என் மலர்
நீங்கள் தேடியது "White Shirt"
- அயர்ன் அச்சு படிந்தது போன்ற டிசைனில் வெள்ளை சட்டையை வடிவமைத்துள்ளது.
- ப்ராண்ட் என்றாலும் தற்போது தவறுகளை எல்லாம் ஃபேஷன் என கூறுவதாக நெட்டிசன்கள் விமர்சனம்
பிரபல ஆடம்பர ஃபேஷன் ப்ராண்டான VETEMENTS நிறுவனம் அயர்ன் அச்சு படிந்தது போன்ற டிசைனில் வெள்ளை சட்டையை வடிவமைத்து அதற்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் விலையை நிர்ணயம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தவறுதலாக நாம் அயர்ன் பாக்ஸ் கொண்டு சட்டையில் சூடு வைத்து கொண்டால் என்ன டிசைன் கிடைக்குமோ அதை வைத்து வெள்ளை சட்டையை வடிவமைத்து அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
ப்ராண்ட் என்றாலும் தற்போது தவறுகளை எல்லாம் ஃபேஷன் என கூறுவதாக இணையத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
- ராகுல் காந்தி எப்போதுமே வெள்ளைநிற டி-சர்ட்தான் அணிந்து வருகிறார்.
- தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எப்போதுமே வெள்ளைநிற டி-சர்ட்தான் அணிந்து வருகிறார்.
இந்த நிலையில் 54-வது பிறந்த நாளை கொண்டாடிய ராகுல்காந்தி வெள்ளை நிற டி-சர்ட்டை தொடர்ந்து பயன்படுத்துவது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். மேலும் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உங்கள் அனை வருக்கும் மனமார்ந்த நன்றி கள். எப்போதும் வெள்ளை நிற டி-சர்ட்டை' நான் ஏன் அணிகிறேன் என்ற கேள்வி அடிக்கடி என்னிடம் கேட்கப்படுகிறது. இந்த வெள்ளை நிற டி-சர்ட்டுகள் எனக்கு வெளிப்படைத் தன்மை, திடத்தன்மை மற்றும் எளிமை ஆகிய வற்றை குறிக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் எங்கே, எப்படி இந்த மதிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்? என்பதை #WhiteTshirtArmy என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வீடியோவில் சொல்லுங்கள். நான் உங்களுக்கு ஒரு வெள்ளை டி-சர்ட்டை பரிசாக தருகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதற்கு முன்பும் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இந்த கேள்விக்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்து இருந்தார். அப்போது, நான் வெள்ளை நிற சட்டை பயன்படுத்துவதற்கு வெளிப்படைத்தன்மையும், எளிமைதான் காரணம். மேலும் நான் ஆடைகளைப் பற்றி அதிகம் கவலைப்படு வதில்லை. நான் அதை எளிமையாக்க விரும்பு கிறேன்" என கூறி இருந்தார்.






