search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Bells"

    • 25 தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மணிகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு லாரி மூலம் அயோத்திக்கு அனுப்பப்பட்டன.

    சென்னை:

    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கோவிலில் பொருத்தப்பட உள்ள ஆலய மணிகளை பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் ராஜேந்திர நாயுடு என்பவர் வழங்குகிறார். அவர் இந்த மணிகளை தயாரிக்க நாமக்கல்லில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்திருந்தார். 25 தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மணிகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    முதற்கட்டமாக 48 மணிகள் தயாராகி உள்ளன. இதில் 5 மணிகள் தலா 75 கிலோ எடை கொண்டது. 6 மணிகள் தலா 60 கிலோ எடை கொண்டது. ஒரு மணி 25 கிலோ எடை கொண்டது. இதுதவிர 36 பிடிமணிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மணிகள் அனைத்தும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு லாரி மூலம் அயோத்திக்கு அனுப்பப்பட்டன.

    இதில் 12 ஆலய மணிகளும் கோவில் பிரகாரத்தில் பொருத்தப்பட உள்ளது. கும்பாபிஷேகத்தின்போது தமிழகத்தின் இந்த மணிகள் அயோத்தியில் ஒலிக்கும்.

    மணியை தயாரித்தவர்கள் கூறும்போது, "இரும்பு கலக்காமல் முழுவதும் காப்பர், வெள்ளி, துத்தநாகம் ஆகியவற்றால் செய்யப்பட்டு உள்ளது" என்றனர்.

    ×