என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆன்லைன் கேமிங் மசோதாவால் ரூ.4,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கணிப்பு
    X

    ஆன்லைன் கேமிங் மசோதாவால் ரூ.4,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கணிப்பு

    • டிவி சேனல்கள், OTT தளங்கள், யூடியூப் சேனல்கள் போன்றவை கணிசமான விளம்பர வருவாயை இழக்கும்.
    • Dream 11 மற்றும் MPL ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    அதில் இதுபோன்ற விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த மசோதா சட்டமானால் பெரு நிறுவனங்கள் பல அடி வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிரிக்கெட் பெட்டிங் கம்பெனிகள்.

    இந்நிலையில் பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டால், இந்தியாவின் விளம்பரத் துறைக்கு ஆண்டுக்கு ரூ.4,500 கோடி வரை இழப்பு ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, இந்த விளம்பரங்களின் மூலம் ஆண்டுக்கு ரூ.4,500 கோடி வருவாய் உருவான நிலையில் அது முற்றிலும் முடங்குகிறது.

    டிவி சேனல்கள், OTT தளங்கள், யூடியூப் சேனல்கள் போன்றவை கணிசமான விளம்பர வருவாயை இழக்கும் எனக் கூறப்படுகிறது.

    ஏற்கனவே Dream 11 மற்றும் MPL ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    Next Story
    ×