search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளைநிலங்களில் மின்வேலி அமைத்தால் குற்றவியல் நடவடிக்கை அதிகாரிகள் எச்சரிக்கை
    X

    விளைநிலங்களில் மின்வேலி அமைத்தால் குற்றவியல் நடவடிக்கை அதிகாரிகள் எச்சரிக்கை

    • பாதையில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறதா?, மின் கம்பிகளில் கொக்கிகள் போடப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டனர்.
    • தாழ்வழுத்த மின் பாதைகளை சீரமைக்க புதிய மின் கம்பங்கள் அமைப்பதற்கு போர்க்கால அடிப்ப டையில் நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் மற்றும் மலை பகுதிகளையொட்டி உள்ள விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் மற்றும் வனவிலங்குகள் நுழையாமல் இருக்க உரிய அனுமதியின்றி விவசாயிகள் சிலர் மின்வேலி அமைக்கிறார்கள்.

    இவ்வாறு சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலிகளில் சிக்கி வனவிலங்குகள் பலியாகும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாரண்டஅள்ளி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்தன. இது வன ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் வனத்துறை, மின்வாரிய அதிகாரிகள் குழுவினர் இணைந்து பாலக்கோடு மற்றும் ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதி களையொட்டி உள்ள வட்டு வனஅள்ளி, கோடுபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா?, யானைகள் மற்றும் வனவிலங்குகள் செல்லும் பாதையில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறதா?, மின் கம்பிகளில் கொக்கிகள் போடப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டனர்.

    இந்த ஆய்வில் மின்வாரியத்துறை தருமபுரி செயற்பொ றியாளர் ரவி, உதவி செயற்பொறியாளர் மணிமேகலை, உதவி பொறியாளர்கள் மோகனா, செந்தில் முருகன், திருச்செ ல்வம், வனவர் செல்வராஜ், வனக்கா ப்பாளர் சின்னசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

    ஆய்வின் போது விவசாய பயிர்களை வன விலங்குகளிடமிருந்து காப்பாற்ற மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றம்.

    விதிகளை மீறி மின்வேலி அமைப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படும் என்று கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் ரவி கூறுகையில், ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு சரகத்திற்கு உட்பட்ட யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு தாழ்வாக உள்ள உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளை சீரமைக்க புதிய மின் கம்பங்கள் அமைப்பதற்கு போர்க்கால அடிப்ப டையில் நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மேலும் மின்கம்ப ங்களை சுற்றி முள்வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    வனப்பகுதிகளை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் யாராவது மின்வேலி அமைத்து இருப்பது தெரியவந்தால் மின்வாரியத்திற்கு 9445855432, 9445855433,9445855434,9445855430,9445855411 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×