search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VEHICLE CAMPAIGN"

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்து வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • கோவை மாவட்டத்தில் அதிகமாக இறவை மற்றும் மானாவாரியாக பயிரிடப்படுகிறது.

    கோவை,

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் உணவு மற்றும் ஊட்டசத்து திட்டத்தின் கீழ், மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், வாட்டாரங்களில் சிறுதானிங்களின் சாகுபடியை ஊக்குவைக்கும் வகையில் பிரசார ஊர்தியினை கலெக்டர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறும்போது, சோளம் கோவை மாவட்டத்தில் அதிகமாக இறவை மற்றும் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. தற்போது தரமான சோள விதை அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு கோவை மாவட்டத்தின் தேவை போக பிற மாவட்டத்திற்கும் விதைகள் அனுப்பப்பட்டு வருகிறது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்து வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 37 கிராமங்கள் கலைஞரின் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    இதில் உதவி கலெக்டர் சவுமியா ஆனந்த், வேளாண்மை இணை இயக்குனர் முத்து லட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் தமிழ்செல்வி, வேளாண்மை துணை இயக்குனர் கிருஷ்ணவேனி, பெருமாள்சாமி வேளாண்மை உதவி இயக்குனர்கள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பாலித்தீன் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
    • களக்காடு பகுதியில் பாலித்தீன் பைகள் இல்லாத ஆடி அமாவாசை விழா கொண்டாட வலியுறுத்தப்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகம், களக்காடு சூழல் திட்ட வனசரகம் சார்பில் களக்காடு பகுதியில் பாலித்தீன் பைகள் இல்லாத ஆடி அமாவாசை விழா கொண்டாட வலியுறுத்தி வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதன் தொடக்க விழா களக்காடு புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் தலைமை தாங்கினார்.

    சூழல் திட்ட வனவர் சிவக்குமார் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ் கொடி அசைத்து வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் உதவி வன பாதுகாவலர்கள் (பயிற்சி) வினோத்ராஜ், சதிஸ் குமார், அரும்புகள் அறக்கட்டளை இயக்குனர் மதிவாணன், லதா மதிவாணன், களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி, வனசரகர் பிரபாகரன், வனவர் அப்துல்ரஹ்மான், கலுங்கடி கிராம வனக்குழு தலைவர் ஆனந்தராஜ், மிதார் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பாலித்தீன் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. முடிவில் வன காப்பாளர் அபர்ணா நன்றி கூறினார்.

    • அரியலூரில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வாகன பிரசார இயக்கம் நடைபெற்றது
    • ஊதியக்குழுவில் விடுபட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

    அரியலூர்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தின் ஏழு முனைகளில் இருந்து நடைபெறுகின்ற பிரசார பயண வாகனம் புதுக்கோட்டையில் துவங்கி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. நேற்று அரியலூர் மாவட்டத்திற்கு வந்தது.

    அங்கு ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வாகனப் பிரசார இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் வேல்முருகன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மலர்விழி, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் அம்சராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் முருகானந்தம், மாவட்ட செயலளர் சிவகுமார், மாவட்ட துணைசெயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், சத்துணவு ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் பணி நீக்கம் காலமான 41 மாத காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும்,

    அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பி, ஊழியர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும், ஊதியக்குழுவில் விடுபட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

    சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜவேம்பு, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வி, அனுசுயா, ரேடியோகிராபர் சங்க மாநில அமைப்பு செயலாளர் இளங்கீரன், எம்ஆர்பி செவிலியர் சங்க மாவட்ட தலைவர் செல்வி, மாவட்ட செயலாளர் ராகவன், கிராம உதவியாளர் சங்க வட்ட தலைவர் மதியழகன் மற்றும்ஜெயங்கொண்டம்,

    ஆண்டிமடம் வட்டத்தைச் சேர்ந்த அனைத்து துறை அரசு ஊழியர்களும் அரசு ஊழியர் சங்க மாவட்ட, வட்ட நிர்வாகிகளும் துறைவாரி சங்கங்களின் இதர மாவட்ட, வட்ட நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில் சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் காமராஜ் நன்றி கூறினார்.

    ×