி உள்ள போலீசார் சூதாட்ட செயலிகளை கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

    சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் இது தொடர்பான விரிவான ஆலோசனை கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் அடுத்த கட்டமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள், அதனை விளம்பரப்படுத்துபவர்கள் உள்ளிட்டோரின் மீது உரிய சட்ட நடவடிக்கை பாய உள்ளது. ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தின் படி இனி ஆன்லைன் ரம்மி விளையாட்டை யாராவது விளையாடினால் அது சட்ட விரோதமாக கருதப்படும். இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடும் நபர் குற்றவாளியாக கருதப்படுவார். அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    தடை செய்யப்பட்டு உள்ள ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக தனிப்பட்ட நபர்களோ அல்லது நிறுவனங்களோ விளம்பரம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதுபோன்ற விளம்பரங்களை செய்பவர்களும் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் 2 தண்டனையையும் சேர்த்து வழங்குவதற்கும் சட்டத்தில் இடம் உள்ளது.

    ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்கி அதனை இணையதளங்களில் வெளியிடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும். ஆன்லைன் தடை சட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இந்த 2 தண்டனையையும் சேர்த்து வழங்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. விளம்பரம் செய்யும் நபர்கள் ஒருமுறை பிடிபட்டு மீண்டும் சிக்கினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    ஆன்லைன் தடை சட்டத்தின்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர். அவர்களே கைது நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்.

    இந்த சைபர்கிரைம் போலீஸ் பிரிவு அனைத்து மாநகரங்கள், மாவட்டங்களிலும் தனிப்பிரிவாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து இனி அது தொடர்பான தற்கொலை சம்பவங்கள் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுமக்களும் தங்களது சேமிப்பு பணத்தை தேவையில்லாமல் ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக இழந்து தவிப்பதும் தவிர்க்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    • அனைத்துக்கும் விடை காண இன்னும் சிறிதுநாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
    • மீண்டும் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா குறித்து கவர்னர் ரவி முடிவு எடுக்க மேலும் சில நாட்கள் எடுத்துக் கொள்வார் என்று தெரியவந்துள்ளது.

    சென்னை:

    ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏராளமான பொதுமக்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வந்தது.

    இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் முதலில் சில விளக்கங்கள் கேட்டு இருந்தார். அதற்கு சட்டத்துறையில் இருந்து தேவையான விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஆனாலும் அந்த விளக்கங்கள் கவர்னருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் கடந்த 6-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டார்.

    இந்த சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு போதிய அதிகாரம் இல்லை என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி சட்டசபையில் நேற்று முன்தினம் கவர்னர் திருப்பி அனுப்பி இருந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அவை முன்பு வைக்கப்பட்டது.

    இந்த தடை சட்ட மசோதாவை சட்டசபையில் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கோரினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்ததை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டது. இந்த மசோதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தளவாய் சுந்தரம் (அ.தி.மு.க.) உள்பட சட்டமன்ற அனைத்துக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் ஆதரித்து பேசினார்கள். இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் என்னென்ன காரணங்களுக்காக ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுகிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப்பட்டியலின் 34-வது பிரிவில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ள விதிகளை சுட்டிக்காட்டி சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சுமார் 8 பக்கங்கள் கொண்ட இந்த சட்ட மசோதா முழு விவரங்களுடன் முழுமையாக தயாரிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டது. சட்டத்துறையில் நேற்று காலை இந்த மசோதாவின் அனைத்து பக்கங்களும் மீண்டும் சரிபார்க்கப்பட்டது. சட்ட விதிகள் அனைத்தும் முறையாக தெளிவுபடுத்தப்பட்டு இருந்ததால் சட்டத்துறையும் நேற்றே கவர்னருக்கு அனுப்ப அனுமதித்தது.

    இதைத்தொடர்ந்து சட்டத்துறை அதிகாரிகள் நேற்று மாலை 6 மணி அளவில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அதிகாரிகளிடம் வழங்கி விட்டு வந்தனர். தமிழக சட்டசபையில் ஒரு சட்டம் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்து தான் ஆக வேண்டும். பம்மலில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு எம்.பி., "கவர்னர் இனி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் கையெழுத்து போட்டே தீர வேண்டும்" என்றார்.

    அந்த வகையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்குவாரா? அல்லது சட்ட விதிகளை சுட்டிக்காட்டி கையெழுத்து போட மறுப்பாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து இதுதொடர்பாக கருத்துக்கள் கேட்டதாக தெரிகிறது. சட்ட நிபுணர்களிடமும் இது தொடர்பாக ஆலோசித்து உள்ளார்.

    இந்த நிலையில் நேற்றிரவு 8 மணிக்கு கவர்னர் ஆர்.என். ரவி சென்னை திரும்பினார். இன்று காலை அவரிடம் தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஆவணங்கள் கொடுக்கப்பட்டன.

    இதையடுத்து அந்த ஆவணங்களை கவர்னர் ரவி ஆய்வு செய்தார். சட்ட நிபுணர்களிடம் அவற்றை வழங்கி கருத்துக்கள் கேட்டு உள்ளார். ஏற்கனவே கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு புதிய மசோதாவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதா? என்றும் கேட்டறிந்தார்.

    இவை அனைத்துக்கும் விடை காண இன்னும் சிறிதுநாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. எனவே மீண்டும் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா குறித்து கவர்னர் ரவி முடிவு எடுக்க மேலும் சில நாட்கள் எடுத்துக் கொள்வார் என்று தெரியவந்துள்ளது.

    சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசிய பிறகு அவர் கையெழுத்து போடுவாரா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது. அவர் தமிழக அரசின் சட்ட மசோதாவை மத்திய அரசின் ஆய்வுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
    • மசோதாவில் என்னென்ன காரணங்களுக்காக ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுகிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    சென்னை:

    ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏராளமான பொதுமக்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வந்தது.

    இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் முதலில் சில விளக்கங்கள் கேட்டு இருந்தார். அதற்கு சட்டத்துறையில் இருந்து தேவையான விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஆனாலும் அந்த விளக்கங்கள் கவர்னருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் கடந்த 6-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்.

    இந்த சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு போதிய அதிகாரம் இல்லை என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி சட்டசபையில் நேற்று கவர்னர் திருப்பி அனுப்பி இருந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அவை முன்பு வைக்கப்பட்டது.

    இந்த தடை சட்ட மசோதாவை சட்டசபையில் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கோரினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்ததை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டது.

    இந்த மசோதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தளவாய் சுந்தரம் (அ.தி.மு.க.) உள்பட சட்ட மன்ற அனைத்துக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் அதிகரித்து பேசினார்கள்.

    இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதாவில் என்னென்ன காரணங்களுக்காக ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுகிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப்பட்டியலின் 34-வது பிரிவில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ள விதிகளை சுட்டிக்காட்டி இதுதொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சுமார் 8 பக்கங்கள் கொண்ட இந்த சட்ட மசோதா முழு விவரங்களுடன் முழுமையாக தயாரிக்கப்பட்டு நேற்றிரவு தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டது.

    சட்டத்துறையில் இன்று காலையில் இந்த மசோதாவின் அனைத்து பக்கங்களும் மீண்டும் சரிபார்க்கப்பட்டது. சட்ட விதிகள் அனைத்தும் முறையாக தெளிவுபடுத்தப்பட்டு இருந்ததால் சட்டத்துறையும் இன்று கவர்னருக்கு அனுப்ப அனுமதித்தது.

    இதைத்தொடர்ந்து சட்டத்துறை அதிகாரிகள் இன்று கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அதிகாரிகளிடம் வழங்க உள்ளனர்.

    தமிழக சட்டசபையில் ஒரு சட்டம் 2-வதுமுறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்து தான் ஆக வேண்டும்.

    அந்த வகையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்குவாரா? அல்லது சட்ட விதிகளை சுட்டிக்காட்டி கையெழுத்து போட மறுப்பாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து இதுதொடர்பாக கருத்துக்கள் கேட்டதாக தெரிகிறது. சட்ட நிபுணர்களிடமும் இதுதொடர்பாக ஆலோசித்து உள்ளார்.

    இந்த நிலையில் இன்று மாலை கவர்னர் ஆர்.என். ரவி சென்னை திரும்புகிறார். எனவே தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பி உள்ள ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • கவர்னர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய போது கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பி இருந்தார்.
    • கடிதத்தில் கவர்னர், தமிழக அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி சட்டசபையில் மசோதா நிறைவேற்றியது. பிறகு அது கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பல நாட்களாக இந்த மசோதா மீது கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குள் மேலும் பலர் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்தனர். எனவே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 8-ந்தேதி திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார். மேலும் இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதனை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளது. இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று முன்தினம் கூறுகையில், 'சட்டசபையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்' என்று அறிவித்தார். இதனால் தமிழக அரசியலில் ஆன்லைன் சூதாட்ட மசோதா விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது" என்று கூறினார்.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய போது கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில் அவர் தமிழக அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறி இருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்டம் என்பது, கவலை தரக்கூடிய விஷயம். அதை ஒழுங்குப்படுத்தாததால், அதற்கு அடிமையாகி, பணத்தை இழந்து, சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு ஏற்படுகிறது.

    அதேநேரம், ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்ட இணையதளம் தொடர்பான விஷயங்களை, ஒரு மாநில அரசால் மட்டும் தடை செய்ய முடியாது. இது, மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வரும் விஷயம். எனவே, தேசிய அளவில் இதற்கு நடவடிக்கை தேவை.

    எனவே சீரான முறையில் தேசிய அளவில் ஒழுங்காற்று நடவடிக்கையே இதில் அவசியமேயொழிய மாநில அரசு மட்டுமே ஒழுங்கு முறையோ சட்டத்தையோ கொண்டு வருவதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. அது நிச்சயமற்றதாகவும் இருக்கும்."

    ஒரு நபரின் திறமையைக் கொண்டு சம்பாதிப்பது அரசியலமைப்பின் 19 (1) (ஜி) பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

    அதற்கு எதிராக, எந்த அரசும் சட்டம் இயற்ற முடியாது.

    ஒரு மாநில அரசால், திறமையான விளையாட்டை ஒழுங்குப்படுத்த மட்டுமே முடியும். அதை முற்றிலும் தடை செய்ய முடியாது.

    இவ்விஷயத்தை ஏற்கனவே தெளிவுபடுத்திய பின்னும், மாநில அரசு அவசர சட்டத்தில் உள்ள அம்சங்களையே, சட்டமாக நிறைவேற்றி மீண்டும் அனுப்பி உள்ளது.

    இதைமீறி, இந்த சட்டத்தை நிறைவேற்றினால், இது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக அமையும். இதற்கு பதிலாக, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

    'இதை விளையாடுபவர்கள் தங்கள் 'ஆதார்' அட்டை, 'பான்' அட்டை போன்றவற்றை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் விளையாட முடியாது' என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி அதில் கூறி உள்ளார்.

    மசோதாவை திருப்பி அனுப்ப மூன்று விஷயங்களை வரிசைப்படுத்தி உள்ளார் கவர்னர். அது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

    முதலாவதாக இத்தகைய மசோதா, மத்திய அரசு வரம்பில் வரும் விஷயம் என்பதால் அதை மாநில அரசு நிறைவேற்றுவது முரணானதாக இருக்கும். அத்தகைய சட்டத்தை மாநில அரசால் நிறைவேற்ற முடியாது.

    இரண்டாவதாக, இது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள உத்தரவுகளுக்கு முரணாகவும் அமையும்.

    மூன்றாவதாக இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களால் பிற விஷயங்களும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்று கவர்னர் கடிதத்தில் கூறியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×