என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி அனுமதி"

    • இந்தியர்களை பணியமர்த்தும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும்
    • H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.

    அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்தப் புதிய கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது என அமெரிக்கா தெளிவுபடுத்தியது.

    இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.

    H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.

    இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இன்று முதல் வெளிநாட்டினருக்கான வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் தானாகவே நீட்டிப்பு செய்யும் முறை முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர்.

    இதுவரை, வெளிநாட்டினர் தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் புதுப்பித்தல் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் காலத்தில், 540 நாட்கள் வரை தங்கள் வேலையைத் தொடரலாம்.

    ஆனால் புதிய விதியின் கீழ், தற்போதைய வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் காலாவதியாகும் முன் புதுப்பித்தல் பெறாத எவரும் உடனடியாக வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் காலாவதியாகும் 180 நாட்களுக்கு முன்பு புதுப்பித்தல் விண்ணப்பத்தை முறையாக தாக்கல் செய்வதன் மூலம் வெளிநாட்டினர் தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை சரியான நேரத்தில் புதுப்பிக்க இயலும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த புதுப்பித்தல் நடவடிக்கைக்கு 3-12 மாதங்கள் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    அமெரிக்காவின் இந்த முடிவு அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

    பணி அனுமதிக்காலம் முடிந்து தங்கியுள்ள வெளிநாட்டினர் எவ்வித தண்டனையும் இன்றி நாடு திரும்பும் பொது மன்னிப்பு திட்டத்தை ஐக்கிய அமீரக அரசு அமல்படுத்தியுள்ளது. #UAEAmnesty2018
    துபாய்:

    எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடான ஐக்கிய அமீரகத்தில் சுமார் 2.8 மில்லியன் இந்தியர்கள் தொழிலாளர்களாக உள்ளனர். ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். 

    இந்திய தொழிலாளர்கள் மட்டுமல்லாது பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர்.

    பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி அனுமதிக்காலம் முடிந்தும் அந்நாட்டில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு வேலை நீட்டிப்பு மற்றும் ஊதியத்தை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மறுத்துவிட்டன. 

    இது தொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்தன. விசாக்காலம் முடிந்தும் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பதால் அவர்கள் தாய்நாடு திரும்புவதிலும் சிக்கல் இருந்தது.



    இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பொது மன்னிப்பு திட்டத்தை ஐக்கிய அமீரக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த பொதுமன்னிப்பு திட்டம் மூலம் சட்டவிரோதமாக இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நலனாக இருக்கும். இப்போதைய திட்டப்படி அவர்கள் நாட்டைவிட்டு அபராதம் எதுவும் செலுத்தாமல் வெளியேறலாம்.

    மேலும், வேலை இல்லாதவர்கள் வேலையை தேடிக்கொள்ள 6 மாதங்கள் அனுமதி வழங்கப்படுகிறது. இன்று முதல் பொதுமன்னிப்பு அமலாகியுள்ளதால் பலர் தங்களது சொந்த நாடு திரும்ப தங்களது நாட்டு தூதரகத்தில் குவிந்தனர். இன்று முதல் நாளே 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தாய்நாடு திரும்ப விண்ணப்பித்தனர்.

    மூன்று மாதங்களுக்கு இந்த பொதுமன்னிப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×