என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman murder case"

    ராயபுரத்தில் பெண் அளித்த புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காத, போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    ராயபுரம்:

    சென்னை ராயபுரம் செட்டிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களது 16 வயது மகளை பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத்குமார் (26) என்பவர் ஈவ்டீசிங் செய்துள்ளார்.

    இதுபற்றி ராயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பக்டர் ராஜா ராபர்ட், ஈவ்டீசிங் புகாருக்குள்ளான வினோத்குமாரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்டித்து அனுப்பி வைத்துள்ளார்.

    இந்தநிலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய பிரேம் குமாருக்கு, மகள் ஈவ்டீசிங் செய்யப்பட்டது பற்றிய தகவல் தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வினோத் குமார் வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டார்.

    அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுமோதலாக மாறியது. வினோத் குமார் தன் மீது தவறு இருப்பதை மறந்து விட்டு பிரேம்குமாரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான பிரேம்குமார் பாரிமுனை பகுதியில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் அங்கிருந்து திரண்டு வந்தனர். பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்று வினோத்குமாரை கண்டித்தனர். இதனால் மீண்டும் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், ரகளையில் ஈடுபட தொடங்கினார்.

    இதுமிகப்பெரிய மோதலாக மாறியது. வினோத் குமார் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து பிரேம்குமாரின் உறவினர் களை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது உறவுக்கார பெண் மேரிக்கு கத்திகுத்து விழுந்தது.

    இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மேரியின் தங்கை மெர்லின், பிரேம் குமார் ஆகியோர் வினோத் குமாரை தடுத்தனர். இதில் அவர்களுக்கும் கத்திகுத்து விழுந்தது. உடனடியாக மேரி உள்ளிட்ட 3 பேரும் ஸ்டேன்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றிய தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. பரபரப்பான சூழல் நிலவியது. பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஈவ்டீசிங் கொடுமைக்குள்ளான பெண்ணின் தாய் பரமேஸ்வரி அளித்த புகாரில் வினோத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மோதல் சம்பவம் நடந்திருக்காது என்றும் அநியாயமாக அப்பாவிப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் என்றும் ஆத்திரப்பட்டனர்.

    இது தொடர்பாக போலீசார் மீது பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் சரியாக செயல்படவில்லை என்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன், இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோரது மேற் பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் முடிவில் முதலில் புகார் அளித்தபோதே வினோத்குமார் மீது இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கொலையை தடுத்திருக்கலாம் என்பது தெரியவந்தது. இதன் காரணமாக அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக வினோத்குமார், அவரது தம்பி தமிழ், உறவினர் சங்கர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் வினோத் குமாரின் மனைவி விஜய லட்சுமியும் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் கவனக் குறைவான பணியால் பெண் ஒருவர் கொலையுண்ட சம்பவத்தால் ராயபுரத்தில் பதட்டம் நிலவுகிறது.

    கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியின் தலையை துண்டித்து போலீஸ் நிலையத்தில் வாலிபர் சரண் அடைந்தார். #murdercase
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு அருகே தரகரே தாலுகாவில் உள்ள சிவானி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது35). இவரின் மனைவி ரூபா (28) இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர்.

    ரூபாவுக்கும், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சதீஷ் ரூபாவை பலமுறை கண்டித்து உள்ளார்.

    சதீஷ் நேற்று காலை பெங்களூரு சென்று விட்டு மாலை வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டில் மனைவி ரூபா வேறு ஒரு நபருடன் இருப்பதை சதீஷ் பார்த்து விட்டார். இதனால ஆத்திரம் அடைந்த சதீஷ் இருவரையும் அடித்து, உதைத்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த நபர் தப்பி ஓடி விட்டார். ஆனால் ஆத்திரம் தீராத சதீஷ் மனைவி ரூபாவை கொலை செய்து, அவரின் தலையை துண்டாக வெட்டி எடுத்தார்.

    பின்னர் ஒரு சாக்கில் ரத்தம் சொட்ட, சொட்ட மனைவி ரூபாவின் தலையை இருசக்கர வாகனத்தில் வைத்து 20 கி.மீ. தொலைவில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சதீஷ் சென்றார். போலீஸ் நிலையம் சென்ற சதீஷ் சாக்கில் இருந்த தனது மனைவியின் தலையின் முடியை பிடித்து தூக்கி தலையுடன் சரண் அடைவதாக தெரிவித்தார். இந்த காட்சியை கண்ட அங்கிருந்த போலீசார் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்து பதற்றம் அடைந்தனர்.

    பின்னர் அங்கிருந்த போலீசார் சதீசை கைது செய்து, வெட்டப்பட்ட ரூபாவின் தலையுடன் கொலை நடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் ரூபாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    சிக்மங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் சதீசை போலீசார் ஆஜர்படுத்திய நிலையில் அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. 
    ×