search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் எச்சரிக்கை"

    • திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 2 ஆயிரத்து 914 தொழில் நிறுவனங்கள் உள்ளன.
    • நகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் வருகிற 30-ந் தேதிக்குள் தொழில் வரி செலுத்த வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. வீடுகள், வணிக வளாகம், அரசு கட்டடங்கள் என, 12 ஆயிரத்து 724 சொத்து வரி விதிக்கப்பட்ட கட்டடங்கள் உள்ளது. சொத்து வரியாக ஆண்டுக்கு ரூ.8 கோடியே 21 லட்சத்து 77 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல் காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை, வாடகை உள்ளிட்ட வகையில், நகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ. 11 கோடியே 38 லட்சத்து 87 ஆயிரம் வரி வசூலாக வேண்டும். இதில் வசூலாகும் தொகையில், 50 சதவீதம், நகராட்சி ஊழியர்களின் சம்பளம், மின் கட்டணம், அலுவலகம், வாகனங்களின் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு செலவாகிறது. மீதம் உள்ள தொகை மட்டுமே நகர வளர்ச்சிக்கு செலவிடப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சியில் உள்ள சுமார் 800 கடைகள், வணிக நிறுவனங்கள் தொழில் வரி செலுத்துவதில்லை.

    இதையடுத்து நகராட்சி வருவாய் அலுவலர் கருமாரியப்பன், பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜூ தலைமையிலான நகராட்சி ஊழியர்கள், கடைகள் தோறும் சென்று தொழில் வரி செலுத்துவதற்கான விண்ணப்பத்தினை விநியோகம் செய்தனர். வருகிற 30-ந்தேதிக்குள் சொத்துவரி செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சுரேந்திர ஷா கூறியதாவது:-

    திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம், 2 ஆயிரத்து 914 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில்1,245 தொழில் நிறுவனங்கள் மட்டுமே தொழில் வரி செலுத்தி வருகின்றன. மீதம் உள்ள 1,669 தொழில் நிறுவனங்கள், கடைகள் தொழில் வரி செலுத்தாமல் உள்ளனர்.

    பொதுமக்களிடம் சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை கட்டணம் என, வசூலாகும் நிதியில் தான் நகராட்சியில் நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள் தொழில் வரி செலுத்தாததால், நகராட்சிக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், மக்கள் நலத்திட்ட பணிகளை செய்ய முடியாத நிலை உள்ளது.

    எனவே, நகராட்சியில் உள்ள, வணிக நிறுவனங்கள், கடைகள் வருகிற 30-ந் தேதிக்குள் தொழில் வரி செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அபராதம் விதிக்கப்படுவதுடன், வணிக நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பீடி, சிகரெட், புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது
    • தொடர்ந்து விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் அரசு பள்ளி அருகே மற்றும் பஜார் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்ப டுவதாக புகையிலை தடுப்பு அலுவலர் ஜெயஸ்ரீக்கு ரகசிய புகார் வந்தது.

    அதன்படி பள்ளி கொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வெட்டுவாணம் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அப்போது பெட்டிக்கடை களில் தடை செய்யப்பட்ட பீடி, சிகரெட், புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையா ளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து புகையிலை தடுப்பு அலுவலர் கூறியதாவது:-

    பள்ளிக்கூடம் அருகில் மற்றும் பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள நபர்களுக்கு பீடி, சிகரெட், புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது.

    மேலும் கடைகள் முன்பு புகையிலை, சிகரெட் படங்கள் விளம்பரங்கள் பற்றிய துண்டுபிரசுரங்கள் ஒட்டி இருந்தால், அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    வெட்டுவாணத்தில் நடைபெற்ற சோதனையில் 19 கடைகளின் உரிமையா ளர்களுக்கு ரூ.2,900 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வியாபாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.27,500 அபராதம் விதிப்பு
    • அதிகாரிகள் நடவடிக்கை

    ஆலங்கயாம்:

    வாணியம்பாடியில் மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சதிஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஆற்றுமேடு பகுதியில் உள்ள 2 கடைகளில் பிளாஸ்டிக் தட்டுகள் உள்ளிட்டவை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 112 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு ரூ.27,500 அபராதம் விதித்தனர்.

    மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ கடையின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

    சுற்றுச்சூழல் பாதுபாப்பு சட்டத்தின்படி கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று அதிகாரிகள் கடையின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்த சோதனையின்போது நகராட்சி துப்புறவு ஆய்வாளர் செந்தில்குமார், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • இந்த மருந்தை விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தருமபுரி மாவட்டத்தில் எங்காவது விற்பனை செய்வது தெரிய வந்தால் அது குறித்து பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.

    தருமபுரி, ஜூலை.4-

    தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் விஜயா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த ரேட்டால் என்ற எலி மருந்தை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்து கடைகளில் விற்பனை செய்வதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தை எந்த காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். இந்த மருந்தை விற்கக்கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண்மை துறையை உள்ளடக்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    அந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கண்காணிப்பு பணியின் போது இந்த மருந்தை விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள இந்த மருந்தை தருமபுரி மாவட்டத்தில் எங்காவது விற்பனை செய்வது தெரிய வந்தால் அது குறித்து பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர்.
    • சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ஆய்வு செய்து பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 28 வார்டுகளில் பொது மக்களுக்கு இடையூறாக பஸ் நிலையம், முக்கிய வீதி, பஜார், தெருக்களில், சாலை ஓரங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனை சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ஆய்வு செய்து பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.

    அதன்படி பொன்னேரி நகராட்சி ஆணையாளர் கோபிநாத் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர். மேலும் அனுமதியின்றி பேனர் வைத்தால் அபராதம் விதித்து போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    • பாதையில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறதா?, மின் கம்பிகளில் கொக்கிகள் போடப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டனர்.
    • தாழ்வழுத்த மின் பாதைகளை சீரமைக்க புதிய மின் கம்பங்கள் அமைப்பதற்கு போர்க்கால அடிப்ப டையில் நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் மற்றும் மலை பகுதிகளையொட்டி உள்ள விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் மற்றும் வனவிலங்குகள் நுழையாமல் இருக்க உரிய அனுமதியின்றி விவசாயிகள் சிலர் மின்வேலி அமைக்கிறார்கள்.

    இவ்வாறு சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலிகளில் சிக்கி வனவிலங்குகள் பலியாகும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாரண்டஅள்ளி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்தன. இது வன ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் வனத்துறை, மின்வாரிய அதிகாரிகள் குழுவினர் இணைந்து பாலக்கோடு மற்றும் ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதி களையொட்டி உள்ள வட்டு வனஅள்ளி, கோடுபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா?, யானைகள் மற்றும் வனவிலங்குகள் செல்லும் பாதையில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறதா?, மின் கம்பிகளில் கொக்கிகள் போடப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டனர்.

    இந்த ஆய்வில் மின்வாரியத்துறை தருமபுரி செயற்பொ றியாளர் ரவி, உதவி செயற்பொறியாளர் மணிமேகலை, உதவி பொறியாளர்கள் மோகனா, செந்தில் முருகன், திருச்செ ல்வம், வனவர் செல்வராஜ், வனக்கா ப்பாளர் சின்னசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

    ஆய்வின் போது விவசாய பயிர்களை வன விலங்குகளிடமிருந்து காப்பாற்ற மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றம்.

    விதிகளை மீறி மின்வேலி அமைப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படும் என்று கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் ரவி கூறுகையில், ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு சரகத்திற்கு உட்பட்ட யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு தாழ்வாக உள்ள உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளை சீரமைக்க புதிய மின் கம்பங்கள் அமைப்பதற்கு போர்க்கால அடிப்ப டையில் நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மேலும் மின்கம்ப ங்களை சுற்றி முள்வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    வனப்பகுதிகளை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் யாராவது மின்வேலி அமைத்து இருப்பது தெரியவந்தால் மின்வாரியத்திற்கு 9445855432, 9445855433,9445855434,9445855430,9445855411 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

    ×