என் மலர்
நீங்கள் தேடியது "work permit"
- இந்தியர்களை பணியமர்த்தும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும்
- H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்தப் புதிய கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது என அமெரிக்கா தெளிவுபடுத்தியது.
இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.
H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று முதல் வெளிநாட்டினருக்கான வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் தானாகவே நீட்டிப்பு செய்யும் முறை முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர்.
இதுவரை, வெளிநாட்டினர் தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் புதுப்பித்தல் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் காலத்தில், 540 நாட்கள் வரை தங்கள் வேலையைத் தொடரலாம்.
ஆனால் புதிய விதியின் கீழ், தற்போதைய வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் காலாவதியாகும் முன் புதுப்பித்தல் பெறாத எவரும் உடனடியாக வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் காலாவதியாகும் 180 நாட்களுக்கு முன்பு புதுப்பித்தல் விண்ணப்பத்தை முறையாக தாக்கல் செய்வதன் மூலம் வெளிநாட்டினர் தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை சரியான நேரத்தில் புதுப்பிக்க இயலும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதுப்பித்தல் நடவடிக்கைக்கு 3-12 மாதங்கள் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் இந்த முடிவு அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க அரசு எச்-1பி விசா வழங்குகிறது. இந்த ‘விசா’ மூலம் அங்கு வெளிநாட்டினர் நிரந்தரமாக குடியேற முடியாது. அமெரிக்க கம்பெனிகளில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கான ‘விசா’ வாகும்.
அதன்மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் மட்டுமே தங்கி பணிபுரிய முடியும். டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றவுடன் அதற்கான எச்-1பி விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தினார். அதன்மூலம் எச்-1பி விசாவின் காலம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 1000-க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தி வருகின்றனர். அங்கு எச்-1பி விசா மூலம் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

தற்போது எச்-1பி விசாவின் காலத்தை குறைப்பதன் மூலம் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமின்றி ஐ.டி. நிறுவனங்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியிருப்பு சேவை துறையின் மீது டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நகர ஐ.டி நிறுவனத்தினர் கோர்ட்டில் கடந்தவாரம் வழக்கு தொடர்ந்தனர்.
43 பக்க புகாரில் எச்-1பி விசா செல்லுபடியாகும் காலத்தை குறைக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விசா வழங்கும் அதிகாரத்தை தொழிலாளர் துறைக்கு வழங்க அமெரிக்க பாராளுமன்றம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்-1பி விசா கட்டுப்பாட்டுக்கு எதிராக தற்போது 2-வது வழக்கு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2018 ஜூலை மாதம் முதல் முறையாக வழக்கு தொடரப்பட்டது. #DonaldTrump #H1BVisa #WorkPermit
சேலம்:
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் கண்காணிப் பாளராக பணியாற்றி வருபவர் உமாதேவி. 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இந்த பணியில் நியமிக்கப்பட்டார்.
கோவில் கண்காணிப்பாளர் பணியில் 3 ஆண்டுகள் மட்டுமே எந்த அதிகாரியும் பணியாற்ற முடியும். ஆனால் உமாதேவி நியமிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதத்தோடு 3 ஆண்டு காலம் நிறைவு பெற்றும் தற்போது வரை அந்த பணியில் அவர் தொடர்ந்து வருகிறார்.
இது குறித்து கோவில் உதவி கமிஷனர் தமிழரசு சேலம் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜனுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து சேலம் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜனிடம் கேட்ட போது, உமாதேவியின் பணி அனுமதி காலம் முடிந்து 2 மாதம் ஆகிறது. இதில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. இந்து அறநிலைய துறை ஆணையர் தான் அவரை வேறு பணிக்கு மாற்றுவது குறித்து முடிவு எடுக்க வேண்டும். இது தொடர்பாக அவருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
ஏற்கனவே உமாதேவி சுகவனேஸ்வரர் கோவில் கண்காணிப்பாளாராக இருந்து சேலம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் கடந்த 2016-ம் ஆண்டு கோவில் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாட்டில் 2015-ம் ஆண்டு ஒபாமா ஜனாதிபதியாக இருந்தார். அப்போது அவர், அங்கு குடியுரிமை பெறாமல் ‘எச்-1’ பி விசாவில் தங்கி வேலை செய்கிறவர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா அளித்து, வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினார். இதனால் ‘எச்-1’ பி விசாவில் அங்கு வேலை பார்க்கிற ஆண்களின் மனைவிமாரும், பெண்களின் கணவர்மாரும் வேலை வாய்ப்பினை பெற்று பலன் அடைந்தனர். அவர்கள் குடும்பமாக அங்கு வாழவும் அது வழி வகுத்துத்தந்தது.

இந்த அனுமதியால் அங்கு 1 லட்சத்துக்கும் அதிகமான ‘எச்-4’ விசாதாரர்கள் பலன் அடைந்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள்.
ஆனால் இப்போது அங்கு ஜனாதிபதியாக உள்ள டொனால்டு டிரம்ப், ‘அமெரிக்கர்கள் அமெரிக்க பொருட் களையே வாங்க வேண்டும், அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களையே பணியில் அமர்த்த வேண்டும்’ என்ற கொள்கையை அறிமுகம் செய்து, அதை தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்.
அந்த வகையில் இப்போது அங்கு ‘எச்-1’ பி விசாவில் தங்கி வேலை செய்கிறவர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா அளித்து, ‘ஒர்க் பெர்மிட்’ என்னும் பணி அனுமதி வழங்கும் திட்டத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்து உள்ளது.
இது அங்கு வேலை பார்க்கிற இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையினருக்கு சாபம் போல அமைந்தது. பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலையை உருவாக்கி உள்ளது.
இது அமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
முந்தைய ஒபாமா காலத்தில் ‘எச்-1’ பி விசாவில் தங்கி வேலை செய்கிறவர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா அளித்து பணி அனுமதி வழங்கி கொண்டு வந்த திட்டம் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய வம்சாவளி எம்.பி., பிரமிளா ஜெயபால் தலைமையில் 130 எம்.பி.க்கள் அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி கிறிஸ்ட்ஜென் நீல்சனிடம் முறையீடு செய்து உள்ளனர்.
அவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு வழங்கியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
‘எச்-4’ விசாதாரர்களுக்கு அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு ஒர்க் பெர்மிட் வழங்கும் முறை, நமது நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக்கி இருக்கிறது. அதுமட்டுமின்றி பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி உள்ளது. இவர்கள் அனைவரும் பல்லாண்டு காலமாக இங்கு வசித்து வருகிறார்கள். இவர்களில் பலரும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான நடைமுறையை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே ‘எச்-4’ விசாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிற பணி அனுமதியை ரத்து செய்தால், அமெரிக்க நிறுவன அதிபர்களின் போட்டித்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்க பொருளாதாரத்திலும் பாதிப்பு உண்டாகும். ‘எச்-4’ விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களும், குடும்பங்களும் பாதிப்புக்கு ஆளாகும்.
எனவே ஏற்கனவே ‘எச்-4’ விசாதாரர்களுக்கு வழங்கி வருகிற பணி அனுமதி திட்டத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #H1BVisa #WorkPermit






