search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளிகளில்"

    • பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க அரசு திட்டமிப்பட்டுள்ளது.
    • 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     ஈரோடு:

    பள்ளிகளில் மரக்க ன்றுகள் நடுதல், மூலிகை தோட்டங்கள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைக ளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பா ண்டில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் பள்ளிகல்வி த்துறை சார்பில் இந்தாண்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 லட்சம் மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே மாணவர்க ளுக்கு இயற்கை மீதான பற்றினை உருவாக்கவும், மூலிகை தாவரங்கள் குறி த்தும், அதன் பயன்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மூலிகை தாவரத்தின் பெயர், பயன்கள், அவற்றை பராமரிக்கும் முறைகளை எடுத்துக்கூறும் வகையில் பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க அரசு திட்டமிப்பட்டுள்ளது.

    தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அமைக்கப்படும் இந்த மூலிகை தோட்டத்தை தொண்டு சம்மந்தப்பட்ட தொண்டு நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளது.

    12 சென்ட் காலி இடம், சுற்றுச்சுவர் வசதி, தண்ணீர் வசதி உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகள் மூலிகை தோ ட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    பள்ளி வளாகத்தில் காலி இடம் இல்லாவிட்டாலும், மாடியில் இடமிருந்தாலும் மூலிகை தோட்டம் அமைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு பாட இணைச் செயல்பாடுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
    • அதன் ஒரு பகுதியாக தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த தமிழ் கூடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    சேலம்:

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு பாட இணைச் செயல்பாடுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த தமிழ் கூடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இதனிடையே தமிழ்நாடு முழுவதும் உள்ள 6,218 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்காக ஆண்டு ேதாறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்தது.

    தொடர்ந்து இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அதற்கான செலவின நிதியை மாவட்ட வாரியாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் 291 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்காக ரூ.26.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறுகை யில், இந்த நிதியினை ெகாண்டு தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்த ஒவ்வொரு பள்ளியிலும் பணியாற்றும் முதுநிலை தமிழாசிரியர் ஒருவரை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்தப் பெறுவதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

    எக்காரணத்தை கொண்டும் அத்தொகை யினை பிற இனங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டமைக்கான செலவின விவரங்களையும், பயனீட்டு சான்றிதழையும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்ப வேண்டும், என்றனர்.

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி மையத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா ஆய்வு செய்தார்.
    • அப்போது எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டமானது தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

    அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், கற்றல் திறனை அதிகப்ப டுத்தவும் எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டமானது கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    எண்ணும் எழுத்தும் பயிற்சியின் மூலம் 2025-ம் ஆண்டிற்குள் தொடக்க நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் சரளமாக எழுதவும், படிக்கவும் வைப்பது இப்பயிற்சியின் நோக்கமாகும்.

    இதற்காக பள்ளி கல்வித் துறையின் மூலம் 2-ம் கட்ட பயிற்சியானது தொட க்கநிலை வகுப்புகளைகையாளும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி மையத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா ஆய்வு செய்தார்.

    அப்போது எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

    மேலும் மாணவர்க ளிடையே ஏற்படும் கற்றல் இடைவெளியை குறைத்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தக்கூடிய வகையில் ஆசிரியர்கள் அனைவரும் ஆடல், பாடல் மற்றும் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மூலமாக பாடங்களை போதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமி நாராயணன், விரிவுரை யாளர் முருகேசன், ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரிகா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா, வட்டார கல்வி அலுவலர்கள் சிவானந்தம், வனிதாராணி, சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். 

    • ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 139, பட்டதாரி ஆசிரியர்கள் 48, முதுகலை பட்டதாரி 94 என மொத்தம் 281 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • இந்த தற்காலிக பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரை மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை, முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.

    காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலமும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவும் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனாலும் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் உள்ளதால் 8 மாதங்களுக்கு மட்டும் பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிக பணியிடத்தில் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    இந்த தற்காலிக பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரை மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 139, பட்டதாரி ஆசிரியர்கள் 48, முதுகலை பட்டதாரி 94 என மொத்தம் 281 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது என்றும், பதவி உயர்வு மூலமோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமோ நிரப்பபடும் பொழுது தற்காலிக பணியில் நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×